ஞானமொழிகள்-87 (Post No.11,044)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,044

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-87

எல்லா வண்ணங்களை விட, நீலம்தான் உயர்ந்தது.ஏனென்றால்

எல்லாவண்ணங்களுக்கும் வேறொரு பெயரும் ஒட்டி வரும்.ஆனால்

நீலத்திற்கு அப்படி வராது்.

வெள்ளை – வெள்ளை வெளேரென்று……

மஞ்சள் -மஞ்ச மஞ்ஜேளென்று…….

கருமை- கன்னங்கரேலென்று…….

பச்சை – பச்சைப் பசேலென்று………

நீலம் – ………???

xxx

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!

“ஆரியக்கூத்தாடினாலும் “ இல்லை “யார் கூத்தாடினாலும்” என்பதுதான்

சரி! நீடாமங்கலம் கிருஷ்ண மூர்த்தி பாகவதர்.

xxx

வம்பு பேசுகிறவனின் வாய் சைத்தானின் தபால் பை!

நம்கௌரவம் நம் நாக்கின் நுனியில் இருக்கிறது!

வேறொருவனிடம் சொல்ல விரும்புவதை முதலில் உனக்குச் சொல்லிப்பார்!

காரியங்களில் கடினமானது நமக்கு மிக நன்றாக தெரிந்தவருக்கு

சிபாரிசு கடிதம் கொடுப்பது!

சாவு நடந்த இடத்தில் இரண்டு கழுதைகளை பார்க்க

முடியும்?

ASS ASS ination நடந்த இடத்தில்!

அகராதி –

கஞ்சன்- நேரத்தை மிச்சப் படுத்த கடிகாரத்தை நிறுத்தி வைப்பவன்!

முட்டாள் – இரண்டு அர்த்தம் தொனிக்கும் ஜோக்குகளில் முதல் அர்த்தமே புரியாதவன்!

xxx

திருச்சியில் பகல் பள்ளிக்கூடம் இடையாதாம்…….

ஏன்?

திருச்சி “ராப்பள்ளி ஆயிற்றே”!

xxx

1)அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2)அணில் ஏறாத் கொம்பு எந்த கொம்பு?

3)அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாத்து எது?

4)அன்றாடம் மலரும் பூ, அனைவரையும் கவரும் பூ,

விரல்களில் பிறக்கும் பூ, விதம் விதமான் பூ எது?

5)ஆண்டாண்டு பிறக்கும் வரி,அடுத்தடுத்து வரும்வரி எ வை?

  1. இரவல் கிடைக்காதது……இரவில் கிடைப்பது எது?
  2. உச்சியில் பூக்கும் பூ எது?
  3. உள்ளங்கை மூக்கனார்,கழுத்தில்லா குயவர், பல்லிலா நாக்கனார்
  4. யார், யார் ?

விடைகள் – 1) வாழைப்பூ 2)மாட்டு கொம்பு3)காற்று4)கோலம்

  1. ஐனவரி, பிப்ரவரி6)தூக்கம்7)தாழம்பூ8)யானை,நண்டு,மணி

xxxx

நிலவை அளந்த மனிதன் பெண்ணின் மனதை அளப்பது எப்படி?

பவுன் சங்கிலியால்!

அளவில்லா செல்வம் பெற்று விளங்கும் சாதாரண மனிதன் ஏராளமான பொருட் செலவில் தான் உறைய அரண்மனை கட்டுவான்!

ஆனால் மா மன்னன் ராஜ ராஜனோ அரண் மனை கட்டாமல்

“அரன்”மனை கட்டினான் சிவனுக்கு!

xxx

குமர குருபரர் பாடிய மீனாட்சியம்மன் பிள்ளை தமிழின்” பா”வாடை

கேட்டு “பாவாடையுடன்” வந்து மன்னர் திருமலை மடியில் அமர்ந்து

கேட்டாள் மீனாட்சியம்மை!

xxx

என்ன? பி. காம் படிச்சிட்டு பிச்சைக்காரன் கிட்ட வேலைக்கு

சேர்ந்திருக்கையா? அப்படி என்ன வேலையடா அவன் கிட்ட?

வர்ர சில்லறையை ரகம் வாரியா பிரிச்சு பாங்குக்கு எடுத்துட்டு

போறதுதான் வேலை!

xxxx

மூலிகைச் செடிகளில் ஒன்று “ஆடா தோடை” உண்மையல் அதன்

பெயர் “ஆடு தொடா”……அதாவது ஆடுகள் தின்னாத இலை!

xxx

மலர்களில் ஒன்றான செண்பக மலருக்கு “வண்டுணா” என்று ஒரு

பயர் உண்டு! ஏனென்றால் செண்பக மலரை எந்த வண்டு  இ னமும்

நாடாது!

xxx

கேட்க இனிமையானது தெலுங்கு

வணிகத்திற்கு ஆங்கிலம்,

நட்பிற்கு ரஷிய மொழி,

காதலுக்கு பிரஞ்சு மொழி,

அன்புக்கு தமிழ் மொழி!

Xxx

சில ஆங்கில வார்த்தைகள் விபரீதமாக மொழி பெயர்க்கப் படுகின்றன.

உதாரணமாக “பார்பர்ஸ் பிரிட்ஜ்” அம்பட்டன் வாராவதி என்பது போல….

“CINEMA FANS”….. என்ற பெயர் “FANATICS”என்ன சொல்லிலிருந்து

வந்ததுதான் “FANS”…….இதை அப்படியே தமிழாக்கம் செய்து “விசிறிகள்” என்று மாற்றி விட்டார்கள்!

xxx

விசாரணை அதிகாரி – உன புருசன் பேரு என்னம்மா?

பெண்மணி – இக்கரைக்கு அக்கரை

வி. அஅதிகாரி – ஓ…. பச்சையா… சரி …உன்பேரு என்னம்மா?

பெண்மணி – மூத்தோர் சொல் வார்த்தை

வி்.அதிகாரி -ஓ… அமிர்தமா….! உன் அப்பா பேர் என்ன?

பெண்மணி – மொட்டை போடும் முருகன் சாமி!

வி.அதிகாரி – அதையாவது “பழனி”ன்னு சொல்லாமில்லையா?

பெண்மணி – ஒரு மருவாதி தான்!

xxx

தூங்கிக்கொண்டிருக்கிறவர்களிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்தால்

அவர்தான் “பேராசிரியர்”

குழந்தைகளும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே பாஷை “புன்சிரிப்பு”.

மாத்திரையை கண்டுபிடித்தவன் புத்திசாலி!

அதன் மேல் சர்க்கரையை தடவியவன் மேதை!

xxxx

அந்த வீட்ல ஒரு போர்டு தொங்கது பாத்தியா?

P.R. அர்ஜுன லிங்கம் V.M ன்னு

V M ன்னு ஒரு டிகிரி இருக்கா?

அட கடவுளே ! V.M ன்னா “வீட்டோட மாப்பிள்ளை”ன்னு அர்த்தம்!

xxxx

ஏம்ப்பா, ரேஷன் கடையிலே ஒரே “கவர்ச்சி” படமா மாட்டிருக்கே?

கடைக்கு வரவங்க ரேஷன் வாங்கும்போது தராசையே பாக்குறாங்க

அதான்!

Xxx

அந்த டாக்டர் கண்டிப்பா போலிதான்…..

எப்படி சொல்லறே?

பிறந்ததுலிருந்து எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொன்னேன்.

அதற்கு அந்த டாக்டர் அதனாலென்ன ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணி அதை எடுத்டுவோம் ன்னு சொல்றார்! 70

THE END

Tags-  ஞானமொழிகள்-87

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: