அக்ஞானம் என்ற  நல்ல பாம்பு; ஆசை என்னும் முதலை (Post No.11,100)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,100

Date uploaded in London – 13 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தெய்வீக மொழிகள் -92

அக்ஞானம் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு “பிரும்ம ஞானம்”,

என்ற மருந்தை பருகாமல் முக்தி கிடைப்பதில்லை.

விவேக சூடாமணி

xxx

தோன்றி நாசமடையும் போகங்களிலிருந்து கிடைக்கும்சுகம் படமெடுத்த

பாம்பின் நிழலில் கிடைக்கும் சுகமாகும்

மகரிஷி வசிஷ்டர்

xxx

சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் அதனால் குருடனுக்கு

பிரயோஜனமில்லை. அதுபோல இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும்

அக்ஞானிகளுக்கு பயனில்லை.

ஞான ரத்னாவளி

xxxx

நீ அக்ஞானம்என்ற பெரிய நல்ல பாம்பால் தீண்டப்பட்டு “நான் கர்த்தா”

என்ற விஷம் ஏறியவனாய் இருக்கிறாய். நான் கர்த்தா அல்ல என்ற

ஞானமாகிய அமுத்த்தை உட் கொண்டு சுகமாய் இருப்பாயாக !

அஷ்டா வக்ர கீதை

xxx

நீ உலகில் வாழ்ந்து வா,ஆனால் உலகப்பற்றுள்ளவனாக இருக்காதே.

ராம கிருஷ்ண பரமஹம்ஸர்

xxx

பிறவிக்கடல் கரையைக் கடக்க முயற்சி செய்யும் உறுதியான உலகப் பற்றுடையவர்களை ஆசை என்னும் முதலை கழுத்தைப் பற்றி வேகமாகஇழுத்து நடுவழியில் மூழ்கடித்து விடுகிறது.

விவேக சூடாமணி

Xxxx

சக்தி நிறைந்த நீர்மேல் நிமிர்ந்து உயர நிற்கும்  தாமரையைப் போலவே

நீரினால் பாதிக்கப்பட முடியாத இறக்கைகளுடன் காற்றில் உயரப் பறக்கும்

கடல் பறவையைப் போலவே பற்று இல்லாமல் வாழ்க்கை நடத்துங்கள்.

குரு நானக்

Xxxx

என்தந்தை, என் தாய், என் மனைவி, என் வீடு, என்று இவ்வாறு உண்டாகும்

“எனது” என்னும் உணர்ச்சியே “மோகம்” எனப்படும்.

பத்ம புராணம்

Xxx

“நான்”, “என்னுடைய” என்ற இரண்டு வகை பற்றுக்களையும் வேர ர

வாசனை இல்லாதபடி அழித்துவிட்டு இறைவனை சேருங்கள்

நம்மாழ்வார்

Xxx

“ம ம” என்ற இரண்டு எழுத்துக்கள் மரணத்திற்கு வழியாகும்.

“ந ம ம”என்ற மூன்றெழுத்துக்கள் அமர நிலைக்கு வழி வகுக்கும்

அனு கீதை

Xxxx

ஒரு நெல்மணி பல நெல்மணிகளாக விளைகிறது.அது போன்ற

ஒருவன செய்யும் ஒவ்வொறு வினையும் பல வினைகளுக்கு

காரணமாக இருக்கும்.

ஞான ரத்னாவளி

Xxx

வெள்ளம் வரும்முன் அணை போட வேண்டும். வள்ளம் பெருக்கெடுத்து

வந்தால் எதுவும் செய்ய இயலாது.இதைப் போலவே மரணம் வரும்முன்

அறம் செய்து மீட்சி பெற வேண்டும்.

சிவப் பிரகாச முனிவர்

Xxx

நோய்கள் பகைவர்களைப்போன்று மனித உடலை பற்றிக் கொண்டு

அழித்து வருகின்றன. மூப்பு என்ற புலி மனித உடலின் மீது பாய்ந்து

அதை தாக்கி வீழ்த்துகிறது.எப்போது உடலின் மேல் பாய்ந்து அதை

உடமை ஆக்கிக் கொள்ளலாம் என்று மரணம் உடலை கவனித்துக்

கொண்டே இருக்கிறது.

ஶ்ரீ ராம பிரான்

Xxx

இயற்கையை மீறுவது யாராலும் முடியாது.உலகில் பிராணிகள் தோன்றி

முதுமையில் இறந்து விடுகின்றன.இறந்ததை நினைத்து வருந்தலாமே

தவிர இறந்தவரை திரும்பிக் கொண்டுவர யாராலும் இயலாது.தன்னுடைய

முறை வரும்போது மரணத்திலிருந்து தப்புபவர்கள் யாரும் இல்லை.

ஶ்ரீ ராம பிரான்

Xxx

வியாபாரத்தில் லாபம் ஏற்படலாம். நஷ்டமும் ஏற்படலாம்.ஆனால்

சத்சங்கத்தால் லாபம் மட்டுமே கிடைக்கும். நஷ்டம் என்பதே

கிடையாது.

சுவாமி ராம் சுக் தாஸ்

Xxxx

சாதுவுடன் சேர்ந்து சோளத்தவிட்டையும் சாப்பிடலாம்.ஆனால் சரக்கரை

பொங்கல் பாயசம் கிடைத்தாலும் பொல்லாதவனுடன் போக க்கூடாது.

மகான் கபீர் தாஸர்

xxx

மகாத்மாக்களுடனும்,சாதுக்களுடனுமே சேர்ந்திருப்பது சத்சங்கமாகும்.

இதை மனிதன் உறுதியுடன் செய்து வந்தால் அவன் இரும்பு நிலையிலிருந்து தங்கமாகி விடுவான்.

ஒரு மகானின் உபதேசம்

Xxx

கங்கை நதி பாவத்தைப் போக்கும்.

மதிநிலா உஷ்ணத்தை போக்கும்.

கற்பக மரம் வறுமையை போக்கும்.

ஆனால் சாதுக்களின் சேர்க்கை பாவம்,தாபம்,வறுமை

ஆகிய மூன்றையும் உடனே போக்கும்.

சுபாஷிதம்

Xxx

நாரதர் தனது சுய சரிதையை வியாசரிடம் கூறும்போது,அவர் முந்திய

கல்பத்தில் சாதுக்களுக்கு பணிவிடை செய்ததையும் அதன் காரணமாக

அவரகளுடைய கிருபைக்கு பாத்திரமாகி அடுத்த பிறவியில் தேவ ரிஷி ஆனதையும் குறிப்பிடுகிறார்

ஶ்ரீமத் பாகவதம்

Xxxx

ஒருவன் ஆன்மீக சாதனைகள் செய்வது தானே பணம் சம்பாதிப்பது

போன்றது. சத் சங்கம் என்பது பணக்கார ருக்கு த த்து போவது போன்றது்

சவீகாரம் போபவன் யாரோ சேர்த்து வைக்கப் பட்ட செலவத்தை

அடைகிறான்.

அதுபோலவே சத்சங்கம் சேர்பவன் சாதனை செய்யாமலே சாதனை

செய்து முடித்தவனாகிறான்.

சுவாமி ராம் சுக் தாஸ்

–subham —

Tags- தெய்வீக மொழிகள் -92 ,அக்ஞானம் ,  நல்ல பாம்பு, ஆசை , முதலை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: