கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 3 (Post No.11,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,045

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 3

கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில்  எழுதிய ராஜதரங்கிணி நூலில் காணப்படும் மேலும் பல அதிசய விஷயங்கள்:-

ராஜதரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலில் சுமார் 8000 ஸ்லோகங்கள் உள்ளன .

இதோ மேலும் சில அதிசயச் செய்திகள்:

இரண்டாவது கோனந்தன் , யசோவதி என்னும் ராணிக்கு மகனாகப் பிறந்தான். அப் போது கிருஷ்ணர் சொன்ன , மேற் கோள்காட்டிய புராண ஸ்லோகம்: ‘காஷ்மீர் என்னும் தேசம் பார்வதி தேவி; அதனுடைய அரசன் சிவபெருமானின் ஒரு பாகம்’.அந்த அ ரசன் கெட்டவனாக இருந்தாலும் , ஆசீர்வாதம் பெற விரும்பும் எந்த அறிஞனும், மன்னரை அலட்சியப்படுத்தக்கூடாது – 1-72

xxx

முதலாவது அபிமன்யு மன்னர் ஆனபோது, சந்திராசார்யா என்பவர் பதஞ்சலி முனிவரின் மஹாபாஷ்ய இலக்கணத்தைப் பரப்பினார் (பாணினி மஹரிஷியின் அஷ்டாத்யாயீ இலக்கணத்தின் மீது எழுந்த பேருரை மஹாபாஷ்யம் ஆகும்) – 1-176

ஜெயபீட என்னும் மன்னரும் மஹாபாஷ்ய உரையைப் பரப்பியதாக 4-488 ஸ்லோகம் கூறுகிறது

இந்த இடத்தில் ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆர்.எஸ். பண்டிட் வேறு ஒரு விஷயத்தையும் அடிக்குறிப்பில் சேர்த்துள்ளார்.

ஜைன் அல் அப்தின் என்ற காஷ்மீர் மன்னரும் சம்ஸ்க்ருதம் கற்பதில் ஆர்வம் செலுத்தினார். அப்போது ராமானந்தா என்பவர் மஹாபாஷ்ய  நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்தக்காலத்தில் யுத்தபட்ட என்பவர் அதர்வண வேதம் படிப்பதற்காக மஹாராஷ்டிரத்துக்குச் சென்றார். அதர்வ வேதத்தை காஷ்மீரில் பரப்ப வேண்டும் என்பதற்காக அவரை காஷ்மீருக்குத் திரும்பிவரும்படி தலைமை நீதிபதி சீர்யபட்ட மூலம் தூண்டினார். இதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் தட்சிண தேசம் எங்கும் அதர்வண வேத ஓலைச் சுவடிகள் இல்லாததால்  எஸ் . பி. பண்டிட் என்பவர் காஷ்மீர் சுவடிகளைக் கொண்டு அதர்வண வேதத்தை எழுத்தில் வடித்தார். ஒரு முஸ்லீம் மன்னரின் சம்ஸ்க்ருத ஆர்வத்தால் அதர்வண வேதம் நமக்கு நூலாகக் கிடைத்தது.(அதர்வண வேதத்தை வாய்மொழியாகக் கற்று பரப்பியவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவே.

Xxx

ஹர்ஷ என்ற காஷ்மீரி மன்னன், கர்நாடக மன்னன் பர்மாந்தியின் மனைவியின் படத்தைப் பார்த்து அவள் மீது காதல் கொண்டான்.அந்த முட்டாள் மன்னரின் ஆசைக்கு அடிவருடிகள் தூபம் போட்டனர். அவளை அடைந்தே தீருவேன் என்றும் பர்மாந்தியை தோற்கடிப்பேன் என்றும் அரசவையில் வெட்கமில்லாமல் அறிவித்தான் 7-1119

xxx

மன்னர் தோல்வி அடைந்தவுடன், வசந்தலேகா தலைமையில் 70 ராணிகள் அவர்களுடைய மருமகள்களுடன் தீப்புகுந்து உயிர்த் தியாகம் செய்தனர்  ஆகாய கங்கை தீப்பிடித்து கொதித்தால் எவ்வளவு சப்தம் எழுமோ அந்த அளவுக்கு  அவர்கள் எரியும் சப்தமும் எழுந்தது. அதைப் பார்த்த மன்னர் முனிவர்கள் சொன்ன ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் முனுமுனுத்தான் –“மக்களை துன் புறுத்தி , கொடுமைகள் இழைத்த போது எழுந்த தீயானது அந்த அரசனின் உயிர், உடைமை, வம்சத்தை அடியோடு அழித்துச் சாம்பலாக்கும் வரை அணையாது “

7-1578 – 1582

இந்த ஸ்லோகம் பஞ்ச தந்திரம் , யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி ஆகியவற்றிலும் உளது.

xxx

ஒப்பிடுக -குறள் :

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்

சூழாது செய்யும் அரசு -554

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை -555

Xxx

நாடகம் பார்ப்பவர்கள், மழை வந்தவுடன் சிதறி ஓடுவது போல, ஹர்சனின் படைகள் சிதறி ஓடின 7-1606 (அந்தக் காலத்தில் திறந்த வெளி அரங்கில் நாடக மேடை அமைத்து நாடகம் நடத்தியது தெரிகிறது

xxx

மன்னன் ப்ரவரசேனரின் பக்தியை மெச்சி , மேற்கு நோக்கியிருந்த ‘விநாயக பூமி சுவாமி’, தானாகவே கிழக்கு நோக்கித் திரும்பினார் 3-352

xxx

பஞ்ச ஜனங்களை ஆண்ட மன்னன், ஸ்ரீ என்ற பெயருள்ள 5 தேவி கோவில்களை உருவாக்கினான் . பஞ்ச ஜனாஹா – 5 வகை குழுக்கள் – என்ற சொற்றொடர்  ரிக் வேதம் முழுதும் வருகிறது இதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதும் அவைகளுக்கு உறுதியான ஆதாரம் ஏதுமில்லை 3-353

xxx

சோழர்களின் மன்னரான ரதிசேனன் , கடல் வழிபாடு செய்தபோது, தேவி தோன்றினாள்.அவளுடைய புனிதத் தன்மையை அறிந்த சோழன், அவளை  மணம் முடிக்கவந்த எல்லோருக்கும் முடியாது என்றே சொல்லி அனுப்பினான். ரணாதித்யா என்ற மன்னரின் அமைச்சர்களும் பெண் கேட்டு வந்தனர். மன்னர் மறுத்தபோதும் தேவியே தனக்கு உகந்தவர் அந்த மன்னரே என்று சொல்லி கயல்யாணம் செய்துகொண்டாள்.

(இப்படி ஒரு சோழ  மன்னரின் கதை வேறு எங்கும் இல்லை ; ஆயினும் மணிமேகலை முதலியவற்றில் வரும்  செய்திகளை ஒப்பிட்டு ஆராய வேண்டும் .3-432

Xxx

லலிதாதித்யா என்ற மன்னன்,  கர்நாடகத்தின் மீது படையெடுத்தான். அக்காலத்தில் ரத்தா என்ற லாகிய ராணியின் புகழ் எங்கும் பரவி இருந்தது. அவளுடைய சக்தி துர்கா தேவி போல எங்கும் பரவியது. அவளும் லலிதா தித்யாவுக்கு அடிபணிந்தாள் . அவனுடைய படைகள் காவிரி நதி தீரத்தில் பனம் கள்ளை சுவைத்து மகிழ்ந்தன. அவன் 7 கொங்கண  தேசங்களையும் வென்றான்.4-152 முதல் ஸ்லோகங்கள்

அடிக்குறிப்பில் ரத்தா என்பது ராஷ்டிரகூட வம்ச ராணி என்றும் ‘நாரி கேர சுரா’ என்பது தென்னை மரக் கள் என்றும் உள்ளது. 7 கொங்கண தேசங்கள் என்பன – கேரளா , துலுங்க (தெலுங்கு தேசம்??), கொங்கணம், கோவராஷ்ட்ர (கோவா), கேராதஹ , வரலத்த, பெர்பெரா என்று அடிக்குறிப்பு கூறுகிறது

xxx

4-169

காளிதாசன் கவிதைகளில் உள்ளது போலவே குகைகளில் உள்ள ‘ஒளிவிடும் தாவரங்கள்’ பற்றிக் கல்ஹணரும் பேசுகிறார் .4-169; 8-1216; 8-2388. இதை சந்திர ஒளி அளிப்பதாகவும் கூறுகிறார்.(நியூசிலாந்து குகைகளில் உள்ள மின்மினிப் பூச்சிகள் இவ்வாறு ஒளிவீசுவது பி.பி.சி.டாக்குமென்டரியில் காட்டப்பட்டது. ஒருவேளை அந்தக் காலத்தில் சிலவகை மரங்களில் மின்மினிப் பூச்சிகள் வசித்திருக்கலாம்)

Xxx

பெண்களே ஆட்சி செய்யும் ஸ்த்ரீ ராஜ்யம் பற்றி கல்ஹணர் குறிப்பிடுகிறார் 4-173. கிரேக்கர்கள் இவர்களை அமேஸான் என்பர்; அதாவது வில் உபயோகத்துக்காக ஒரு முலையை வெட்டி எரிந்தவர்கள். இவர்களை பற்றி பாணினி, மஹாபாரதம், வராஹ மிஹிரரின் பிருஹத் ஸம்ஹிதாவும் குறிப்பிடுகின்றனர். பாண்டிய நாட்டை ஆண்ட மீனாட்சி பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னரே மெகஸ்தனீசும் எழுதிவைத்துள்ளார் .

Xxx

தோல்வியுற்ற நாடுகளின் மக்களை அவமானப்படுத்த மன்னர், ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தான். துருக்கியர்களை தலை மயிரை பாதி சிறைத்துக்கொள்ள  வேண்டும் என்றும்  தெற்கத்திய மக்களை வேட்டியின் பின்னால் ஒரு வாலை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவி ட்டான் .4-180

xxx

ஸ்த்ரீ ராஜ்யத்தில் மன்னன் ஒரு நரஹரி உருவத்தை காந்தம் மூலமாக அந்தரத்தில் தொங்கவிட்டான் . மேலே ஒரு காந்தத்தையும்  கீழே ஒரு காந்தத்தையும்  தொங்கவிட்டு இப்படிச் செய்தான் 4-185

Xxx subham xxxx

Tags-  ஸ்த்ரீ ராஜ்யம், காந்தம், ஒளிவிடும் தாவரங்கள், கல்ஹணர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: