Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 11,040
Date uploaded in London – – 22 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான (கடி) மொழிகள்-86
டை கட்டிய மீன் எது?
கெண் “டை”!
அரசுக்கு பிடித்த மரம் எது?
அரச மரம்!
எப்போதும் காயத்துடனேயே இருக்கும்நபர் யார்?
“சகாயம்”!
உட்கார்ந்திருந்தால் பணம்! எப்படி?
சப் “பணம்” கட்டி உட்காரும் போது!
மனதுக்குள் ஒரு உடம்பு……..எது?
சந் “தேகம்”!
மனித உடம்பிலுள்ள பாலம் எது?
கபாலம்!
மந்திரி-மன்னா! எதிரி நாட்டு மன்னன் மகாராணியை நமது
குதிரையில் கடத்திக் கொண்டு போய்விட்டான!
மன்னர்-ஆ! என் செல்வம் போய் விட்டதே!
மந்திரி- மகாராணியைத்தானே செல்வம்என்கிறீர்கள்?
மன்னர்-ஊஹூம், எனது குதிரையை!
கடிகாரம் வைக்கும் பெட்டியை எப்படி அழைக்கலாம்?
“மணி பர்ஸ்”!
மான் எந்த இடங்களில் இருக்கும்?
“அந்த மான்”, வலங்கை “மான்”
கஷ்டத்தில் இருக்கும் பறவை எது?
“பஞ்ச” வர்ணக் கிளி!
கரை கண்ட வியாதி எது?
சர்க் “கரை” வியாதி்!
ஆவிக்கு பயப்படாதவர் யார்?
இட்லி சுடுபவர்!
xxx
சிப்பாய்-1 இனிமேல் நம் மன்னர் அந்தப்புரத்திற்கு போகவே முடியாது!
நமது ராணி தடை செய்து விட்டார்!
சிப்பாய்-2 அப்புறம் மன்னர் என்ன செய்தார்?
சிப்பாய்-1 அந்தப்புரத்திற்கு “நொந்தப் புரம்”என பெயர் மாற்றி விட்டார்!
xxx
பூனை 1 – அந்த மாடல் அழகி மேல் விழுந்து பிறாண்டி விட்டு
வருகிறாயே ஏன்?
பூனை 2- கேட் வாக் cat walk ங்கற பெயர்ல நம்மளோட நடையை கிண்டல்
பண்ணினாள்.அதான் கோபம் வந்து பிறாண்டிப்புட்டேன்!
xxx
நோயாளி- இந்த ஆபரேஷன் முடிஞ்சதும் என்ன பண்ணிவீங்க?
டாக்டர் -உங்களுக்கு அடுத்த ஆபரேஷனுக்கான தேதி குறிச்சிடுவோம்!
xxx
சிப்பாய்-1 போர் முரசு ஒலிக்கிறதே! நமது மன்னர் போருக்கு போக ஆயத்தமாகிறாரா?
சிப்பாய் 2 இல்லை இல்லை,மகாராணியும் அவரது மரு மகளும் சண்டை போடப் போகிறார்களாம்! அதான் இப்படி!
Xxx
நிறைய சொத்துள்ள நாடு எது?
“ஆஸ்தி”ரேலியா!
எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டிருப்பவர்கள் எந்த நாட்டில்?
“சிரியா”!
வாய் உள்ள தீவு எது?
ஹ”வாய்”!
ஒரு மனிதன் தனக்குத்தானே தூண்டில் போட்டுக் கொள்ளும் நாள் எது?
“கல்யாண நாள்”!
உபயோகிக்க உபயோகிக்க கூர்மை அதிகமாவது எது?
வாயிலுள்ள “நாக்கு”!
மோசமான கையெழுத்துக்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா?
“டாக்டர்களின் வியாதி”!
தையல்கார்ருக்கு பிடித்த காய் எது?
“கத்தரி”க்காய்!
புண்ணியம் செய்யாத காய் எது?
“பாவ”க்காய்
கோயம்புத்தூர்கார ர்களுக்கு பிடித்த காய் எது?
“கோவை”க்காய்!
சமையலுக்கு உதவாத காய் எது?
“சொக்காய்”!
ரௌடிகளுக்கு பிடித்த பூ எது?
“காலி” பிளவர்!
இரக்கமுள்ள கிழங்கு எது? 45
“கருணை” கிழங்கு!
வழிகாட்டும் காய்?
பீட் “ரூட்”
குத்தும் கிழங்கு எது?
“முள்”ளங்கி!
புண்ணானது எது?
வெங் “காயம்”
நவ கிரகத்தில் ஒன்று எது?
பூ “சனி”க்காய்!
மயக்கும் பழம்?
மாதுளம் பழம்!
கொய்தபின் பொய்யான பெயருடைய் பழம்?
கொய்யாப் பழம்!
கதை-சரித்திரம்-சமூகம் அடங்கிய பழம்?
“நாவல்” பழம்!
எந்த ஊருக்கு சொந்தம்?
கோவைப் பழம்!
சாப்பிட்டால் குமட்டும் பழம்?
குமுட்டிப் பழம்!
ராமருக்கு பிடிச்ச பழம்?
சீதாப் பழம்!
போதைப்பழம்?
சாத்துக் “குடி”
கணக்கு பழம்?
ஆரஞ்சு!
xxx
பேச்சோ பேச்சு
மளிகை கடைக்காரர் – கலப்படமான பேச்சு
வெண்ணெய் கடைக்காரர் – உருக்கமான பேச்சு
துணிக் கடைக்காரர்- அளவான பேச்சு
எண்ணெய்கடைக்காரர்-வழ வழா கொழ கொழா பேச்சு
கம்ப்யூட்டரிஸ்ட் -பட படப்பான பேச்சு
விறகு கடைக்காரர் – வெட்டு ஒண்ணு , துண்டு இரண்டாக பேச்சு
பொற்கொல்லர் – உருக்கமாக இருக்கும
கல்லறை காவலர் – அடக்கமாக இருக்கும்
எப்போதும் நாத ஒலி கேட்கும் நகர் எது?
“ஷெனாய்” நகர்!
சென்னையில் இருமலை போக்கும் ரோடு எது?
“ஹால்ஸ்” ரோடு!
சென்னையில் எப்போதும் நிழலாக இருக்கும் ரோடு எது?
“உட்ஸ்” ரோடு!
Xxx
டாக்டரிடம் நோயாளிகள்
சமையல் காரர் – வயிற்று வலி!
காதல் கதை எழுதுபவர் – இதய நோய்!
வக்கீல் – வாதம்!
சங்கீத விமர்சகர் – காது வலி!
xxx
“R” ங்கறதர ரேஷன் கடைன்னு சொல்லலாம்……
எப்படி?
அதுக்கு முன்னாடி “Q” இருக்கே!
Xxx
ஏய் , வாயை ஊது…..?………
ஊ…….
என்ன லேசா வருது?……
எட்டணாவுக்கு அவ்ளோதான் வரும்!
THE END
Tags- ஞான மொழிகள்–86