நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை! (Post No11,078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,078

Date uploaded in London – –    4 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!

ச. நாகராஜன்

பிரான்ஸ் நாட்டை ஆண்ட நெப்போலியனை நேரம் தவறாமை என்ற அரிய குணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

நெப்போலியனுக்கு தனது தளகர்த்தர்கள் கூட எதையும் நேரம் தவறாமல் செய்ய வேண்டும்.

அவனது அனைத்து வெற்றிகளுக்கும் அவனது சரியான திட்டமிடுதலும், வீரமும், நேரம் தவறாமையுமே காரணம்.

ஒரு சமயம் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த நினைத்த நெப்போலியன் தனது தளகர்த்தரான ஜெனரல் க்ரௌச்சியை (General Grouchy) அழைத்தான். மறுநாள் காலை ஒரு இடத்தில் படையை நிறுத்தவேண்டும் என்று க்ரௌச்சிக்கு அவன் கட்டளையிட்டான்.

க்ரௌச்சி சிறந்த வீரன் மட்டுமல்ல; மிகவும் நம்பிக்கைக்குரிய தளகர்த்தனும் கூட.

க்ரௌச்சிக்கு நெப்போலியன் திட்டம் நிறைவேற்ற முடியாத ஒன்று என்று தோன்றியது. ஏனெனில் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஒரு பகுதி அங்கு தடையாக இருந்தது.

தனது பயத்தைத் தயங்காமல் அவன் நெப்போலியனிடம் கூறினான்.

“சார், ஆல்ப்ஸ் மலைத் தொடர் அங்கு இருப்பதால் நமது வீரர்களை அங்கு நிறுத்துவது என்பது மிகவும் கஷ்டம். அது முடியாத காரியம்” என்றான் அவன்.

உடனே நெப்போலியன், “முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில் மட்டுமே இருக்கும் ஒரு சொல். ஆல்ப்ஸை படைவீரர்களுக்கு வழி விடச் சொல். முடியாது என்றால் ஆல்ப்ஸ் மலையைத் தகர்த்து வீழ்த்து.” என்றான். (“Impossible is the word found in the dictionary of fools. Ask the Alps to make way for men.  If it doesn’t, smash it.”)

க்ரௌச்சிக்கு இப்போது வேறு வழியில்லாமல் போய்விட்டது. தனது படைவீரர்களை அழைத்து மலையில் உள்ள பனிப்பாறைகளை அகற்றச் சொன்னான். மறுநாள் காலையில் நெப்போலியன் எந்த இடத்தில் படை நிறுத்த வேண்டுமென்று கட்டளை இட்டிருந்தானோ அந்த இடத்தில் படை நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்காக க்ரௌச்சி பெரும் பாடு பட வேண்டியதாக இருந்தது. இந்த வேலைக்கு எவ்வளவு நிமிடம் தேவை என்பதைச் சரியாக அவன் கணக்கிட்டான். குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க எத்தனை வீரர்கள் தேவை என்பதையும் கணக்கிட்டான். வேலை ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் கனகச்சிதமாக முடிந்தது. எப்போதுமே நேரம் தவறாமல் எதையும் செய்யப் பழக்கப்பட்டவன் என்பதால் நெப்போலியனின் ஆணையை அவனால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

ஒரே ஒரு முறை தான் அவன் தன் வாழ்க்கையிலேயே சிறிது தாமதமாக ஒரு இடத்திற்குச் சென்றான்.

அது தான் வாடர்லூ (Waterloo)

எதிரி இதை தனக்கு பெரிய ஆதாயமாக எடுத்துக் கொண்டான். ஏனெனில் அவனது படை, தலைமை இல்லாமல் அந்த நேரத்தில் இருந்தது. படைக்கு உரிய வீர தீர மனப்பான்மை இல்லாமல் போகவே குழப்பமாக இருந்த சூழ்நிலையை எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். வெற்றியும் பெற்றான்.

அன்று முதல் வாடர்லூ என்பது தோல்விக்குரிய ஒரு சொல்லாக மாறி விட்டது.

அதையொட்டியே இந்த கவிதை எழுந்தது.

செய்வதை உரிய நேரத்தில் செய்

எதையும் நேரம் தவறிச் செய்யாதே

ஒரு செயலில் சிறிது தாமதம் என்றாலும் கூட

அது வாடர்லூவில் கொண்டு விட்டு விடும்!

(Do what you do well in time,

 Never be late in everything you do,

 A little delay in doing a thing,

 May lead you to ‘Waterloo’)

நாம் கூட வாடர்லூவைத் தவிர்க்க வேண்டுமெனில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அருங்குணம் :

நேரம் தவறாமையே!

***

tags- நெப்போலியன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: