Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 11,106
Date uploaded in London – 15 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞானமொழிகள்– 94
அமைதி? அமைதி ?*
1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *மந்திரம்*.
2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *தந்திரம்*.
3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *இசை*.
4.பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *கடாக்ஷம்*.
5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – *யோகா*.
6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்.*
7.சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – *பிராணாயாமம்*.
8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – *குண்டலினி*.
9.இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*.
10.உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – *குடும்பம்*.
11.தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – *அன்பு*.
12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – *பக்தி*.
XXX
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது “யோகா”.
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது “தியானம்”.
யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே…!
XXX
தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !
இனி இவனை அடிக்க முடியாதுன்னு” பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான் திருமணம்!
XXX
மாப்பிள்ளை வீட்டில், “மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.
ஆனால்
பெண் வீட்டில் “பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.
XXXX
அடிக்கடி டீயோ, காபியோ கேட்கிறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
XXX
.
மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.
மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!!
. நிறைய “அதிகாரம்” இருப்பதால்.
2. நிறைய இடங்களில் “புரிந்தும், புரியாமலும்” இருப்பதால்
3. இரண்டு “அடி”யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்…..வாழ்க வளமுடன்!
சும்மா நகைச்சுவைக்காக போடப்பட்டது இந்த பதிவு!
*சிரிங்க பாஸ்*
XXX
TRANSLATION JOKES
மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.
இதோ அந்த பரீட்சை பேப்பர் .
ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க.
இங்கே சிறுநீர் கழிக்காதீர்
Don’t subtract small water here.
ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்
Six face multiplied the house
பாரத நாடு பழம்பெறும் நாடு
Bharath country fruit getting country
நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்
Tomorrow Kabaddi game will walk here
தமிழில் மொழி மாற்றம் செய்க.
Please bear with me
தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.
Watchman Checked my bag
கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.
எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.
குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.
Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது
ஏரிப் பாசனம் நன்று
Ans: இறங்கிப் பாசனம் நன்று…!!!
XXXX
கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ரூ. 250 கடன் வாங்கினான்.
சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு ரூ250மனைவியிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
சிலநாட்கள் பின் மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று ! குழம்பி போன கணவன் பல முறை மன்றாடி கேட்ட பிறகு,
மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை இதோ
.
1). *Rs. 2 5 0*
2). *Rs. 2 5 0*
——————
*Rs. 4 10 0*
——————
ஆக மொத்தம் ரூபாய் 4100.00
தொடர்ச்சி:
கணவன் முதலில் 100ரூ திருப்பித் தந்தான்.
4100
– 100
———-
4
———-
மறுநாள் 4 ரூ கொடுத்து மேற்சொன்ன கணக்குப்படி கடனை அடைத்து விட்டான்.
கொய்யால யார்கிட்ட!….
XXXX
—Subham—
Tags- ஞானமொழிகள்– 94
Alan Austin
/ July 15, 2022Please translate to English (all pumpkins ac/excepted,ha,ha.)