Post No. 11,054
Date uploaded in London – – 27 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
பகவான் ரமணர் அருளிய நடராஜ தரிசனம்!
ச.நாகராஜன்
பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டர்கள் அடைந்த திவ்ய அனுபவங்கள் ஏராளம்!
அவர்கள் தங்கள் அனுபவங்களை, புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளனர்.
டி.கே.சுந்தரேச ஐயர் தனது அனுபவங்களை ‘அட் தி ஃபீட் ஆஃப் பகவான்’ (At the Feed of Bhagavan’ by T.K. Sundaresa Iyer) என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.
1929ஆம் ஆண்டு. தீபாவளிக்கு முதல் நாள் இரவு. ஆசிரமத்தில் செட்டிலான அவரது முதல் ஆண்டு அது.
பகவான் அவரை கங்கா ஸ்நானம் செய்ய வீட்டிற்குப் போகுமாறு கூறினார்.
பகவானின் தரிசனமே கங்கா ஸ்நானம் தானே என்று நினைத்தார் அவர்.
என்றாலும் பகவானின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை.
இரவு வீட்டிற்கு வரைந்தார். இரண்டு மணிக்கு மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி கங்கா ஸ்நானத்தை முடித்தார்.
உடனே பகவானின் ஆசீர்வாதம் பெற ஆசிரமத்திற்கு விரைந்தார்.
வழக்கம் போல பகவான் சோபாவில் அமர்ந்திருந்தார். மணி அதிகாலை 3.30 இருக்கும்.
திடீரென்று பகவானின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிய ஆரம்பித்தது.
ஆலய உற்சவ காலங்களில் விக்ரஹத்தைச் அமைக்கப்படும் ஒளி வட்டம் போல அது இருந்தது. பகவான் பிரகாசமான புன்னகையுடன் ஒளிர்ந்தார். ஶ்ரீ நடராஜரின் தரிசனத்தை அவர் தருவது போல சுந்தரேச ஐயருக்குத் தோன்றியது. உடனே தேவாரப் பாடலை அவர் பாட ஆரம்பித்தார்.
ஒரு அரை மணி நேரம் இந்த தெய்வீகக் காட்சி நீடித்தது. பிறகு மறைந்தது.
பகவான் நான்கு மணிக்கு சுண்ணாம்பு தடவிய வெற்றிலை பாக்கை வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தார்.
தான் கண்ட காட்சியை சுந்தரேச ஐயர் பகவானிடம் தெரிவிக்க அவர் புன்னகை பூத்தார்.
இதே விதமான அனுபவத்தை ஆக்டர் வால்தியம் ஆஸ்டார் (Dr. Valtheim-Ostaur) என்பவரும் பெற்றுள்ளார்.
அவர் பெற்ற இந்த அனுபவத்தை புத்த லாமாவான அனாகரிகா கோவிந்தா தனது நூலான ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் திபதியன் மிஸ்டிசிஸம் (Foudations of Tibetian Mysticism by Buddhist Lama Anagarola Govinda – page 164) என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.
வால்தியம் ஆஸ்டார் பகவானின் முன் அமர்ந்து அவர் கண்களைப் பார்க்க திடீரென்று பகவானின் உடல் ஒளிமயமாக ஆரம்பித்தது. ஒளி அதிகமாகி வெள்ளை நிறமாயிற்று. இந்த உருவிலேயே அவர் அமர்ந்திருந்தார்.
ஆஸ்டார் இதை பகவானிடம் தெரிவித்த போது அவர் இதை வழக்கம் போல ஒன்றுமில்லை என்று கூறி விட்டார். இது மனதின் கற்பனை என்று அவர் கூறி விட்டார்.
வழக்கம் போல அவர் இப்படிக் கூறினாலும் ஆஸ்டார் தான் கண்ட காட்சி உண்மையே என்பதை உணர்ந்து ஆனந்தித்தார்.
இது போன்றே பல அன்பர்களும் பல திவ்ய காட்சிகளை பகவான் திருவுருவம் முன்னர் பெறுவது வழக்கம்!
ஒரு தெய்வீக அவதாரமே அவர் என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒன்று!
***
tags –
tags- ரமணர் ,நடராஜ தரிசனம்,