WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,093
Date uploaded in London – – 10 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 25
ச.நாகராஜன்
1
கணவனும் மனைவியும் ஒருவரே!
அமெரிக்காவில், மசாசூசெட்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. மனைவிக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் பார்க்க கணவனுக்கு அதிகாரம் உண்டா என்பது பற்றிய வழக்கு அது.
நீதிபதி யோசித்துப் பார்த்தார்.
“மனைவிக்கு வரும் கடிதங்களை கணவன் பிரித்துப் பார்த்து படிக்கலாம். ஏனெனில் கணவனும் மனைவியும் இருவர் அல்ல; ஒருவரே! அந்த ஒருவர் கணவனே” என்றார் அவர்.
அவருக்கு கேம்பிரிட்ஜை சேர்ந்த தியோபிலஸ் பார்ஸன்ஸ் சொன்னது ஞாபகத்திற்கு வந்து விட்டது போல் இருக்கிறது.
(Theophilus Parsons of Cambridge : he husband and the wife are one, and the husband is that one)
தீர்க்கமாகத் தன் தீர்ப்பை இப்படிச் சொன்னார் அந்த நியாயஸ்தர்!
2
உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?
தெற்கு லண்டனில் ஒரு பள்ளி. அதில் வணிகவியல் கற்பிக்கும் ஒரு ஆசிரியை தன் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.
“உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?”
சரியான பதிலுக்கு 10 பவுண்ட் பரிசு என்று சொல்லி நோட்டைக் காட்டினாள் ஆசிரியை.
மாத்யூ எழுந்து சொன்னான் : ‘செயிண்ட் தாமஸ்’
“இல்லை உட்கார்”, என்றார் ஆசிரியை.
அடுத்து ஜெனிஃபர் எழுந்தாள் :
‘செயிண்ட் பீட்டர்’, என்றாள்.
“இல்லை, உட்கார்”, என்றாள் ஆசிரியை.
அடுத்து ப்ரகாஷ் எழுந்தான்.
“ஜீஸஸ் க்ரைஸ்ட்” என்றான்.
“அடடா, சரியான விடை” என்று மகிழ்ந்து பாராட்டிய ஆசிரியை,
“இந்தா, இதோ உனக்கு பரிசு 10 பவுண்ட்” என்று நோட்டை
நீட்டினாள்.
பரிசைக் கொடுக்கும் போது, ஆசிரியை கேட்டாள்: “அது சரி, நீயோ இந்தியாவில் குஜராத்திலிருந்து வந்த பையன். உனக்கு இப்படி இந்த விடை தெரியும்?” என்று கேட்டாள்.
பையன் உடனே பதில் சொன்னான்: “இந்த ஆன்ஸர் பொய் என்று எனக்குத் தெரியும். என் மனதிற்குள்ளாக சரியான விடையான பகவான் கிருஷ்ணர் என்ற விடையே வந்தது. என்றாலும் பிஸினஸ் இஸ் பிஸினஸ்” என்றான் ப்ரகாஷ்!
3
உனக்கு நஷ்டம்!
அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் (Calcin Coolidge) அதிகம் பேசாதவர். முத்துப் போலச் சொற்களை உதிர்ப்பவர்.
அவரிடம் ஒரு பெண்மணி வந்தாள். “ஜனாதிபதி அவர்களே! ஒரு நண்பருடன் பந்தயம் வைத்துள்ளேன். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் உங்களை பேச வைப்பதாக பந்தயம்! தயவுசெய்து ஏதாவது சொல்லுங்களேன்” என்றாள்.
உடனே கூலிட்ஜ் கூறினார் : “You lose” (உனக்கு நஷ்டம்!)
அவர் ஒரு முறை சர்ச்சுக்குச் சென்று திரும்பி வந்தார். அவரது மனைவி,’ சர்ச்சில் பாதிரியார் எதைப் பற்றி சொன்னார்?” என்று கேட்டார்.
அவர் தான் அதிகம் பேசாதவர் ஆயிற்றே.
“பாவம்” (SIN) என்றார்.
இன்னும் விரிவாக அவர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்த அவர் மனைவி, “சரி, அதைப் பற்றி அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்.
உடனே கூலிட்ஜ் கூறினார்: “அதற்கு அவர் எதிரி” (He was against it)
4
கல்லறையும் நாடும்
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் க்ளிண்டனிடம் ஒரு முறை அமெரிக்காவை நிர்வகிப்பது பற்றிக் கேட்கப்பட்டது. அவர் கேல்ஸ்பர்க்கில் பேசும் போது இப்படி கூறினார்: “ அமெரிக்காவை நிர்வகிப்பது கல்லறைய நிர்வகிப்பது போல அல்ல! கல்லறையிலும் நிறைய பேர் இருப்பார்கள்; அமெரிக்காவிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் நீங்கள் பேசுவதைக் கேட்க மாட்டார்கள்!” (In a speech at Galesburg)
***
5
ஒரு டெமாக்ரட்டும் ஒரு ரிபப்ளிகனும்!
அமெரிக்காவில் நடந்தது இது!
ஒரு பெண்மணி ஹாட்- ஏர் பலூனில் மேலே பறந்து கொண்டிருந்தாள்.
கீழே உள்ள ஒருவரைப் பார்த்துச் சத்தம் போட்டுக் கேட்டாள்:” ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு நண்பரைப் பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் இப்போது எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை!”
உடனே கீழே இருந்தவர் கூறினார் இப்படி: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் 31 டிகிரி 14.57 மினட்ஸ் நார்த் லாடிட்யூடிலும் 100 டிகிரி 49.09 மினட்ஸ் மேற்கு லாங்கிடியூடிலும் பொஸிஷன் கொண்டு இருக்கிறீர்கள்!
உடனே அந்தப் பெண்மணி கூறினாள் “” நீங்கள் என்ன ஒரு டெமாக்ட்ரட்டா?”
பேச்சு தொடர்ந்தது இப்படி!
கீழே இருந்தவர் :“ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
பெண்மணி : “ஏனென்றால் நீங்கள் சொன்னது அவ்வளவும் டெக்னிகலாக சரி தான்! ஆனால் அவ்வளவும் யூஸ்லெஸ்! பிரயோஜனமே இல்லாதது! உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் உதவவே இல்லை!”
கீழே இருந்தவர்: “நீங்கள் ஒரு ரிபப்ளிகன், சரி தானே!”
“பெண்மணி : “அட, சரிதான்! அது எப்படி சரியாகச் சொல்கிறீர்கள்?”
கீழே இருந்தவர்: “ஓ! அதுவா, தப்பான வாக்குறுதியைக் கொடுத்து சுடச்சுட ஏறி இப்போதுள்ள இடத்தில் இருக்கிறீர்கள்! உங்கள் பிரச்சினையை நான் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்! நீங்கள் என்னை சந்திக்கும் முன்னர் இருந்த இடத்திலேயே தான் இருக்கிறீர்கள்! என்றாலும் தப்பு என் பேரில் தான் இருக்கிறது என்று கூறுகிறீர்கள்! அதனால் தான் அதைக் கண்டுபிடித்தேன்!
நமக்குப் புரிகிறது டெமாக்ரட் யார்? ரிபப்ளிகன் யார் என்று இப்போது!
***
Tags- நடந்தவை தான் நம்புங்கள் 25, மிக உயர்ந்தவர் யார்?