உப்பு வேண்டுமா , வேண்டாமா?- Part 2 (Post No.11,052)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,052

Date uploaded in London – –    26 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உப்பு என்பது சோடியமும் குளோரினும் கலந்து உண்டாக்கிய சோடியம் குளோரைடு (Sodium Chloride)  என்பதைக் கண்டோம்.

“உப்பிட்டவரை உள்ளவும் நினை” என்ற பழமொழியை வைத்து சமையல்காரரைக் கிண்டல் செய்வதும் உண்டு. இந்தப் பழமொழிக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. முதல் அர்த்தம் ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாதே’, ‘உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்யாதே’ என்பதாகும் . அதாவது யார் உனக்குச் சோறு போட்டார்களா வர்களுக்கு என்றும் நன்றி பாராட்ட வேண்டும்; நன்றி சொல்லாவிடினும் அந்த வீடு இரண்டாகும்படி துரோகம் செய்யாதே என்பதாகும். இதே பழமொழியைக் கொண்டு  கிண்டல் செய்வதும் உண்டு. சமையல் செய்த யாராவது ஒரு உணவுப் பண்டத்தில்  அதிகம் உப்பு போட்டுவிட்டால், சிரித்துக் கொண்டே, உப்பிட்டவரை ‘உள் அளவும்’ நினை என்று சொல்லுவார்கள். அதாவது சாப்பாட்டில் போட்ட அதிக உப்பு ‘உள் வரை’க்கும், ‘அடி வயிறு’ வரைக்கும் போய்விட்டது என்பது கருத்து!

கடுமையான இருமல் இருந்தால், தண்ணீரில்  உப்பு போட்டுக் கொப்பளித்தால் போதும்; இருமல் மறைந்து விடும். சிலவகை இருமல்களுக்கு மட்டுமே இந்த வைத்தியம் செல்லுபடியாகும்.

xxx

SODIUM

இப்போது சோடியம் பற்றிய ரசாயன தகவலுக்கு வருவோம்.

சோடியம் என்பதன் ரசாயனக் குறியீடு என்ஏ (Na) என்ற ஆங்கில எழுத்துக்கள் ஆகும். நேட்ரியம் (Natrium) என்ற லத்தீன் மொழிச் சொல்லின் சுருக்கம் இது. சோடா (Soda) என்பது அதன் பொருள்.இதைக் கண்டுபிடித்த ஹம்ப்ரி டேவிஸ் இதற்கு சோடானம் என்று பெயரிட்டதாகவும் சொல்லுவர் ; அதாவது தலைவலிக்கு மருந்தாகப் பயன்பட்டது சோடிய உப்பு.

நாம் குடிக்கும் ‘சோடா’ என்பதை சோடியம் பை கார்பனேட்  (Sodium Bicarbonate) உப்பு கொண்டு தயாரித்தனர்.

சோடியத்தின் வரலாறு

சோடியத்தின் வரலாறு பைபிளில் (Jeremiah 2; 22) துவங்குகிறது . அதில் இதை நைட்ர் (Nitre) என்று குறிப்பிட்டனர் ஆதிகாலத்தில் நைல் நதி வெள்ளப் பெருக்கெடுத்த காலங்களில் அது எகிப்திலுள்ள நே ட்ரோன் (Natron Valley) பள்ளத்தாக்கை நிரப்பியது. வெள்ளம் வடிந்தவுடன் அங்கு சோடியம் கார்பனேட் படிகங்களாகத் தங்கின. பின்னர் சஹாரா பாலைவனத்திலும் சோடா உப்பு கிடைத்தது. பைபிளிலும் இதை சுத்தம் செய்ய உபயோகிக்கும் பொருளாகக் (Cleaning agent) குறிப்பிடுவர். முன்காலத்தில் சோடியம் கார்பனேட் , வாஷிங் சோடா (Washing Soda)  என்னும் பெயரில் சுத்தம் செய்ய உபயோகிக்கப்பட்டது.

xxxx

பொருளாதாரப் பயன்பாடுகள்

ஜெர்மனி, போலந்து, அமெரிக்கா , பிரிட்டன் முதலிய நாடுகளில் பலவகை சோடியம் உப்புக்கள் (ஹாலைட்Halites ) இயற்கையில் கிடைக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் வேறு ஒரு  வகை (Trona ட்ரோனா ) சோடியம் உப்பு கிடைக்கிறது

உப்பளம் மூலம் சோடியம் குளோரைடு என்னும் உப்பு எடுப்பது உலகின் பல பாகங்களில் நடக்கிறது. ஒவ்வொரு வகை உப்புக்கும் ஒரு உபயோகம். சோடியம் ஹைட்ராக்சைடு  (Sodium Hydroxide) குழாய்கள், கழிவறைகளில்  உள்ள அசுத்தங்களை அகற்றிவிடும்.

உப்பு, சோடியம் பைகார்பனேட் முதலியன உணவுத் துறையில் பயன்படுகிறது .

கண்ணாடி செய்யும் தொழில், தீயணைக்கும் கருவிகள் (சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட்) ஆகியவற்றிலும் சோடியம் உப்புக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

சோப்பு தயாரித்தல், காகிதக் கூழை சுத்தம் செய்தல், துணிமணிகளைத் துவைக்கும் பவுடர் (Detergents) செய்தல் முதலிவற்றிலும் சோடியம் உப்புக்களைக் காணலாம்

சோடியம் மெட்டல்( Sodium Metal) என்பது 99-9 சுத்தமான சோடியம் ஆகும். இதை சாலை விளக்கு (Sodium Lamps)  முதல் சாயத் தொழில் (dyes), கார்களில் உள்ள பாதுகாப்புக் காற்றுப் பை (air bags in cars) வரை பல இடங்களில் உபயோகிக்கிறார்கள்.

கடல், சமுத்திரம் தவிர உள்நாட்டுப் பாறைகளிலும் உப்பு கிடைக்கிறது இவை முன்காலத்தில் கடல் நீர் பாய்ந்த இடங்கள் ஆகும்.

சோடியம் என்பது வெள்ளி போல நிறம் உடைய ஒரு மென்மையான உலோகம் (Silvery white, soft metal)  ஆகும். இது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலந்து எரிந்துவிடும் ஆதலால் பாரப்பின் (Paraffin)  திரவத்தில் சேமித்து வைப்பார்கள்.. தண்ணீரில் போட்டால் வேகமாக ஓடி ஹைட்ரஜனை உண்டாக்கும். சில நேரங்களில் தீப்பிடித்து எரிந்துவிடும். பொதுவாகக் காற்றுப்பட்டு எரிகையில் சோடியம் பெராக்ஸைடு உண்டாகிறது. அம்மோனியா திரவத்தில் போட்டால், அதில் கரைந்து, நீல நிற திரவமாகக் காட்சி தரும்.

ரசாயனக் குறியீடு – Na என்ஏ

அணு எண் – 11

கொதி நிலை – 883 டிகிரி C

உ ருகு நிலை – 98 டிகிரி C

இயற்கையாக கிடைக்கும் ஐசடோப் – சோடியம் 23.

கதிரியக்கம் கிடையாது.

செயற்கையாக உருவாக்கும் சோடியம்-24 கதிரியக்கம் உடையது. இதை மருத்துவத்தில் பயன்படுத்துவர்.

திரவ நிலையில் உள்ள சோடியத்தை (liquid Sodium) அணுசக்தி உலைகளில் (Nuclear Breeder Reactors) வெப்பத்தைக் கடத்தும் பொருளாகப் (coolant) பயன்படுத்துகின்றனர். ஆனால் 125 டிகிரிக்கு மேல் சூடாக்கிய சோடியம் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம் உண்டு.. அப்போது அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம். ஆயினும் பிரான்ஸ் நாட்டில் 6000 டன்  திரவ சோடியத்தால் அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்கிறார்கள். தீப்பிடித்தால் அணைப்பதற்கு மார்க்கலினா (Marcalina)  என்ற ரசாயனத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் சோடியம் திரவத்தையும் அடுத்தடுத்து வரும் வட்டமான பெட்டகங்களில் (inner loop, outer loop)  வைத்துள்ளனர்.

–subham—

Tags- சோடியம், சோடியம் குளோரைடு , பைகார்பனேட், வாஷிங் சோடா, சோடா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: