செப்பு மொழி இருபது! (Post No11,046)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,046

Date uploaded in London – –    24 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபது!

ச.நாகராஜன்

 1. எனது மனைவி தான் உலகில் அற்புதமான பெண்மணி – இது எனது அபிப்ராயமில்லை – எனது மனைவியினுடையது.
 2. தன் கணவ்ன் எங்கே இருக்கிறான் என்று எப்போதுமே அறிந்திருக்கும் ஒரு பெண்மணியை என்னவென்று நீங்கள் சொல்வீர்கள்?

ஒரு விதவை என்று!

 • எனது மனைவி என்னை எல்லா விஷயங்களிலும் அனாவசியமாகத் தலையிடுபவன்  என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள். குறைந்தபட்சம் அதை அவள் அந்தரங்க டயரியிலாவது எழுதி வைத்திருக்கிறாள்.  – ட்ரேக் சதர்
 • ஒரு சின்ன அறிவுரை – ஒருபோதும் அதை எவருக்கும் வழங்காதீர்கள்! – ஏ.ஜே. வோலிகாஸ்
 • கல்லூரிக்குச் சென்று ஒருபோதும் திரும்பி வராதவர்களை

புரபஸர் என்று சொல்கிறோம்.

 • வாழ்க்கை வாழ்வதற்குரிய ஒன்று தானா? அது ‘லிவரை’ப் பொறுத்து இருக்கிறது!
 • ரஷியாவிற்கு எங்கள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நாங்கள் திரும்பி வந்து விட்டோம். – பாப் ஹோப்
 • எதிர்காலத்தைப் பற்றி எப்போதுமே நான் நினைப்பதில்லை. அது சீக்கிரமே வந்து விடுகிறது. – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 • ஒரு நல்ல சொற்பொழிவு என்பது ஒரு பெண்ணின் ஸ்கர்ட் போல! விஷயத்தை கவர் செய்யும்படி போதுமான அளவு நீண்டிருக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டிவிடும் வகையில் சின்னதாக இருக்க வேண்டும்.
 • ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஏன்  இணைந்து செல்லக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை. கம்ப்யூட்டரை வைத்து உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் ஏன் எண்ணக்கூடாது?    ராபர்ட் ஆர்பென்
 •  அவன் நிஜமாகவே ஒரு வெற்றிகரமான மனிதன் தான் – அதை அவன் மாமியாரே கூட ஒத்துக் கொள்கிறார்.  -எல்மர் பாஸ்தா
 •  திருமணம் என்ற ஒரே ஒரு போரில் மட்டும் தான் ஒருவன் எதிரியுடன் படுத்துக் கொள்கிறான். – மெக்ஸிகோவின் பழமொழி – நெட் ஷெரின் – கட்டிங் எட்ஜ் (1984)
 •  விசுவாசமாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்து நீ எஜமானனாக (BOSS ஆக) ஆகி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கலாம்.  ராபர்ட் ஃப்ராஸ்ட் (1874-1963) அமெரிக்க கவிஞர்
 •  கடுமையான உழைப்பு யாரையும் கொன்று விடாது என்பது உண்மை தான், என்றாலும் எதற்காக ஒரு சான்ஸ் எடுக்க வேண்டும்?  ரொனால்ட் ரீகன் – 31-3-1987 அன்று கார்டியன் பேட்டியில் கூறியது
 •  போர் என்பது அமெரிக்கர்களுக்கு பூகோளத்தைக் கற்பிக்க கடவுளின் வழியாகும். (கூறியது யார் என்று சரியாகத் தெரியவில்லை. அம்ப்ரோஸ் பியர்ஸாக இருக்கலாம்)
 •  ஜோதிடக் கணிப்பு என்பது கஷ்டமான ஒன்று – அதுவும் எதிர்காலம் பற்றியதாக இருந்தால். – நீல்ஸ் போர் 1885-1962 இயற்பியல் விஞ்ஞானி
 •  தூரத்திலிருந்து செயல்பட முடியும் என்று நம்புபவர்கள் என் கையைத் தூக்குங்கள் – யாரோ குர்ட் வான்னகட் சொன்னதாக நம்பப்படுகிறது
 •  பரவாயில்லை. செத்த பறவை கூட்டை விட்டுக் கிளம்பாது – வின்ஸ்டன் சர்ச்சிலிடம் அவரது பட்டன் சரியாக இல்லை என்று சொன்ன போது அவர் கூறியது -5-1-1957இல்  ஜார்ஜ் லிட்டல்டனுக்கு ரூபர்ட் ஹார்ட் டேவிஸ் எழுதிய கடிதம்
 •  எனக்கு நீண்ட ஆயுள் எதனால் என்று எதைக் குறிப்பிட்டுச் சொல்வது. துரதிர்ஷ்டம்! – க்வென்டின் க்ரிஸ்ப் – ஆங்கில எழுத்தாளர் – 1909-1999 – ஸ்பெக்டேடர் 20-11-1999
 • வங்கி என்பது உனக்கு நிச்சயம் கடன் தேவை இல்லை என்று நீ நிரூபிக்கும் பட்சத்தில் உனக்குப் பணத்தைக் கடனாகக் கொடுக்கும் ஒன்று – பாப் ஹோப் 1903-2003 அமெரிக்க நகைச்சுவையாளர் ஆலன் ஹாரிங்டன் – லைஃப் இன் தி கிரிஸ்டல் போலஸ் 1959

இதோ ஆங்கில மூலம் :-

My wife is the most wonderful woman in the world, and that’s not my opinion – it’s hers.

What do you call a woman who knows where her husband is at all times?  A Widow.

My wife thinks I’, too nosy. At least  that’s what she wrtes in her diary. – Drake Sather

A word of advice, don’t give it. – A.J. Volicos

Those who go to college and never get out are called professors.

Is life worth living? That depends on the liver.

We had a very successful trip to Russia… We got back.    Bop Hope

I never think of the future. It comes soon enough. – Albert Einstein

A good speech, like a womna’s skirt should be long enough to cover the subject and short enough to create interest.

I don’t see why religion and science can’t  get along.  What’s wrong with counting our blessings with a computer? Robert Orben.

He must be a big success – even his mother-in-law adimits it.  – Elmer Pasta

Marriage is the only war where one sleeps with the enemy.  – Anonymous Mexican saying Ned Sherrin Cutting Edge (1984)

By working faithfully eight hours a day, you may eventually get to be a boss and work twelve hours a day. Robert Frost 1874-1963 American Poet

It’s true hard work never killed anybody, but I figure why take the chance? Ronald Reagan 1911-2004  9Interfview in Guardian 31-3-1987

War is God’s way of teaching, Americans Geography. (Anonymous widely attributed to Ambrose Bierce, but not found before the early 1990s)

Predictions can be very difficult …. Especially about the future.  Niels Bohr – 1885-1962

Danish physicist

Those who believe  in telekinesis, raise my hand. Anonymous modern saying, sometimes  associated with the writer Kurt Vonnergut

No matter. The dead bird does not leave the nest. (It was pointed out to the aged Winston Churchill tha this fly-buttn was undone:   (Winston Churchill 1874-1965 – British Conswervative Statesman  Rubert Hart Davis letter to George Lyttelton, January 5, 1957)

To what do I attribute my  longevity? Bad luck – Quendtin Crisp 1908- 1999 English Writer: In Spectator 20 Novemer 1999

A bank is a place that will lend you money if you can prove that you don’t need it. Bop Hope, American Comedian, Alan Haarington Life in the Crystal Polace – 1959

***

tags- செப்பு மொழி, இருபது,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: