நடந்தவை தான் நம்புங்கள் – 22 (Post No.11085)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,085

Date uploaded in London – –    7 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 22

ச.நாகராஜன்

1

ஜான் ட்ரைடனின்  மனைவி

ஜான் ட்ரைடன் (John Dryden – 1631-1700) தனது மனைவியான லேடி எலிஸபத்துடன் அவ்வளவாக இணக்கமாக இல்லை. எலிஸபத்தின் சகோதரர்களின் வற்புறுத்தலினாலேயே அவரை அவர் மணம் செய்ய நேரிட்டது.

எப்போதும் புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் அவர் நேரத்தைச் செலவழித்து தன்னை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை என்ற வருத்தம் எலிஸபத்திற்கு இருந்தது.

ஒரு நாள் அவர் ட்ரைடனிடம், “ட்ரைடன், எப்போது பார்த்தாலும் மக்கிப் போன அந்த பழைய புத்தகங்களையே எப்படி உங்களால் படித்துக் கொண்டிருக்க முடிகிறது. அந்த புத்தகங்களில் ஒன்றாக நான் இருந்தால் உங்களுடன் அதிக நேரம் இருப்பேனோ, என்னவோ” என்று கூறி அங்கலாய்த்தார்.

உடனே ட்ரைடன், மை டியர், நீ ஒரு புத்தகமாக ஆக வேண்டுமென்றால் பஞ்சாங்கமாக ஆகி விடு. அபோது தான் ஒவ்வொரு வருடமும் உன்னை மாற்றிக் கொண்டே இருக்க முடியும்” என்று பதில் கூறினார்.

    Source and Thanks :-Tpoic 51 Oxford Book for Literary  anecdotes by James Sutherland

2

உணவு பற்றாக்குறை பற்றிய மாநாடு

சமீபத்தில் உலகளாவிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ஒரே ஒரு கேள்வி தான் சர்வேயில் கேட்கப்பட்டது.

அது இது தான்:

தயவுசெய்து நீங்கள் உல்கில் மீதி இருக்கும் நாடுகளில் நிலவும் உணவு பற்றாக்குறைக்கான தீர்வு பற்றிய உங்களது நேர்மையான கருத்தைத் தர முடியுமா?

இந்த சர்வே உலகில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்பட்டது.

ஆனால் அது படு தோல்வி அடைந்து விட்டது.

ஏனெனில்,

ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு “உணவு” என்றால் என்ன என்று தெரியாது.

கிழக்கு ஐரோப்பாவில்,அவர்களுக்கு “நேர்மை” என்றால் என்ன என்று தெரியாது.

மேற்கு ஐரோப்பாவில், அவர்களுக்கு “பற்றாக்குறை” என்றால் என்ன என்று தெரியாது.

சீனாவில் அவர்களுக்கு “கருத்து” என்றால் என்ன என்று தெரியாது.

மத்திய கிழக்கில், அவர்களுக்கு “தீர்வு” என்றால் என்ன என்று தெரியாது.

தென்னமெரிக்காவில்அவர்களுக்கு “தயவுசெய்து” என்றால் என்ன என்று தெரியாது.

அமெரிக்காவிலோ, அவர்களுக்கு “உலகில் மீதி இருக்கும் நாடுகள்” என்றால் என்ன என்று தெரியாது.

சர்வே என்றால் ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டுமல்லவா?

தங்களுக்குப் புரியாத வார்த்தை கேள்வியில் இருந்ததால் யாரும் பதில் தரவில்லை.

சர்வே தோல்வியில் முடிவடைந்தது!

**

பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்!

உளவியலாளர் ஒருவர் தன் நண்பரிடம், ‘ஏன் இன்னும் நீ திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்று கேட்டார்.

“அதுவா, அழகு, சாமர்த்தியம், படிப்பு எல்லாவற்றிலும் சிறந்த இளமையான பெர்ஃபெக்ட் பெண்ணை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தான்…” என்று இழுத்தார்.

“சும்மா கதை விடாதே, ஏராளமான இளம் அழகிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? ஒருவரைக் கூடவா உனக்குப் பிடிக்கவில்லை” என்றார் உளவியலாளர்.

“ஒரு அழகியைப் பார்த்தேன். அவள் ஒருத்தி தான் நான் பார்த்ததிலேயே பெர்ஃபெக்ட். எனக்கு சரியான ஜோடி என்றால் அது அவளாகத் தான் இருக்க முடியும்” என்றார் நண்பர்.

“பின் என்ன, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே” என்றார் உளவியலாளர்.

“ஆனால் அவள் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் அல்லவா வேண்டும் என்கிறாள்!” என்றார் நண்பர்!

***

4

மனைவியுடனா

இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் ஒரு அனுபவஸ்தர் கூறுவது இது:

உங்கள் மனைவியுடன்  வாதாடுவது என்பது இண்டர்நெட்டைப் பயன்படுத்த முயலும் போது ‘TERMS OF USE’ஐப் படிப்பது போலத் தான்.

 (பேந்த பேந்த விழித்து விட்டு) கடைசி கடைசியாக “I AGREE” என்று சொல்லி விட வேண்டியது தான்!

***

tags- உணவு பற்றாக்குறை, ஜான் ட்ரைடன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: