ISBN அதிசயம்! (Post No.11,082)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,082

Date uploaded in London – –    6 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ISBN அதிசயம்!

ச.நாகராஜன்

ISBN என்பது International Standard Book Number என்பதின் சுருக்கம்.

இது 13 எண்களைக் கொண்ட ஒரு எண். இதன் மூலம் நீங்கள் விரும்பும் புத்தகத்தைக் குறிப்பது சுலபம். இந்த எண்ணை மட்டும் குறிப்பிட்டு, புத்தகத்தை உலகளாவிய விதத்தில் வாங்குவதும் சுலபம்.

இது 2006  முடிய 10 எண்களை மட்டுமே கொண்டிருந்தது.

2007 ஜனவரி முதல் தேதி முதல் 13 எண்களைக் கொண்ட நம்பர் ஆனது.

இப்போது 13 எண்கள் கொண்ட ISBN நம்பரையே நாம் குறிக்க வேண்டும்.

10 எண்கள் கொண்ட நம்பர் மட்டுமே இருந்தால் ISBN தளத்திற்குச் சென்று அதற்கான 13 எண் நம்பரைப் பெறலாம்.

இந்த 13 எண்கள் புத்தகத்தை வெளியிட்டவர் யார், புத்தகத்தின் தலைப்பு என்ன, எந்த மொழியில் அந்தப் புத்தகம் உள்ளது, எப்போது அது வெளியிடப்பட்டது, அது எத்தனையாவது பதிப்பு என்ற விவரங்களைத் தரும்.

அது ஒரு பத்திரிகையா, கல்வி சம்பந்தமான இதழா, அல்லது வேறு எதாவது ஒரு இதழா போன்ற அனைத்து விவரங்களையும் இந்த எண் மூலம் சுலபமாக அறிந்து விட முடியும்.

ISBN இல் 10 எண்ணுக்கும் இப்போது நடைமுறையில் உள்ள 13 எண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் வருகின்ற மூன்று எண்கள் 978 அல்லது 979 என்பதைக் கொண்டிருக்கும்.

ஏராளமான புத்தகங்கள் உலகளாவிய விதத்தில் பிரசுரமாவதை ஒட்டி இந்த ஒரு சிறிய மாறுதல் ஏற்படுத்தப்பட்டது.

ஆக ISBNஇல் உள்ள 13 இலக்க எண் ஐந்து முக்கிய விஷயங்களை உடனே கண்டு பிடிக்க உதவுகிறது.

  1. முதல் மூன்று எண்கள் – 978 அல்லது 979
  2. பதிவுக் குழு பற்றியது : எந்த நாடு, அல்லது எந்த பூகோளப் பகுதி, மொழி என்ன,  உள்ளிட்ட விவரங்களை ஒன்று முதல் 5 இலக்கங்கள் வரை கொண்டிருக்கும்.
  3. பதிவு பற்றிய விஷயம் -இது எந்த பதிப்பாளர் என்பதைக் குறிக்கிறது. 7 இலக்கம் வரை இது இருக்கலாம்.
  4. பிரசுரம் பற்றிய விஷயம். எது எத்தனையாவது பதிப்பு, தலைப்பு என்ன என்பதைத் தரும். இது 6 இலக்கம் கொண்டதாக இருக்கலாம்.
  5. சரிபார்க்கும் எண் _ இதுதான் கடைசி ஒற்றை இலக்க எண். அதாவது 13வது எண். இது கணித இயல் படி நீங்கள் விரும்பிய புத்தகத்தின் எண் இது தான் என்பதைச் சரியாகச் சொன்னீர்களா என்பதைச் சரி பார்க்கும்.

சரி, இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேள்வி எழுவது இயல்பே!

என்ன என்று பார்க்கலாம்.

ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்க ஆர்டர் செய்கிறார். ஆனால் அவசரத்தில் ஒரு எண்ணைத் தப்பாகப் பதிவிட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வாங்க நினைத்த புத்தகத்திற்குப் பதிலாக தப்பான புத்தகம் வந்து சேர்ந்து விடுமா? வராது.

ஏன்? அதில் தானே சரிபார்க்கும் ஒரு எண் ரகசியம் உள்ளது.

ISBN Digit0521427061Total
When Multiplied0106420124905410165
ISBN Digit1862307369Total
When Multiplied11618815049245450275
ISBN Digit0486256642Total
When Multiplied082424103042483620242

மேலே தரப்பட்ட ISBN எண்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

முதல் வரிசையில் 10 இலக்க எண் உள்ளது. அடுத்த வரிசையில் உள்ள இலக்க எண்கள் அந்த இலக்கம் எத்தனையாவது இலக்கமோ அதைக் கொண்டு மேலே உள்ள எண்ணைப் பெருக்கி வருவதாக அமைந்திருக்கிறது.

எடுத்துக் காட்டு முதல் இலக்கம் 0. 0ஐ முதல் இலக்கமான 1ஆல் பெருக்கினால் வருவது 0.

அடுத்த இரண்டாவது இலக்க எண் 5. இது இரண்டாவது இலக்கமாக இருப்பதால் இரண்டால் 5ஐப் பெருக்கினால் வருவது 10.

அடுத்த  மூன்றாவது இலக்க எண் 2. இது மூன்றாவது இலக்கமாக இருப்பதால் மூன்றால் 2ஐப் பெருக்கினால் வருவது 6.

இப்படியே 10 இலக்க எண்களையும் பெருக்கியதை இரண்டாவது வரிசையில் பதிவிட்டு, பின்னர் அந்த எண்களைக் கூட்டினால் வரும் தொகையான 165 பதிவிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது வரிசையில் உள்ள 0+10+6+4+20+12+49+0+54+10 = 165.

இரண்டாவது மற்றும் மூன்றாவது டேபிள்களில் வரும் கூட்டுத் தொகை முறையே 275 மற்றும் 242.

இதில் உள்ள அதிசயம் என்னவெனில் 165, 275, 242 இவை 11 என்ற எண்ணால் வகுபடக் கூடிய எண்களே.

ஆக ISBNஇல் நீங்கள் எந்த 10 இலக்க எண்ணைப் போட்டாலும் இப்படிக் கூட்டுத் தொகை 11ஆல் வகுபடக் கூடியதாகவே அமைந்திருக்கும்.

ஒருவர் ஒரு எண்ணைத் தவறாகப் பதிவிட்டு விட்டால் இந்தக் கூட்டுத்தொகை 11ஆல் வகுபடாது.

உடனே கம்ப்யூட்டரே உங்களை நீங்கள் பதிவிட்ட எண்ணைச் சரிபார்க்கச் சொல்லி சரியான எண்ணைக் கேட்கும்.

இரண்டு எண்களை ஒருவர் தவறாகப் பதிவிட்டு விட்டாலும் கம்ப்யூட்டர் உடனே அதைக் கண்டுபிடித்து சரியான எண்ணைத் தாருங்கள் என்று கேட்கும்!

சரி, 13 இலக்க எண்ணுக்கும் இது பொருந்துமா, பொருந்தாது!

13 இலக்க எண் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கூட்டுத் தொகை பத்தால் வகுபடக் கூடியதாக மாற்றப்பட்டு அமைக்கப்பட்டது.

ஒரு 13 இலக்க ISBN எண்ணை நீங்களே இந்த முறையில் சரி பார்க்கலாம்.

இது CODE எனப்படும் குறியீட்டு கணித மாயாஜாலத்தால் அமைக்கப்பட்ட முறை.

  The Number Mysteries என்ற அருமையான புத்தகத்தில் கணிதப் பேராசிரியர் Marcus Du Sautoy இதை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

அதனால் இது எனக்குத் தெரிய வந்தது.

இப்படி CODE எனப்படும் குறியீட்டு கணித மாயாஜாலம் சுமார் 5000 ஆண்டுகளாக வெவ்வேறு முறையில் உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது.

அவற்றை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்!

நன்றி : Marcus Du Sautoy – The Number Mysteries

***

tags – ISBN எண்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: