Post No. 11,092
Date uploaded in London – – 9 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
சீசியம் CESIUM
CAESIUM (CESIUM IN USA) என்னும் மூலகம் அல்லது தனிமம் கார உலோகம் (ALKALI METAL) வகையைச் சேர்ந்தது. இது நாம் வசிக்கும் அறைகளில் கூட (ROOM TEMPERATURE) திரவ நிலையை அடைந்துவிடும். சோடியம் போலவே , தண்ணீரில் போட்டால் தீப்பிடித்து எரிந்துவிடும் . ஆகையால் இதை பாதுகாப்பான கண்ணாடிக் குப்பிக்குள் வைத்திருப்பர். நம் உடலில் இது மிக மிகக்குறைவாகவே இருக்கும். அதுவும் கூட பொட்டாசியம் முதலிய உப்புக்களுடன் கூடச் செல்லும் குறைவான அளவுதான். உடலுக்கு இது எந்த வகையிலும் பயன் இல்லை. ஆயினும் ஜப்பான் போன்ற நாடுகளில் சீசியம் ஜெல் (CESIUM GEL) என்பதைத் தோல் பளபளக்க, புத்துணர்ச்சி பெறப் (REJUVENATING) பயன்படுத்துகிறார்கள் . மருத்துவத் துறையில் கருவிகளில் பயன்படுகிறது.
சீசியம் என்ற சொல்லுக்கு ஆகாயம் போன்ற நீல நிறம் (SKY BLUE) என்று பொருள். இதனுடைய உப்புக்கள் எரியும்போது இந்த நிற ஜ்வாலை தோன்றுவதால் இப்படிப் பெயரிட்டனர் இது ஜெர்மனியில் ஹைடல்பர்க் நகரில் நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.. ராபர்ட் புன்சென் (1811-1899), குஸ்தாவ் கிர்சாப் 1824-1887) என்ற இருவர் 30,000 லிட்டர் ரசாயன உப்புக்கரைசலைக் கொதிக்கவைத்து உலோகம்வாரியாகப் பிரித்தனர். லித்தியம், பொட்டாசியம், கால்சியம் , சோடியம் , மக்னீசியம், ஸ்டரான்சியம் அடங்கிய உப்புக்களை நீக்கிய பின்னர் மீதியுள்ள கரைசலை புன்சென் பர்னர் விளக்கிலிருந்து வரும் சுவாலையின் மீது வீசி ஸ்பெக்ட்ராஸ்கோப் SPECTROSCOPE வழியாகப் பார்த்தனர். அதில் அருகருகே இரண்டு நீலக்கோடுகள் தென்பட்டன. இதுவரை பார்த்திராத அக்காட்சி புதிய மூலகத்தைக் காட்டிக் கொடுத்தன.
எங்கே கிடைக்கிறது?
தற்காலத்தில் கனடா நாட்டின் மானிடோபாவில் பெர்னிக் ஏரியிலிருந்தும் மற்றும் ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே மற்றும் தென் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் சீசியம் எடுக்கப்படுகிறது.
இதன் உபயோகம் என்ன?
சீசியம் அணுக் கடிகாரம்தான் நம் எல்லோருக்கும் நேரத்தை மிகத் துல்லியமாகக் கொடுக்கிறது லட்சக் கணக்கான ஆண்டுகளில் ஒரு வினாடிதான் தாமதம் காட்டும். ஆகையால் உலகம் முழுதும் சீசியம் கடிகாரங்களை நிறுவி நமக்கு ஒலி பரப்பிக்கொடு இருக்கின்றனர். இதுதான் கம்பயூட்டர்களிலும், மொபைல் போன்களிலும் நேரத்தைக் காட்டப் பயன்படுகிறது
சீசியம் த்ரஷ்டர்ஸ் – CESIUM THRUSTERS , விண்கலங்கள் பறக்க உதவுகின்றன. சீசியம் மூலகத்தை ஒரு காலியான குடுவையில் அயனி (ION) மயமாக்குவர் .அவற்றை மின்மயமாக்கி ஒரு குழல் அல்லது பைப் வழியே வெளியே தள்ளுகையில் அது விண்கலத்தை உந்திவிடும். . ஒரு கிலோ கிராம் சீசியம் மற்ற எந்த ஒரு கிலோ கிராம் எரிபொருளைவிட 140 மடங்கு அதிகம் உந்து சக்தியை அளிக்கிறது !!
எங்கெல்லாம் உலோக ஆக்சைடுகளைப் பயன்படுத்துகிறார்களா அங்கெல்லாம் சீசியம் உப்புக்களை சேர்த்தால் அதன் செயல்பாடு அதிகரிக்கிறது. இதை கிரியா ஊக்கி (Catalyst Promoters) என்பர். தான் ஒரு மாறுதலையும் அடையாமல் மற்றவற்றை வேகப்படுத்துவது கிரியா ஊக்கி (Catalyst) எனப்படும்.
சீசியம் நைட்ரேட் என்னும் உப்பு கண் கண்ணாடித் தொழிலில் பயன்படுகிறது .
சீசியம் அயோடைட் மற்றும் சீசியம் ப்ளுரைடு ஆகியன எக்ஸ் ரே கதிர்களை உறிஞ்சி விடும். இதனால் மருத்துவத் துறையில் கதிரியக்கத்தை அகற்றப் பயன்படுத்துகிறார்கள் .
உயிரியல் ரசாயனத் துறையில் டி என் ஏ யைப் பிரிக்கும் கருவிகளில் பயன்படுகிறது.
ரசாயன விவரங்கள்
ரசாயனக் குறியீடு – Cs சி எஸ்
அணு எண் – 55
உருகு நிலை 28 டிகிரி C
கொதி நிலை 679 டிகிரி C
பொல்லுசைட் (Pollucite) என்னும் தாதுவாக இயற்கையில் கிடைக்கிறது. பள பளக்கும் தங்க நிறம் உடைய ‘கார உலோகம்’ ALKALI METAL இது . பாதுகாப்பான கண்ணாடி பாட்டிலில் காற்றுப் புகா வண்ணம் அடைத்து வைத்திருப்பர். தண்ணீரில் போட்டால் சீறிப் பாய்ந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டுத் தீப்பற்றி எரியும். சில நேரங்களில் வெடித்துவிடும்.
திட நிலையில் தங்கம் போலவே காணப்படும் சீசியம் தங்கத்தை விட விலை உயர்ந்த மூலகம் ஆகும்.
பொதுவாக இதனால் புறச் சூழல் கெடுவதில்லை. ஆனால் செர்நோபிள் போன்ற இடங்களில் அணு உலை விபத்துக்கள் நடக்கையில் கதிரியக்க சீசியம் வெளிப்படுகிறது. அது விழுந்த இடங்களில் உள்ள புற்களை மேய்ந்த ஆடு மாடுகளைக்கூட எதற்கும் பயன்படுத்தாமல் கொன்று விடுகின்றனர். அப்படி அவைகளைக் காக்க வேண்டுமானால் பிரஷ்யன் ப்ளூ Prussian Blue என்பதை மாத்திரை வடிவமாக்கி கால்நடைகளுக்கு கொடுத்து கதிரியக்க சீசியம்-137 ஐசடோப்பை அகற்றுவர். மனிதர்களுக்கும் சீசியம் -137 கதிரியக்கத்தை நீக்க இது பயன்படுகிறது இதுதவிர சீசியம் -133 ஐசடோப்பும் உண்டு. அதற்குக் கதிரியக்கம் இல்லாததால் ஆபத்து இல்லை..
-சுபம் —
tags- கடிகாரம், விண்கலம், பயன், சீசியம்,