Post No. 11,099
Date uploaded in London – – 13 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
சந்தோஷமாக இருப்போமே!
ச.நாகராஜன்
சந்தோஷம் என்பது வாழ்க்கை சூழ்நிலை, மரபணு ஆக்கம், நமது வெற்றிகள், திருமண நிலை, சமூக உறவுகள் ஆகிய அனைத்தாலும் உருவாக்கப்படும் ஒன்று.
ஆனால் சந்தோஷமாக இருப்பது என்பது ஒருவரின் சுய கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
சிறு சிறு சந்தோஷம் அளிக்கும் விஷயங்களில் ஈடுபடுவது, சவால் விடும் வேலைகளில் ஈடுபட்டு ஜெயிப்பது, குறிக்கோள் ஒன்றை நிர்ணயித்து அதை நோக்கி நடைபோட்டு அதை அடைவது, சமுக உறவுகளை மேம்படுத்து அது எப்போதுமே சிதையாமல் பாதுகாப்பது, வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன என்பதை அலசி ஆராய்ந்து நிர்ணயிப்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களே ஒருவரின் சந்தோஷத்தை நிர்ணயிக்கிறது.
எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஒருவரைப் பார்த்தால் நமக்கும் சந்தோஷம் வரும்.
சரி அப்படிப்பட்ட நபரிடம் எந்தெந்த குணாதிசயங்களைக் காண முடியும்?
இதோ இருக்கிறது பட்டியல்!
- புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பார்.
- எளிமையாக இருப்பார்; பொறுமையாக இருப்பார்
- மனம் விட்டுச் சிரிப்பார்; எப்போதும் புன்முறுவல் பூத்த முகம் கொண்டிருப்பார்.
- காலத்திற்கேற்ப அதனுடன் நீந்திச் செல்வார்.
- அளவில்லா தயை காட்டுவார்
- நன்றி மறக்க மாட்டார்
- தன் உடல்நலத்தைப் பேணி பாதுகாப்பார்; உடல் பயிற்சி உள்ளிட்டவற்றில் அக்கறை கொண்டு ஈடுபடுவார்.
- அனைவருடனும் ஆரோக்கியமான பழக்கம் கொள்வார்.
- மற்றவர்களுக்காக சந்தோஷப்படுவார்; அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்பார்.
- அனைவருக்கும் கொடுப்பார். மற்றவர் தருவதை வாங்கிக் கொள்வார்.
- வாழ்க்கையில் அடிநாதமாக உள்ள ஒரு குறிக்கோளுடன் வாழ்வார்.
- குறைந்த எதிர்பார்ப்புகளை மட்டுமே கொண்டிருப்பார். வருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்.
- ஒருபோதும் மற்றவரை இழிவாகப் பேசமாட்டார்; திட்ட மாட்டார்.
- எந்த ஒருவரின் மீதும் ஆத்திரம் கொண்டு மனதில் வன்மம் வைக்க மாட்டார்.
- எடுத்ததற்கெல்லாம் எரிச்சல் பட மாட்டார்.
- நேற்று நடந்ததைப் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்; நாளை நடக்கப்போவதைப் பற்றி எண்ணி எண்ணி கவலைப்பட மாட்டார்.
- வம்புச் சண்டை மூட்டி விட்டு மகிழ மாட்டார்; அதில் ஆதாயம் பார்க்க மாட்டார்.
- அவர் பெரிய தியாகி என்ற பட்டப்பெயரை விரும்பவும் மாட்டார்; யாருடைய தீய செயலுக்கும் பலியாகவும் மாட்டார்.
- மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அள்ளித் த்ர தயங்கவே மாட்டார்; அவர்கள் சந்தோஷம் அதிகப்படப் பட இவரது சந்தோஷமும் அதிகரிக்கும்.
நவீன அறிவியல் உளவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் 1-3-86 அன்று tamilandvedas.com இல் வெளியான எனது கட்டுரையான (கட்டுரை எண் 2586)
‘நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!’ என்ற கட்டுரையைப் படித்து அதில் சொல்லப்படும் கருத்துக்களை இந்த அறிவியல் கூற்றுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் நாரதருக்கும் ஸமங்கருக்கும் நடந்த ஸம்வாதத்தை இதில் பார்க்கலாம். அத்துடன் ஜி.ஆர்.ஜோஸ்யரிடம்
மைசூர் மஹாராஜா, சர் சி.பி.ராமஸ்வாமி ஐயர் போன்றோர்
சம்ஸ்க்ருத ஞானத்தை வெளியிடுமாறு ஆலோசனை கூறவே அவர் சான்ஸ்க்ரிட் விஸ்டம்’ (Sanskrit Wisdom) என்ற சிறு நூலை (160 பக்கம்) வெளியிட்டார்.
அதில் இடம் பெறும் ஒரு விஷயம் – நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!
அதுவும் இந்தக் கட்டுரையில் இடம் பெறுகிறது.
ஆக அறிவியலும் நமது ஆன்மீக நூல்களும் எப்படி ஒத்துப் போகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படலாம்.
நாமும் தான் சந்தோஷமாக இருப்போமே!
**
குறிப்பு : சைக்காலஜி டு டே (Psychology Today) ஆங்கில இதழில் வந்த கட்டுரையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட குறிப்புகள்.
நன்றி : சைக்காலஜி டுடே
Tags- சந்தோஷம்