
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,048
Date uploaded in London – – 25 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
செப்பு மொழிகள் இருபத்தொன்று!
ச.நாகராஜன்
- Statistics are like a bikini. What they reveal is suggestive, but what they conceal is vital.
Aaron Levenstein 1911-1986 American Academic attributed
புள்ளி விவரம் ஒரு பிகினியைப் போன்றது. அது காட்டுவது ஊகத்திற்கு உட்பட்டது. அது மறைத்திருப்பதோ முக்கியமானது!
- Asked what it was like to kiss Marylene Manroe : It is like kissing Hitler!
Tony Curtis -1925-2010 American Actor
மர்லின் மன்ரோவை முத்தமிடும் போது எப்படி இருந்தது என்று அமெரிக்க நடிகர் டோனி கர்டிஸைக் கேட்ட போது அவர் கூறியது:
“ஹிட்லரை முத்தமிடுவது போல இருந்தது!”
- During the making of Lifeboat in 1944, Mary Anderson asked Hitchcock what he thought her ‘best side’ for photography was : ‘My dear, you are sitting on it’.
Alfred Hitchcock 1899-1980 British born film Director
ஹிட்ச்காக்கை மேரி ஆண்டர்ஸன் லைஃப் போட் என்ற படத்தை எடுக்கும் போது, ‘போட்டோ எடுக்கும் போது தனது அருமையான அங்கம் எது’ என்று கேட்டார்.
உடனே ஹிட்ச்காக், “டியர், அதன் மீது தான் நீ உட்கார்ந்திருக்கிறாய்!” என்றார்.
- I have not failed. I have just found 10000 ways that won’t work.
Thomas Alva Edison, 1847-1931 American Inventor
அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிஸன் கூறினார் : “நான் தோல்வி அடையவில்லை. செயல்படாத 10000 வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவு தான்”
- There cannot be a crisis next week. My schedule is already full.
Henry Kissinger B: 27-5-1923- American Politician
“வரும் வாரம் ஒரு நெருக்கடியும் ஏற்படாது. வரும் வாரத்திற்கான எனது ஷெட்யூல் ஏற்கனவே முடிந்து விட்டது” என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர்!
- Cricket is basically baseball on valium.
Robin Williams 1951-2014 American Actor
வாலியம் போட்டுக் கொண்டு பேஸ் பால் ஆடினால் அது தான் கிரிக்கட்!
- The covers of this book is too far apart!
Ambrose Bierce 1842-1914 American Writer
இந்த புத்தகத்தின் முன் அட்டையும் பின் அட்டையும் வெகு தூரத்தில் இருக்கிறது!
- Biography should be written by an acute enemy.
Arthur James Balfour 1848-1930 British Conservative Statesman
வாழ்க்கைச் சரித்திரம் ஒரு கடும் எதிரியால் தான் எழுதப்பட வேண்டும்!
- The Art of Biography
Is different from Geography
Geography about maps
Biography about Chaps.
Edmund Clerihew Bentley 1875-1956 English Writer
வாழ்க்கைச் சரித்திரம்
பூகோளத்தை விட வித்தியாசமானது
பூகோளம் வரைபடம் சம்பந்தமானது
வாழ்க்கைச் சரித்திரமோ ஆட்களைப் பற்றியது!
10) You may easily play a joke on a man who likes to argue – agree with him!
E.W.Howe 1853-1937 American Novelist
எப்போதும் எதைப் பற்றியும் விவாதித்துக் கொண்டே இருப்பவரைத் தோற்கடிக்க ஒரு வழி உள்ளது; ஏற்அவர் சொல்வதை உடனடியாக ஆமோதிப்பது தான் அது!
- Age is a question of mind over matter.
If you don’t mind, it doesn’t matter.
Leroy (‘Satchel’) Palge 1906-1982 American Baseball Player
வயது என்பது அந்த மேட்டரைப் பற்றி மைண்ட் கூறுவது;
அதை மைண்ட் செய்யவில்லை எனில் அது மேட்டரே இல்லை!
- For an actress to be a success, she must have the face of a Venus,
The brains of a Minerva,
The grace of Terpsichore,
The memory of Macaulay,
The figure of Juno,
And the hide of a rhinoceros.
Ethel Barrymore 1879-1959. American Actress
ஒரு நடிகை வெற்றிகரமானவளாக இருக்க வேண்டுமெனில்
அவளுக்கு வீனஸ் போன்ற முகமும்
மினர்வாவின் மூளையும்
டெர்ப்சிசோரின் நளினமும்
மெக்காலேயின் நினைவாற்றலும்
ஜுனோவின் எழிலும்
ரினோசெரஸின் ஒளிந்திருக்கும் தன்மையும்
வேண்டும்.
பிரபல நடிகை ஈதல் பாரிமோர் கூறியது
13) Now my own suspicion is that the universe is not only queerer that we suppose, but queerer than we can suppose!
J.B.S.Haldane 1892- 1964 Scottish Mathematical Biologist
பிரபஞ்சம் நாம் நினைத்ததை விட விசித்திரமானது ஆனால் எனது சந்தேகம் என்னெவெனில் அது நாம் நினைக்க முடிவதை விட இன்னும் விசித்திரமானது!
14) Every woman should have four pets to her life: a mink in her closet; a Jaguar in her garage, a tiger in her bed and a Jackass who pays for everything.
Paris Hilton 1981- American Heiress
ஒவ்வொரு பெண்மணியும் நான்கு செல்லப்பிராணிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
அலமாரியில் ஒரு நரி, காரேஜில் ஒரு சிறுத்தை, படுக்கையில் ஒரு புலி, அனைத்திற்கும் பணம் கொடுக்க ஒரு ஆண் கழுதை!
15) An atheist is a man who has no invisible means of support.
John Buchan 1875-1940 Scottish Novelist
ஒரு நாத்திகன் என்பவன் மறைமுக ஆதரவு இல்லாத ஒருவன்!
16) Thanks to God; I am still an atheist.
Luis Bunuel 1900-1983 Spanish Film Director
கடவுளுக்கு நன்றி! நான் இன்னும் ஒரு நாத்திகனாகவே இருக்கிறேன்!
17) Atheism is a non-prophet organization
George Carlin 1937-2008 American Comedian
நாத்திகம் என்பது லாபமில்லாத (தீர்க்கதரிசி இல்லாத) ஒரு நிறுவனம்!
18) Every woman should marry an archaeologist because she grows increasingly attractive to him as she grows increasingly to resemble a ruin.
Agatha Christie 1890-1976 English Writer
ஒவ்வொரு பெண்மணியும் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளரைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். நாள் ஆக ஆக அவள் அவனுக்கு கவர்ச்சியாக இருப்பதோடு இன்னும் அதிக வருடம் ஆகும் போது சிதிலமடைந்த ஒரு பழைய காட்சிப் பொருள் போல இருப்பாள்!
19) Mark Twain about Heaven and Hell
I have friends in both places.
Mark Twain 1835-1910 American Writer
மார்க் ட்வெயின் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிக் கூறினார் இப்படி; “எனக்கு அந்த இரண்டிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்!”
20) Twenty-four hour room service generally refers to the length of time that it takes for the club sandwich to arrive.
Fran Lebowitz 1946- American writer
24 மணி நேர ரூம் சேவை என்பது நமக்கு க்ளப்பில் சேண்ட்விச் வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொதுவாகக் குறிப்பிடும் ஒன்றாகும்.
21) There was a young lady named Bright,
Whose speed was far faster than light,
She set out one day,
In a relative way,
And returned on the previous night.
Arthur Buller 1874-1944 British Botanist and mycologist
அந்த இளம் பெண்ணின் பெயர் ப்ரைட்
அவளது வேகமோ லைட் – ஒளியை விட அதிகம்!
அவள் ஒரு நாள் கிளம்பினாள்
ஒப்புவமைத் தத்துவத்தின் படி!
விளைவு,
தான் கிளம்பிய இடத்திற்கு முதல் நாள் இரவே வந்து சேர்ந்து விட்டாள்!
All quotations from Oxford Dictionary of Humorous Quotations by Gyles Brandreth
ஆதாரம் : ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி ஆப் ஹ்யூமரஸ் கொடேஷன்ஸ் – ஜில்ஸ் ப்ராண்ட்ரெத்
***
Tags- செப்பு மொழிகள், இருபத்தொன்று,