Post No. 11,096
Date uploaded in London – – 11 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ப்ரயாணம் என்ற சொல்லை தமிழில் பயணம் என்று சொல்லுவோம். ‘ப்ர’ என்ற சம்ஸ்க்ருத கூட்டெழுத்து தமிழ் இலக்கணப்படி ‘ப’ ஆகும். ப்ரதிமா என்பதை படிமம் (சிலை) என்றும் ப்ரவாளம் என்பதை பவளம் என்றும் எழுதுவோம். காரணம் என்னவெனில் புள்ளி வைத்த மெய்யெழுத்தில் தமிழ் சொற்கள் துவங்கா. ஸ்படிகம் என்பதைக்கூட ‘படிகம்’ என்றுதானெழுதுவோம். நிற்க.
தமிழில் பயணம் என்றால் ஒரு ஊரிலிருந்து அல்லது ஒரு நாட்டிலிருந்து மற்ற ஊருக்கோ நாட்டிற்கோ செல்வதைக்(Travel, Journey) குறிக்கும். சங்க காலத்தில் ‘செலவு’ (Travel) என்ற சொல்லையே பயன்படுத்தினர்
பயண நூல்கள் – சில எடுத்துக் காட்டுகள் :–
ஏ.கே செட்டியாரின் ‘பிரயாணக் கட்டுரைகள் , பிரயாண நினைவுகள்’
பரணீதரனின் ‘புனித பயணம்’
சோமலெ எழுதிய ‘எனது பிரயாண நினைவுகள்’
இது தவிர பத்திரிகைகளிலும் , அண்மைக் காலமாக பிளாக் (blogs) குகளிலும் ‘எனது ……………………. பயணம்’ என்ற தலைப்பில் பயணம் என்ற சொல்லைக் காணலாம்.
ஆனால் சுமார் 10, 000 சொற்கள் உடைய பகவத் கீதையில் பிரயாண காலம் என்பது நாம் எதிர்பாராத பொருளில் வருகிறது. அதாவது ‘இறுதி யாத்திரை’ பற்றிய சொல்!!
பகவத் கீதை எட்டாவது அத்தியாயத்தில் (8-2; 8-10) இந்த சொற்கள் வருகின்றன.
சாதாரணமாக நான் எழுதினால், ‘பிரயாண காலத்தில் அதிகம் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸிலோ காரிலோ போகக் கூடாது’ என்று எழுதுவேன்.. உங்களுக்கும் எளிதில் அர்த்தம் புரியும். ஆனால் கிருஷ்ண பரமாத்வோ , கொஞ்சமும் தயங்காமல் இந்தச் சொல்லை இறுதி யாத்திரைக்குப் பயன்படுத்துகிறார். ஆகையால் சம்ஸ்க்ருதம் தெரிந்தவருடன் பேசுகையில் இந்த அமங்கலச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது.
प्रयाणकाले
இதோ அந்த இரண்டு ஸ்லோகங்கள்
அதி⁴யஜ்ஞ: கத²ம் கோऽத்ர தே³ஹேऽஸ்மிந்மது⁴ஸூத³ந |
ப்ரயாணகாலே ச கத²ம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி⁴: || 8- 2||
மது⁴ஸூத³ந! அதி⁴யஜ்ஞ: அத்ர க: = யாகஞானம் என்பதென்ன?
அஸ்மிந் தே³ஹே கத²ம் ? = இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?)
ச நியதாத்மபி⁴: = மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால்
ப்ரயாணகாலே கத²ம் ஜ்ஞேய: அஸி = இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்?
யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?
xxxx
ப்ரயாணகாலே மநஸாசலேந ப⁴க்த்யா யுக்தோ யோக³ப³லேந சைவ |
ப்⁴ருவோர்மத்⁴யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||
ப்ரயாணகாலே = இறுதிக் காலத்தில்
அசலேந மநஸா = அசைவற்ற மனத்துடன்
ப்⁴ருவோ: மத்⁴யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்²ய = புருவங்களிடையே உயிரை நன்கேற்றி
ப⁴க்த்யா யோக³ப³லேந ச யுக்த: = பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு)
தம் தி³வ்யம் பரம் புருஷம் உபைதி = அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்
இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான். (பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் )
மேற்கூறிய இரண்டு ஸ்லோகங்களும் ‘சங்கதம்.காம்’ பதிவிலிருந்து எடுக்கப்பட்டன ;நன்றி
ஆனால் பொதுவான அர்த்தத்தில் நாம் பயன்படுத்தும் பயணம் என்பது சரியே. புறப்படுதல், ஆரம்பம், தாக்குதல், படை எடுப்பு, குதிரை அல்லது கழுதையின் முதுகில் பயணம் செய்தல் போன்ற பல பொருட்களில் ப்ரயாணம் என்பதை சம்ஸ்க்ருத நூல்கள் பயன்படுத்துவதை விஸ்டம் லைப்ரரி வெப்சைட் காட்டுகிறது.
Prayāṇa (प्रयाण) refers to “journeys”, according to the 11th century Jñānārṇava, a treatise on Jain Yoga in roughly 2200 Sanskrit verses.
Sanskrit dictionary
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
Prayāṇa (प्रयाण).—
1) Setting out, starting, departure.
2) A march, journey; मार्गं तावच्छृणु कथयतस्त्वत्प्रयाणानुरूपम् (mārgaṃ tāvacchṛṇu kathayatastvatprayāṇānurūpam) Meghadūta 13; Mahābhārata (Bombay) 7.166.1.
3) Progress, advance.
4) The march (of an enemy), an attack, invasion, expedition; कामं पुरः शुक्रमिव प्रयाणे (kāmaṃ puraḥ śukramiva prayāṇe) Kumārasambhava 3.43; R.6.33; प्रयाणपटहध्वनिं प्रथयति स्म ताराध्वनि (prayāṇapaṭahadhvaniṃ prathayati sma tārādhvani) Rāmāyaṇachampū.
5) Beginning, commencement.
6) Death, departure (from the world);
7) The back of a horse; Mahābhārata (Bombay) 3.71.16.
8) The hinder part of any animal.
பகவத் கீதையில் உள்ள 10, 000 சொற்களை தொடர்ந்து ஆராய்வோம்.
— subham-
Tags- ப்ரயாணம், பயணம், பிரயாண காலம்