‘தேர்தல்’ என்பது, யாரோ வீடுகட்ட, நாம் எடுத்து வைக்கும் செங்கல்! (Post 11,068)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,068

Date uploaded in London – 1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான தகவல் மொழிகள்-90

யௌவன ஸ்திரீகள் காலால் உதைப்பதால் அசோக மரமும்,

அவர்கள் முகத்தில் பட்ட காற்றினால் மகிழ மரமும்,

அவர்கள் இருக தழுவிக் கொள்வதினால் மருதாணி மரமும்,

அவர்கள் பார்வை பட்ட மாத்திரத்தால் திலக வ்ருக்ஷமும்,

அவர்கள கை ஸ்பரிசத்தினால் மா மரமும்,

அவர்கள் முக காந்தியினால் செண்பக மரமும்,

அவர்கள் சந்தோஷக் குரலினால் கோங்கிலவு மரமும்,

அவர்கள் வாயினால் ஊதுவதினால் வார வ்ருக்ஷமும்,

அவர்கள் பாடுவதினால் அழிஞ்சில் மரமும்,

அவர்கள் சிரிப்பதினால் அத்தி மரமும்,

வ்ருத்தியாகி,நல்ல பலன்களைத்தரும் என்பது முனிவர் வாக்கு!

“ஸ்த்ரீ க்ருத தோகதம்” – வ்ருட்சாதி லட்சண ஸாஸ்திரம்

புத்தகத்திலிருந்து………….

அழகின் லட்சணம்

வெள்ளையாக இருக்கவேண்டியவை பற்கள், கைகள்

கருப்பாக இருக்க வேண்டியவை கண்கள், கண் இமைகள், புருவங்கள்,

கூந்தல்

சிவப்பாக இருக்க வேண்டியவை உதடுகள்,கன்னங்கள், நகங்கள்

குட்டையாக இருக்க வேண்டியவை காதுகள், பற்கள்,கால்கள்.

பெரியதாக இருக்க வேண்டியவை மார்பகம், நெற்றி,புருவங்களுக்கு

இடையில் உள்ள பாகம்.

உருண்டையாக இருக்க வேண்டியவை உதடுகள், புஜங்கள்,காலின்

பின் புறம் உள்ள தசைகள்

சிறியதாக இருக்க வேண்டியவை இடை,கைகள்,பாதங்கள்.

வெண்மையாக இருக்க வேண்டியவை விரல்கள்.

இத்துடன் அடக்கமும் கற்பும் இருந்து விட்டால் அந்தப் பெண்

தெயவமாகி விடுவாள்!

அழகு என்பது

……….

அழகு என்பது பார்த்தவுடனே அகமும் முகமும் மலரவைக்க வைக்கும்

வசந்தம்!

கண்ணும் மனமும் கலந்து வழங்கும் தீர்ப்பு!

இதயத்தின் முகவரி,உணர்வுகளின் வாசல்!

கண்களால் பார்க்கப்பட்டு, மூளையால் உணர்த்தப்பட்டு ஆன்மாவினால்

அனுபவிக்கப்படுவது!

ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல்!

ஒர் அமைதியான சாந்தமான பாவனை!

நம்மிடம் இருப்பது ஆனால் நமக்கு மட்டும் புரியாதது!

ஆணவம்,அகம்பாவம்,ஆபத்து, அகால அழிவு, என்னும் அருமைக்

குழந்தைகளின் தாய்!

ஆடவரை அலைக்கழிக்க ஆண்டவன் பெண்தளுக்கு அளித்த

வரப்பிரசாதம்!

சட்டம் என்பது

……….

அரசியல்வாதிகளுக்கு துரும்பு, பணக்கார ர்களுக்கு ஆயுதம்,ஏழைக்கு

எட்டாக் கனவு,வக்கீலுக்கு விளையாட்டு பொம்மை, நீதிபதிக்கு

செப்பிடு வித்தை!

திமிங்கலத்தை பிடிக்க விரிக்கப் படும் சிலந்திவலை!

சமுதாயத்தின் பாதுகாப்பு வளையம்,நிரபராதிகளின் நம்பிக்கை

நடசத்திரம்,குற்றவாளிகளின் லைசன்ஸ்!

கைப்பிடியை உள்ளே கொண்ட கோப்பையையும்,

மண்ணையும்பரிமாறும் அநியாயத்தின் பக்கம்

துரத்த முயற்சி செய்கிறார்கள்

சாட்சிகளை சார்ந்த சந்தர்ப்பவாதி!

ஆட்டோ ரிக்‌ஷா சவாரி மாதிரி, இலக்கை அடைவோம்,அதிக பணம் விரையம் செய்து, எங்கெங்கோஅலைந்த பிறகு!

ஊழல் என்பது

……….

முகவரி தொலைத்தவர்களைக்கூட சரித்திர நாயகர்கள் ஆக்கும்

அட்சய பாத்திரம்!

அரசியல்வாதிகளின் ஆனந்த பானமாய் மாறும் அறியா மக்களின்

வியர்வைத்துளிகள்!

தனக்குத்தானே கட்டிக்கொள்ளும் சமாதி!

கையில் கறைபடிந்தாலும் மெய்யில் மெருகேற்றிக்கொள்வது!

உணமை உழைப்புக்கு சமாதி எழுப்பத்துடிக்கும் குட்டிச்சாத்தான்!

ஐந்து வருட ஆட்சியில் முன்னேற்றம் காணும் ஒரே துறை!

அடுத்தவர் பரிவது!

தேர்தல் என்பது

……..

யாரோ வீடுகட்ட நாம் எடுத்து வைக்கும் செங்கல்!

அடுத்த சுரண்டலுக்கு விடப்படும் டெண்டர்!

ஆளுங்கட்சி மருமகளும், எதிர்கட்சி மாமியாரும் சேர்ந்து ஐன நாயக

கணவன் கழுத்தை நெரிப்பது!

நரிகளுக்கு ஆடுகளே நாட்டாண்மை வழங்கும் நிகழ்ச்சி!

64 வயதாகியும் மூளை வளரச்சியடையாத ஜன நாயக புத்திரன்!

அரசியல்வாதிகளுக்கு “சீசன் டிக்கெட்”,

பொதுமக்களுக்கு “லாட்டரி டிக்கெட்”!

ஒரு நாள் தவறுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை தரும் நீதி மன்றம்!

இந்திய வாக்காளர்கள் விடை தேடிக்கொண்டிருக்கும் புதிர்!

வோட்டுக்களை வாங்குவதற்கு, நோட்டுக்களை நீட்டி ஜனநாயகத்திற்கு

வேட்டுக்களை வீசும் விசித்திர விழா!

THE END

Tags – ஞான மொழிகள்-90

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: