பறங்கித் தலையன் (Pumpkin headed Englishman) வெள்ளைக்காரன்! (Post.11,058)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,058

Date uploaded in London – –    28 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பறங்கிக் காய் (squash or pumpkin) சிவப்பு நிறத்தில் இருக்கும்; வெள்ளைக்காரனை (Englishman)  நிந்தனை செய்யும்போது பறங்கியன் (பரங்கி) என்று வசை பாடுவதுண்டு. மேம்போக்காகப் பார்த்தால் பறங்கிக்காய் போல நிறமும், தலையும் (Pumpkin coloured head) உடையவன் என்பதால்தான் அவனுக்கு இப்படிப் பெயர் வந்ததோ என்று நினைப்போம்.. உண்மைப்பொருள் வெளிநாட்டுக்காரன் (Foreigner) என்பதே.

இந்தச் சொல்லின் வரலாற்றைக் காண்போம் :-

பிரான்ஸ் நாட்டுக்கு பழைய பெயர் கால். பி(Gaul)ன்னர் ஜெர்மனியிலிருந்து குடியேறிய பிராங்க் (Franks) இன மக்களின் பெயரில் அ தை பிரான்ஸ் என்று ழைத்தனர் அரேபியரும் ரோமானியரும் இதை வெளிநாட்டிலிருந்து குடியேறியோர் என்ற பொதுப் பொருளில் புழக்கத்தில் விட்டனர். அவர்கள் பாஷையில் பிராங்கிஷ் (Frankish) என்றால் வெளிநாட்டுக்காரன் என்பதாகும்.

அராபியர்கள் , உலகம் முழுதும் வணிகத்தில் ஈடுபட்டனர். பல் நாட்டுச் சரக்குகளை வாங்கி விற்பது அவர்கள் தொழில் ஆயிற்று; வணிகர்களிடையே நிலவிய கொச்சை மொழியில் ஆப்ரிக்கா முதல் ஆசியவரை அது ‘பறங்’ farang ஆக மாறி மலேயா, இந்தியாவில் அது ‘பறங்கி’ firangi ஆக மாறியது பாலியல் நோயான சிபிலிஸ் நோயின் பெயர் ஐரோப்பிய நோய் – அதாவது பிராங்கி for franchi !

கிரேக்க நாட்டின் மீதும் பிராங்க் இனத்தினர் படை எடுத்தனர்.அவர்களும் பிராங் frankikos  என்பதை பாரீன் / வெளிநாட்டினர் என்ற பொருளிலேயே பயன்படுத்தினர்.

கிரேக்க நாட்டில் பரவிய கிறிஸ்தவ மதம் கிரீக் ஆர்தடாக்ஸ் Greek Orthodox ஆகும். ஆனால் பிரான்ஸிலோ கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் பரவியது. இதனால் கிரேக்கர்கள் வெளிநாட்டு கிறிஸ்தவ என்னும் பொருளில் கத்தோலிக்க மதப் பிரிவினரை ப்ராங்கோஸ் frankos என்று அழைத்தனர். ப்ராங்கோஸ் பப்பா frankos pappa என்றால் கத்தோலிக்க கிறிஸ்தவ குரு . இதற்குப் பின்னர் வெளிநாட்டு வகை பேரிக்காய், அத்திப்பழம் ஆகியவற்றுடனும் பிராங்கோஸ் ஒட்டிக்கொண்டது .

ஆக, வெளிநாட்டுக்காரன், கத்தோலிக்கன் , பிரெஞ்சுக்காரன் , பாலியல் நோய், வெள்ளைக்கார ஆங்கிலேயன் , தற்காலத்தில் வெளிநாடு ஆகிய எல்லாவற்றிலும் பறங்கி ஒட்டிக்கொண்டது.

Xxxx

கோழியூரும் கோழி நாடும்

சங்கத் தமிழ் நூல்களைப் பயின்றோருக்கு உறந்தை நகரின் மறு பெயர் கோழியூர் என்பதும் அதன் பின்னுள்ள பெரிய கதையும் தெரியும்.

கோழி நாடு என்பது பிரான்ஸ் என்று பலருக்கும் தெரிந்திராது. பிரான்ஸ் நாட்டின் பழைய தபால்தலை கோழி படத்துடன்தான் இருக்கும்.. பிரான்ஸ் நாட்டின் ஒரிஜினல் பெயர் Gaul கால். இதை ரோமானியர்கள் கால்லஸ் / கோழி Gallus என்று அழைத்தனர். கால் என்ற கெல்டிக் மொழிச் சொல்லும் கால்லஸ் என்ற ரோமானியக் கோழியும் ‘ஜாலியாகக் கைகோர்த்துக் கொண்டவுடன்’ பிரான்சும் தனது சின்னத்தை கோழி என்று முத்திரை குத்தியது. தபால்தலைகளிலும், பிற முத்திரைகளிலும் சேவல் கோழி (Cock; Chanticleer) கம்பீரமாகக் காட்சி தந்தது . அதற்கு பிரெஞ்சுக் கொடியின் வர்ணங்களில் பூச்சு கொடுத்து அதை தேசபக்த சேவலை மாற்றிவிட்டனர்.

.

கோழியூர் உறந்தை நகருக்கப் போட்டியாக, இப்படி ஒரு கோழி நாடும் வந்தது!!

–subham– Tags- பரங்கி , பறங்கி , கோழியூர், கோழி  நாடு, பிரான்ஸ் , வெள்ளைக்காரன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: