ஈழத்துப் பாவலர்கள் இயற்றிய ஊர்-இடப்பெயர் கவிதைகள் (Post.11,083)

WRITTEN BY B. KANNAN

Post No. 11,083

Date uploaded in London – –    6  JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை–3

      Written By B.KANNAN, NEW DELHI

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இந்தப் பகுதியில் ஊர்ப்பெயர், இடப்பெயர் ஆகியவற்றைக் கொண்டு எப்படி ஈழத்துப் பாவலர்கள் அரிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக நாமாந்திரிதை அணி மூல மாக எடுத்திக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

குறளில் நவக்கிரகங்கள்

சங்கக் காலத்துக்குப் பின் வந்த புலவர்கள் பல பிரபந்தங்கள் இயற்றியுள்ளனர். அவைகளில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி ஆகிய நாற்கவிகளுள் சித்திரக்கவி பாடுவதும், அதற்கு உரை வகுப்பதும் கடினமான காரியமாகும் எனும் தமிழ்த் தாத்தா உ.வே.சா. திருவையாறு ஆசுகவி ஜனாப் அப்துல் கபூர் சாஹிப் அவர்களின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறார். சேது சமஸ்தானக் கவிஞர் ரா.ராகவையங்கார் ஒருமுறை இவரிடம், காளமேகப் புலவர் 12 ராசியும் வரிசையா கத் தளை தட்டாமல் ஒரு வெண்பாவில் பாடியது போன்று இயற்ற முடியுமா என வினவினார். அதற்கு சாஹிபு அவர்கள் 15 சீர் கொண்ட வெண்பாவில் 12 ராசியைப் பாடுவது பெரிதல்ல, 7 சீருள்ளக் குறள் வெண்பாவில் 12 ராசியையும் அமைத்துப் பாடுகிறேன், கேளுங்கள் என்றார்.

அந்தக் குறள் இதோ….

  ஆடுசே வீணை அலவனரி பெண்டுலைதேள்

  நீடுவிற்சு றாக்குடமீ னே.

(ஆடு=மேஷம், சே=எருது, ரிஷபம், வீணை=மிதுனம், அலவன்=நண்டு, கடகம், அரி=சிம்மம், பெண்=கன்னி, துலை=துலாக்கோல்,தராசு, தேள்=விருச்சிகம், நீடுவில்= நீண்ட தனுசு, சுறா= மகரம், குடம்=கும்பம், மீன்=மீனம், ஏ= எனும் ராசிகளின் பெருமை கேளீர் )

இப்படி எல்லாரது மனதையும் கவர்ந்தவர் தனது சித்திரக்கவி மாலை நூலில் நாமாந்தரிதை பிரேளிகை அணியில் பாடல் இயற்றாமல் விட்டது வருத்த மளிக்கிறது.

ஈழத்தில் சித்திரக்கவிகளைப் பாடியோராக மிகவும் பிரபலமானவர்கள், அரசகேசரி, முத்துக்குமார கவிராசர், சேனாதிராய முதலியார், மயில்வாகனப் புலவர், நமச்சி வாயம் பிள்ளை, ஈழத்து தமிழ்த் தாத்தா என அறியப்படும் கந்தமுருகேசனார் என்று பட்டியல் நீளும்..

.கந்த முருகேசனார்

கந்தமுருகேசனார் ஆறுமுக நாவலர் மீது பாடிய நல்லை நாவலன் கோவை நூலில் உள்ள 492 பாடல்களுள் சித்திரக்கவிகளும் அடங்கியுள்ளன. அவற்றில்அநேகமானவை பிரேளிகை வகையைச் சார்ந்தவை. அவற்றுள் ஒன்று…. செவிலிப் பெண் தரையின் மீது தலைவன்-தலைவியோருடையக் கால் அழுந்தியக் குறியைக் கண்டு வருத்தத் துடன் கூறுவதாக அமைந்த பாடல்

  நாலடி கண்டனன் முன்னினி வள்ளுவர் நாட்டமுற்றேன்

  ஆலடி யாகம நால்வர்க் குரைவளை யாபதியின்

  நாலடி தோய்நா வலனலை யேழை நறுங்தொடைறோண்

  மேலடி வைப்பப் புகுங்கொல மூவர் வியனிலைக்கே (383)

பதவுரை- முன் நாலடி கண்டனன்=அவர்கள் சென்ற பாதையில் முதலில் நான்கு அடிச்சுவடுகள் பார்த்தேன், இனி வள்ளுவர் நாட்டம் உற்றேன்= இப்போது பொய்யா மொழிப் புலவரின் குறள் அடி போல் இரண்டு அடிச்சுவடு மட்டுமே காண்கிறேன், வளை ஆல் அடி நால்வர்க்கு ஆகமம் உரை=வளைந்து நிழல் தரும் கல்லால மரத் தின் கீழ் முனிவர்கள் நால்வருக்கு ஆகமப் பொருள் போதிக்கும்,

ஆ பதியின் நால் அடி தோய் நாவலன் நல்லை=ஆன்மாக்களுக்குத் தலைவனான ஈசன் அருளிய நாற்பாதங்களில் நனைந்த நாவலர் பிரானின் நல்லூரைச் சேர்ந்த வளான, நறும் தொடை ஏழை=நறுமணம் வீசும் மலர்மாலை அணிந்த என் மகள், அ மூவர் வியன் நிலைக்கு=அப்பாலை நிலத்தின் கண், (அடி, தோள்), மேல் வைப்ப புகும் கொல்=காலைத் தோள் மேல் வைத்துச் சென்றிருப்பாளோ?

இச்செய்யுளில் நாலடி, வள்ளுவர், வளையாபதி என்பன நாமாந்தரிதை அணியில் அமைந்துள்ளன. நாலடி=நாலடியார், வள்ளுவர்=திருக்குறள், ஐம்பெருநாப்பியங்களுள் ஒன்றான வளையாபதி.

நாற்பாதம்=சரியை, கிரியை, யோகம் ஞானம் நாலடியார்ப் பெயரில் அந்தரிதையானது, தலைவன் அடி இரண்டும், தலைவியின் அடிச்சுவடு இரண்டுமான நான்கு குறளில் மறைத்து வைக்கப்பட்டது.

முதலில் நான்கு பாதச் சுவடுகளைக் கண்ட செவிலி சற்று முன்னே சென்று இரண்டு அடிகளை மட்டுமே பார்க்கிறாள்.அதுபற்றி அவளுக்கு எழுந்த எண்ணம், மற்ற இரு சுவடுகளுக்கான தலைவியை தன் மீதே வைத்துச் சென்றிருக்க வேண் டும் என்பதாம். சுட்டுப் பொசுக்கும் பாலை நிலத்தில் கால் வைக்க முடியாமல் தவித்துச் செல்லுதலை வேடிக்கையாக இப்படிக் கூறுவது வழக்கம்–காலைத் தோளில் வைத்துச் செல்வது என்று! 

அ மூவர்==அயன், அரன், அரி மூவருமே வியக்கும் வண்ணம், கால் பதித்தால் சுட்டெரிக்கும் அந்தப் பாலை நிலத் தரையின் மேல் பாவையை அடியெடுத்து வைக்க விடாமல் காதலால் கட்டுண்டத் தலைவன் தன்னுடையவளைத் தோளில் தாங்கிச் சென்றான் என்கிறார் பாவலர். இதுவே மற்ற இரு சுவடுகள் “குறளு” க்குள் (நாலடி சிறுத்து ஈரடியாக) மறைந்து விட்டதற்கானக் காரணமாம்!

ஞானம் போதித்த ஈசன் அமர்ந்திருக்கும் நல்லூர் தலத்தைச் சேர்ந்த நற்பண்புள்ளப் பெண் என்மகள் என்றும் மறைமுகமாக செவிலி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

மல்லாகம் நமச்சிவாயம் பிள்ளை

யாழ்ப்பாணத்து மல்லாகம் நகரம் தமிழ்ப் புலவர் பலருக்குத் தாயகமாய் விளங்கி யுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர் குலநலம், குணநலம், குடும்ப நலம் மற்றும் அறிவு நலமும் வாய்க்கப் பெற்ற புலவர் நமச்சிவாயம் பிள்ளை அவர்கள். அவர் இயற்றிய “ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்” எனும் நூல் ஈழத்தின் வடமாகாண–சிறப்பாக குடா நாட்டின் ஊர்ப்பெயர்களைச் சிலேடைப் பொருளில், நாமாந்தரிதை

அணியில் தொடர்புபடுத்திச் சைவசமய உட்பொருளை 27 பாடல்களில் 172 ஊர்-இடப்பெயர்களில் பொதித்து வைத்துள்ளார்.

உ.ம். சுன்னாகம் என்ற ஊர்ப்பெயர் மகேசனின் இருப்பிடமான  வெள்ளியங்கிரி-கைலை மலையைக் குறிக்கும்.

சுன்னம்+அகம்= வெண்ணிறச் சுண்ணாம்பு (பனி படர்ந்த) வீடு.  அல்லது சுல்=வெள்ளி, நாகம்= மலை என்றும் கூறலாம், மாதகலான்= உமையொருபாகனான பரமேஸ்வரன் (மாதகல் எனும் ஊர்ப்பெயர் அடங்கியுள்ளது- பாடல் 2), மட்டுவில்லான்= காமபானத் தால் மதியை அலைக்கழிக்கும் கரும்பு வில் உடைய மன்மதன், மட்டு=காமபானம் மட்டுவில் என்பது இடப்பெயர்.

சில பெயர்களுக்கு அடைமொழியிட்டும், பால் காட்டும் ஈறுகளையும், வேற்றுமை உருபுகளை இணைத்தும்,வேறு சிலவற்றைப் பிரித்திசைத்தும், திரித்து வழங்குவதன் மூலமும் இவ்வகைப் பொருள்களைக் கண்டுணரலாம். இதோ மாதிரிக்கு ஒன்று……

   தாவப்பலாலிகொணீர் வேலியார்படி தாவடியான்

   மாவைப்புரிமுகமாலயன் றேடும்வயவையன் பிற்

   போயிட்டியையுறுவார்க்கு நல்லூரைப் புரிவன் மண்டை 

   தீவைத்தெரிக்குமுன்னே யொட்டகப் பொலந்தீத்துய்யவே  (11)

மகாவிஷ்ணுவும், பிரமனும்தேடுகின்ற மகேசன், பக்தியுடன் சிவதருமங்களைச் செய்பவர்களுக்குச் சிவலோகப் பிராப்தி அடையச் செய்வார். ஆகையால் மனமே மரணம் சம்பவிக்கும் முன் புலன்களை அடக்கிப் புண்ணியங்களைச் செய்து பிழைத்துக் கொள் என்பது இதன் பொது கருத்து.

பதவுரை: தாவு அபல்=பலவிடத்திலிருந்துப் பாய்ந்து வருகின்ற ஆலி=மழை நீரை, கொள்=தன்னுள் அடக்குகின்ற, நீர்வேலி ஆர் படி தரவு அடியான்=சமுத்திரம் எனும் வேலியால் சூழப்பட்ட பெரிய பூமியை ஓரடியாய் அளக்கும் பாதங்களை உடைய வராகிய, பாவைப்புரி முகமால்=ஶ்ரீதேவியை விரும்புகின்ற முகப்பொலிவையுடைய விஷ்ணுவும், அயன்=பிரமனும், தேடும்=தேடுகின்ற, வயஜ= வலிமை வாய்ந்த சிவ பெருமான், அன்பிற்போய்= மனதில் பக்தியுடனே சென்று, இட்டு இயையுறு னர்க்கு=சிவனைப் போற்றும் சிவனடியார்களுக்கு, நல்லூரைப்புரிவன்=சொர்க்கத்தைக் கொடுக்க விரும்புவர், மண்டை தீவைத்து எரிக்குமுன்=தலையைச் சிதையிலிட்டு எரிப்பதற்கு முன்னரே, அகம்=மனமே, புலந்தீத்து உய்ய=ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் பொருட்டு, ஒட்டு= பெருமானிடம் சரணடைவாய்.

இப்பாடலில், பலாலி, நீர்வேலி, தாவடி, மாவிட்டபுரம் (மாவை), முகமாலை, வயா விளான், போயிட்டி, நல்லூர், மண்டைதீவு, ஒட்டகப்புலம் ஆகிய ஊர்ப்பெயர்கள் மறைந்து நிற்பதைக் காணலாம்.

To be continued………………………………………………….

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: