Post No. 11,057
Date uploaded in London – – 28 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள்! – 21
ச.நாகராஜன்
1
திருமண கவுன்ஸிலிங்!
மனைவியுடன் ஒத்துப் போக முடியாத ஒருவர் மனம் நொந்து திருமண கவுன்ஸிலிங் செய்யும் உளவியல் நிபுணரை நாடினார்.
உளவியல் நிபுணர் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுப் பிறகு சொன்னார்: “ ஒரு நாளைக்கு ஐந்து மைல் வீதம் ஓடுங்கள்; ஒரு வாரம் கழித்து என்னைக் கூப்பிடுங்கள்” என்றார்.
அவரது அறிவுரையை சிரமேற்கொண்டார் பாதிக்கப்பட்டவர்.
ஒரு வாரம் கழித்து அவர் உளவியல் நிபுணரை அவர் கூறியபடியே போனில் தொடர்பு கொண்டார்.
“மனைவியுடன் இப்போது எப்படி இருக்கிறது நிலைமை?” என்று கேட்டார் நிபுணர்.
“எனக்கெப்படி தெரியும்? நான் நீங்கள் கூறியபடியே ஐந்து மைல்கள் தினமும் ஓடி முப்பத்தைந்து மைல்கள் கடந்து வந்து விட்டேன்” என்றார் நண்பர்!
பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளினின் அறிவுரை இது:
கல்யாணத்திற்கு முன் இரு கண்களையும் அகலத் திறந்து வையுங்கள்; கல்யாணத்திற்குப் பின்னர் அரைப் பார்வையாகப் பாருங்கள்!”
(Keey your eyes wide open before marriage, half shut afterward – Benjamin Franklin)
2
ட்வெயினின் மனைவியின் கோபம்!
பிரபல எழுத்தாளரான மார்க் ட்வெய்ன் (Mark Twain 1835-1910) ஆடை விஷயத்தில் அவ்வளவாக அக்கறை செலுத்த மாட்டார். இது அவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. காலர், டை இல்லாமல் கூடவா ஒரு இடத்திற்கு ஒருவர் போவார் என்று அவர் அங்கலாய்ப்பார்.
ஒரு நாள் அடுத்த வீட்டிற்குச் சென்று திரும்பி வந்த மார்க் ட்வெயினைப் பார்த்து திடுக்கிட்டார் அவரது மனைவி.
காலர், டை இல்லாமல் அடுத்த வீடு சென்று திரும்பி இருக்கிறார் அவர்.
வந்ததே கோபம் அவருக்கு, வெளுத்து வாங்கி விட்டார்.
உடனே மார்க் ட்வெய்ன் ஒரு டையையும் காலரையும் பார்சல் செய்து ஒரு கடிதத்துடன் அடுத்த வீட்டிற்கு ஒரு பையன் மூலம் அனுப்பினார்.
“ஒரு அரைமணி நேரம் இந்த காலர், டை இல்லாமல் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். இப்போது நான் போடாமல் விடுபட்டதை அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து இதை நன்றாகப் பார்த்து விட்டு என் மனைவியை சமாதானப் படுத்துங்கள், காலரையும் டையையும் திருப்பி அனுப்பி விடுங்கள்!”
3
பயனுள்ள வாக்கியம்!
எட்டாவது வகுப்பில் படிக்கும் பையனைப் பார்த்து ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை ஒரு கேள்வியைக் கேட்டார்: “ஒரு பயனுள்ள வாக்கியத்தைச் சொல்லு பார்ப்போம்!
பையன் தயங்காமல் உடனே கூறினான்: “எல்லோரும் அழகான உங்களைத் தான் அருமையாகச் சொல்லித் தரும் டீச்சர் என்று கூறுகின்றனர்.”
மனம் மகிழ்ந்த டீச்சர், “சரி, அதில் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டார்.
“எனக்கு அதிக பட்ச மார்க் கிடைப்பது தான்!” என்றான் பையன்!
4
கடவுளுக்கான மார்க்!
வில்லியம் லையான்ஸ் பெல்ப்ஸ் (William Lyons Phelps 1865-1943) புகழ் பெற்ற யேல் யுனிவர்ஸிடியின் புரபஸர். ஆங்கிலப் பேராசிரியரான அவர் ஒரு சமயம் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் ஒன்றைக் கொடுத்து விடை எழுதச் சொன்னார் மாணவர்களிடம்.
ஒரு மாணவன் எழுதிக் கொடுத்தது இது : “கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் இந்தக் கேள்விக்கான விடை! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!”
வில்லியம் பேப்பரைத் திருத்திப் பையனிடம் கொடுத்தார்: “ கடவுளுக்கு ஏ கிரேடு வழங்கப்பட்டிருக்கிறது உனக்கு எஃப் (பெயில்) வழங்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!”
5
குய்ன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்!
இங்கிலாந்து ராணியான குய்ன் இரண்டாம் எலிஸபத் (Queen Elizabeth II
1926- ) க்ளமிஸ் கேஸில் (Glamis Castle) என்ற இடத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பாதிரியார் ஒருவர் வந்தார். அப்போது எலிஸபத்திற்கு வயது பத்து. திரும்பிச் செல்லும் போது பாதிரியார், “லில்லிபெட்” (Lillibet) என்ற புத்தகத்தை எதிர்கால ராணியாருக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார்.
உடனே எலிஸபத் கூறினார்: “அது கடவுளைப் பற்றிய புத்தகமாக மட்டும் இருக்க வேண்டாம். எனக்கு கடவுளைப் பற்றி எல்லாம் தெரியும்!”
***