யார் ஹிந்து ? ஞான மொழிகள்-91 (Post No.11,086)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,086

Date uploaded in London – 7 JULY 2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்-91

உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்த போதிலும் அந்த நெய்

இருந்த பாத்திரத்தை எறும்புகள் சுற்றி நிற்கும். மறந்தாகிலும் அரைக்காசு கொடுக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை நூறு பேர் சுற்றிக்

கொண்டிருப்பார்கள்.

நாலடியார்

xxx

பேனுக்கு பயந்து யாரும் தலையை வெட்டி எறிவதில்லை.

பிச்சைகாரர்களுக்கு பயந்து யாரும் சமைக்காமல் இருப்பதில்லை,

மாடுகளோ, பறவைகளோ,பயிரை மேய்ந்து விடுகின்றன என்பதற்காக

குடியானவர்கள் பயிர்த்தொழிலை விட்டு விடுவதில்லை.

அது போல பழிக்கு பயந்து யாரும் நல்ல பணிகளை செய்வதை கை

விட்டு விடக் கூடாது.

பதஞ்சலி

Xxxx

தாய் , தந்தையர்க்கு பணிவிடை செய்பவர்கள்,பசித்தவர்க்கு உணவு

தருபவர்கள்,தோப்பு, கிணறு தண்ணீர் பந்தல் நிறுபவர்கள் ஆகியவர்கள்

சொர்க்கம் செல்கிறார்கள்.

பீஷ்மர்

Xxx

எது அழகு ???

பயிர்களை சுமந்து நிற்கும்போது நிலம் அழகு பெறுகிறது.

தாமரையை சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது.

நாணத்தை சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள்.

அறத்தை சுமந்து நிற்கும்போது் ஆண் அழகு பெறுகிறான்.

நான் மணிக் கடிகை

Xxx

தமோ குணம் உடையவர்கள் யார்???

புத்தியை சரியாக உபயோகிக்காதவன்,கஞ்சத்தன்மை உடையவன்,

பிறரை கோபிக்கிறவன், உடைய ஒருவன் தமோகுணமுடையவன்.

மைத்ரீ உபநிஷதம்

Xxxx

பல நிறங்களை உடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக

இருக்கிறது.

அதுபோல

ஞானிகள் பலவகைப் பட்ட சரீரங்களை உடைய ஜீவர்களை ஒரே

அறிவு மயமானவர்களாக காண்கிறார்கள்.

பிரம்மபிந்து உபநிஷதம்

Xxxx

தேசம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் கோவில்கள் சிறப்படைய

வேண்டும்

கோவில்கள் சிறப்படைய வேண்டுமென்றால் வழிபாடுகள் சிறப்படைய

வேண்டும்

இந்து மதம்

Xxx

மூங்கில் மரத்தில் அழகிய இலைகள் அதிகமாக இல்லாமற் போனால்

அது வசந்த காலத்தின் குற்றமா?

ஆந்தைக்கு பகலில் கண்தெரியாமல் போனால் அது சூரியனின்

குற்றமா?

சாதகப்பறவையின் வாயில் நீர் விழாவிட்டால் அது மேகத்தின்

குற்றமா?

ஏற்கனவே விதி தலையில் எழுதியிருப்பதை அழித்துவிட யாரால் முடியும்?

பர்த்ரு ஹரியின் நீதி சதகம்

Xxxx

ஒரு பெரிய குளத்தில் நீராடுவதற்கு பல துறைகள் இருக்கின்றன.

நீராடுவதற்கோ, தண்ணீர் எடுப்பதற்கோ யாராக இருந்தாலும் எந்த

துறை வழியாக இறங்கின போதிலும் தண்ணீர்இருக்கும் இடத்திற்கு

செல்ல முடியும்.ஒருவனுடைய நீராடும் துறை நல்லது, மற்றவனுடைய நீராடும் துறை கெட்டது என்று சண்டை போடுவது வீண்.

அது போல நித்யானந்தமாகிய குளத்திற்கு செல்லும் துறைகளும் பல

உள்ளன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில்

ஒவ்வொன்றாகும். இந்த துறைகளில் ஏதாவதொன்றின் வழியாக நேராக,

உறுதியான, பக்தியுடன் சென்றால், நீ நித்யானந்த தண்ணீரை அடைவது

நிச்சயம்.ஆனால் உன்னுடைய மதம் உயர்ந்தது மற்றவை தாழ்ந்தவை

என்று மட்டும் சொல்லாதே!

ஶ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்ஸர்38

Xxx

யார் ஹிந்து ???

எவர் பாவம் செய்யும் மன் நிலையை அடக்கி அதை புண்ணிய காரியங்களை

செயவதில் ஈடுபடுத்தி வாழ்கின்றாரோ, தீயசக்திகளை ஆத்ம சக்தியால்

ஒடுக்கி சிறிதும் அச்சமின்றி வாழ்கின்றாரோ அவரே ஹிந்து ஆவார்.

கலிகா புராணம்

Xxxx

யார ஓங்காரத்தை தனது முக்கியமான மந்திரமாக கொண்டிருக்கிறாரோ,

மறு பிறவி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எவருக்கு இருக்கிறதோ,

எவர் பசுவை தெய்வமாக மதிக்கின்றாரோ, நமத புண்ணிய பாரத பூமியின்

நன்மைக்கு தன்னை அர்ப்பணிக்கிறாரோ அவரே ஹிந்து ஆவார்.

மாதவ திக் விஜயம்

xxxx

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதன் எந்த நாட்டை சேர்ந்தவனாலும்

அவன் எந்த மொழி பேசினாலும் அந்தக கணமே அவன் உங்களுக்கு

நெருங்கியவனாயும், இனுயவனாயும் ஆகி விட வேண்டும்.

ஹிந்து என்று பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம் உங்கள்

உள்ளத்தை வந்து தாக்கி உங்கள் மகனே துன்பப்படுவது போன்ற

உணர்ச்சியை உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான்,

அப்போது மட்டும்தான் – நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஸ்வாமி விவேகானந்தர்52

Xxxx

பிறப்பற்றவர், மாறுதலற்றவர், உருவமற்றவர், ஆனந்ததைக்கடந்தவர்,

எப்போதும் ஆனந்தமயமாக இருப்பவர், ஒன்றேயானவர், நிறைந்தவர்,

எல்லாவற்றிற்கும் மேலானவர்,குணங்களை கடந்தவர்,வித்தியாசமற்றவர்,

ஆசைகளைக்கடந்தவர்,பரம்பொருள் ஆகிய கணேசரை நாம்

வணங்குவோம்.

கணேச ஸ்தோஸ்திரம்

Xxx

உடல் அழிவதைப்போல ஆத்மா அழிவதில்லை.! அது மட்குடம்

உடையும்போது குடத்திலிருக்கும் காற்றும் ஆகாயமும் உடையாமல்

இருப்பது போன்றது.

வடலூர் வள்ளலார்

xxxx

செல்வம் என்பது வண்டிச்சக்கரம் போன்றது.மேலாகவும், கீழாகவும்

மாறி மாறி வரும்.அது நடுவில் நிலை பொருந்தி எவரிடமும் நிற்கவே

நிற்காது!

நாலடியார்

Xxx

தேடிவைத்த பொருளை தாங்களும் அனுபவிக்காமல்,பிறருக்கும்

கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் வரப்போகும் ஏழேழு

ஜன்மங்களிலும் கண்ணால காணும் பாக்கியத்தை பெறாமல் வருந்தி

நாசமடைவார்கள்.

யோகி வேமன்னா

Xxx

நாம் தீய வழியில் ஈட்டும் பொருள் இந்த உலகில் ஆனந்தத்தை

கொடுக்கிறது.ஆனால் அதே பொருள் நம் மரணத்திற்குப் பிறகு

நாம் கொடும் துன்பங்களை அனுபவிப்பதற்கு காரணமாக

அமைகிறது.ஆகவே நிரந்தர ஆனந்தத்தை பெற விரும்புவர்கள் 68

தீய வழியில் பொருளை ஈட்டவே கூடாது.

மகரிஷி அத்ரி

Xxxx

பணம் இல்லாதவர்கள் பணம் சம்பாதிக்கப் பார்த்தால் அது முடியாத

ஒரு காரியமாகிறது.ஆனால் பணக்காரர் விஷயத்திலோ, எப்படி

காட்டில் ஒருயானையை பின்பற்றி பல யானைகள் போகின்றனவோ

அது போல பணத்தோடு பணம் சேர்கிறது.

மகா பாரதம்

To be continued……………………….

Tags – ஞான மொழிகள்-91

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: