ஞான மொழிகள்- 84 (Post No.11,033)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,033

Date uploaded in London – –    20 JUNE 2022       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அந்த இன்ஜினீயர் தன் தொழில் புத்தியை குடும்ப விஷயத்திலும்

காட்டிட்டாருன்னு எப்படி சொல்லற?

தன் பையனுக்கு பெண்தேர்வு செய்ய டெண்டர் விட்டுட்டாரு!

xxx

என் தம்பியை எப்படியாவது வெளியே கொண்டு வர ஏற்பாடு

செய்யுங்க……

போலீஸ் (புருஷன்)சரி, சரி, எவ்வளவு மாமூல் குடுப்பே?

xxx

அப்பா , அப்பா, நாளேலேர்ந்து நம்ப பெரிய பணக்காரனாயிரலாம்!

எப்படி?

எங்க கணக்கு வாத்தியார் நாளைக்கு பைசாவ ரூபாயா மாத்தறது

எப்படின்னு சொல்லித்தரப்போறேன்னு சொல்லியிருக்கார்!

xxx

சலூன் கடைக்கார ர் – சாதா கட்டிங்கா, ஸ்பெஷல் கட்டிங்கா சார்?

வந்தவர் – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.

சலூன் – ஸ்பெஷல் கட்டிங்ன்னா ரத்தம் வராது!

xxx

இன்னைக்கு நம்ம டாக்டர் நாலு உயிர காப்பாதிட்டரு!

பரவாயில்லையே!

இன்னிக்கு நடக்க வேண்டிய நாலு ஆபரேஷனையும்

தள்ளி வச்சுட்டாரு!

xxx

சில வார்த்தைகள்………சில அர்த்தங்கள்!!!!

குழந்தை – தாயின்கர்ப்பபை என்னும்கோட்டைக்குள்ளே அரசனாக

இருந்தவன் வேற்று நாட்டில் பிச்சைக்காரனாக திரிந்து

கொண்டிருக்கிறான்!

நோய் – காலன் கதவைத்தட்டுகிறான்.இந்த முறை பிழைத்து விடுவேன்

இன்னொரு முறை வரச்சொன்னேன்.

கட்டில் – நீ செய்யும் அக்கிரமங்களை பூமா தேவி நேரடியாக பார்த்து

விடக்கூடாதென்று போட்டுக்கொண்ட திரை!

மேளம் – பொருள் ஒன்றுதான் வழி அனளுப்பிவைப்பது….. இடங்கள்தான்

வேறு வேறு!(திருமணம், சவ ஊர்வலம்)……

அடுக்கு டிபன் பாக்ஸ் – மேலே இருக்கும் தாழ்ப்பாளை எடுத்து விடுங்கள்.

நாங்கள் வேறே இடத்திற்குள் நுழைய வேண்டும்.

தயிர் – நேற்று வரை இளகிய மனத்துடன் இருந்த என்னை மோருடன்

என்னைக் கூட்டுச் சேர்த்தார்களோ அன்னற என் மனம் கல்லாகிவிட்டது!

அரிசி – எங்களை துவம்சம் செய்ய வந்த விரோதிகள்குழம்பும் ரசமும்,மோரும்!

வீடு -ஆயுட்கால தண்டனை!

குடும்பம் – எமர்ஜென்ஸி சித்திரவதை!

உற்றார் – நம் உணவை மொய்க்கும் ஈக்கள்!

பிள்ளைகள் – நாம் விட்டுச் செல் லும் ஞாபக சின்னங்கள்!

மனைவி – ஓர் இரவுப் பத்திரிக்கை!

xxxx

ஒரு இடத்திற்கு கிளம்புவதற்கு அதாவது “டிலே” ஆவதற்கு யார் காரணம்.?

“டிலே”யை திருப்பிப் போடுங்கள்………”லேடி”தான்காரணம்!

xxx

ஜப்பானில் 42 என்ற எண்ணுடைய ரூமுக்கு யாரும் போக மாட்டார்கள்.

42 என்ற எண் ராசியில்லாத எண்அவர்களுக்கு!

இங்கிலாந்துகார ர்களுக்கு ராசியான் எண் 3 !அதே நேரத்தில் இந்தியாவில்

எந்த காரியங்களுக்கும் மூவராகச் செல்வதில்லை!

xxx

செருப்பு – மழைகாலத்தில் சேற்றை அள்ளி வீசவும் வெயில்காலத்தில் “வார்”

அறுந்து மூலை யில் கடக்கும் அதிசயப் பொருள்!

கனவு – பிச்சைக்கார ர்களையும் மகாராஜாவாக்கும் மாயக்கண்ணாடி!

கண்ணாடி – பொறுமையின் சிகரம்!நம்முகத்தைப் பார்த்த பின்னும்

உடையாமல் இருப்பதே உதாரணம்!

ஓட்டல் – மனைவியிடம் கோபித்துக்கொள்ளும் கணவர்களின் தாய் வீடு!

சினிமா தியேட்டர் – மூட்டைப் பூச்சகளை இலவசமாக வழங்கும் தர்ம

ஸ்தாபனம்!

பஸ் – பாலங்களையும் விளக்கு கம்பங்களையும் இடிப்பதற்கு உருவான

புல் டோஸர்!

குழாய் – காற்று, பாம்பு, மீன்கள் வருவதற்கான சுரங்கப்பாதை!

மரக் கட்டில் – கொடுமை மிக்க குடும்ப சிறைச்சாலைக்கு அமைக்கப்பட்ட

்அலங்கார நுழை வாயில்!

அஹிம்சை – காந்தியுடன் சேர்த்து எரித்து விட்ட ஒன்று!

இன்ஷூயரன்ஸ் – நவீன சீதக்காதி!

உண்ணா விரதம் – நாட்டில் பலர் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா!

வீடு – ஒரு கௌரவ சிறைச் சாலை!

பொய் – அதிகமானவர்களின் தாய் மொழி!

கடவுள் – கஷ்டப்படும் போது மட்டுமே நினைக்கப் படுபவர்!

அனுபவம் – பல் விழுந்த பிறகு கரும்பு கிடைப்பது!

காதல் என்ற நடசத்திரத்தைப் பார்தது வியந்தபடி இடறி விழும்.

நிகழ்ச்சிக்குப் பெயர்தான் கல்யாணம்!

அந்தாதி!

தாசில்தார் – “தார்”ரோட்டில் நடந்து சென்றார்!

பூக்காரி -“காறி” த் துப்பினாள்!

டாக்டர் – “டர்” என்று மருந்து எழுதிய சீட்டைக் கிழித்தார்!

மாணவன் – “வன்”முறையில் ஈடுபடக்கூடாதென்று தலைவர் கூறினார்!

THE END

Tags- ஞான மொழிகள்– 84

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: