Post No. 11,061
Date uploaded in London – – 29 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஜூலை 2022 காலண்டர்
பண்டிகை தினங்கள் – ஜூலை 1- பூரி ஜகந்நாதர் ரத்த யாத்திரை ; 4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் ; 10 பக்ரீத் ; 13- வியாச பூர்ணிமா – குரு பூர்ணிமா ; 17 தட்சிணாயன புண்ய காலம் ; 28 ஆடி அமாவாசை
பெளர்ணமி 13; அமாவாசை 28; ஏகாதசி விரத நாட்கள் – 9/10 and 24
ஜூலை 1 வெள்ளிக் கிழமை
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்- 443
ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய
செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.
xxx
ஜூலை 2 சனிக் கிழமை
ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்
உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?
தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?
-பர்த்ருஹரி 21 Niti Sataka
xxx
ஜூலை 3 ஞாயிற்றுக் கிழமை
பெரியார் துணைக்கு ஏங்கு—
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்- 442
இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக
xxx
ஜூலை 4 திங்கட் கிழமை
ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்
புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;
ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;
கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;
-பர்த்ருஹரி 22 Niti Sataka
xxx
ஜூலை 5 செவ்வாய்க் கிழமை
சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்
ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23
புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;
-பர்த்ருஹரி 23 Niti Sataka
xxx
ஜூலை 6 புதன் கிழமை
ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:-
சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.
xxx
ஜூலை 7 வியாழக் கிழமை
திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள் 416)
கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.
xxxx
ஜூலை 8 வெள்ளிக் கிழமை
சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415
xxxx
ஜூலை 9 சனிக் கிழமை
“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”
—ஒளவையார்
xxx
ஜூலை 10 ஞாயிற்றுக் கிழமை
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(–ஒளவையார்
வாக்குண்டாம்)
xxx
ஜூலை 11 திங்கட் கிழமை
இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்! —(விவேக சிந்தாமணி)
xxx
ஜூலை 12 செவ்வாய்க் கிழமை
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்– பழமொழி
xxxx
ஜூலை 13 புதன் கிழமை
ஸ்வயம் ஹி தீர்த்தானி புனைந்தி ஸந்தஹ
புனிதர்கள் சேர்க்கையால் ஸ்தலங்களும் புனிதம் பெறுகின்றன -பாகவத புராணம் 1-19-8
xxx
ஜூலை 14 வியாழக் கிழமை
ஸ்வம் ஜீவிதமபி ஸந்தோ ந கணயந்தி மித்ரார்த்தே – பஞ்ச தந்திரம்
நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக நல்லோர் தன் உயிரையும் பொருட்படுத்தார்
xxx
ஜூலை 15 வெள்ளிக் கிழமை
ஸுமனசோ முசலேன மா ஷோத்சி -பாததாதிக
நல்லோர் மனதை புண்படுத்தாதீர்கள்
xxx
ஜூலை 16 சனிக் கிழமை
ஸபா பாதி சஜ்ஜனை ஹி – ப்ருஹத் கதா மஞ்சரி
நல்லோர் வருகையால் ஸபையே பிரகாசிக்கும்.
xxx
ஜூலை 17 ஞாயிற்றுக் கிழமை
ஸந்தஸ்து பவந்தி பூஜனீயாஹா – கதா சரித் சாகரம்
பெரியோர்கள் பூஜிக்கத்தக்கவர்கள்.
xxx
ஜூலை 18 திங்கட் கிழமை
ஸதா லோகஹிதா ஸக்தா ரத்னதீபா இவோத்தமாஹா
நல்லோர், அலங்கார விளக்கு போன்றவர்கள் ; எப்போதும் சமுதாயத்துக்கு நல்லது செய்வதையே நோக்கமகாகக் கொண்டவர்கள் – பழமொழி
xxx
ஜூலை 19 செவ்வாய்க் கிழமை
ஸதாம் ஹி ஸங்கஸ் ஸகலம் ப்ரபூதே
நல்லோர் சேர்க்கை நல்லனவெல்லாம் தரும் -சுபாஷிதாவலி.
xxx
ஜூலை 20 புதன் கிழமை
ஸதாம் ஹி ப்ரியவததா குலவித்யா — பழமொழி
இனியவை கூறல், நல்லோர் குல வழக்கம் ஆகும்
xxx
ஜூலை 21 வியாழக் கிழமை
விக்ரியாயை ந கல்பந்தே ஸம்பந்தாஹா ஸதனுஷ்டிதாஹா
நல்லோர் சகவாசம் தவறான வழியில் செல்லாது – காளிதாஸனின் குமார சம்பவம்
xxx
ஜூலை 22 வெள்ளிக் கிழமை
நிர்குணேஷ்வபி ஸத்வேஷு தயாம் குர்வந்தி ஸாதவஹ
குணமற்ற வர்களிடத்தும் கருணை காட்டுவர் நல்லோர் – ஹிதோபதேசம்
xxx
ஜூலை 23 சனிக் கிழமை
சன்னா பவந்தி புவி ஸத் புருஷாஹா கதஞ்சித் – அவிமாரக
நல்லோர்கள் எதோ ஒரு காரணத்தால் மறைந்தே நிற்கிறார்கள்
xxx
ஜூலை 24 ஞாயிற்றுக் கிழமை
தோஷாய ஹி விதக்தானாம் ஸ்வபாவ ஸு பகோ ஜனஹ
இயற்கையிலேயே கருணை உள்ளவர்கள் நல்லோருடன் தாமாகவே சேர்ந்துவிடுகிறார்கள்- இனம் இனத்தோடு சேரும்- பாரத மஞ்சரி
xxx
ஜூலை 25 திங்கட் கிழமை
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்- 892
பொருள்
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
xxx
ஜூலை 26 செவ்வாய்க் கிழமை
கர்தவ்யம் ஹி ஸதாம் வசஹ- கதா சரித் சாகரம்
நல்லோர் சொல்லுவதைப் பின்பற்றுக
xxx
ஜூலை 27 புதன் கிழமை
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் –குறள் 460
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
xxx
ஜூலை 28 வியாழக் கிழமை
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் புணரின்
நாலடியார் 247)
நாம் மனத்தில் நினைத்தைக் குறிப்பால் உணரும் அறிவாற்றல் உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பம் கிடைக்கும்
xxxx
ஜூலை 29 வெள்ளிக் கிழமை
”தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட தன்மையை மாற்றுவர்” (கம்ப.வரைக்காட்சி.8)
குணமற்ற சிறியோரையும் மாற்றிவிடுவர் பெரியோர்கள்- கம்பன்
xxx
ஜூலை 30 சனிக் கிழமை
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.-குறள் 441
தர்மத்தை நன்கு கற்றறிந்த , அனுபவம் மிக்க அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நட்புடன் பழகுக
xxx
ஜூலை 31 ஞாயிற்றுக் கிழமை
பெரியாரைத் துணை கொள் . சான்றோர் இனத்திரு – ஆத்தி சூடி
—subham— Tags- சத்சங்கம், நல்லோர் சேர்க்கை, பொன்மொழிகள்