Post No. 11,113
Date uploaded in London – – 17 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஐந்திரம் என்னும் இலக்கணம் பற்றி நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துவிட்டேன். அதைப் பற்றிக் கதைப்பவர்களுக்கு தமிழில் ஐந்திரம் என்னும் சொல் இருப்பதும், தொல்காப்பியர் அதில் பெரிய அறிஞர் என்பதும் தெரியவே இல்லை. தமிழ் பற்றியோ, தொல்காப்பியர் பற்றியோ பேச்சு மூச்சு இல்லை !
தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் எழுதிய பாயிரம் இதோ:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
இதில் கூறப்படும் செய்தி : நிலம்தரு திருவில் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியது. நான்கு வேதங்களைக் கற்ற, சத்தியம் மட்டும் வாயில் தவழும் அதங்கோட்டு ஆசார்யார் , ஐந்திரம் அறிந்த தொல்காப்பியன் எழுதிய நூலுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார். அவர் குத்திய ‘அக்மார்க் முத்திரை’யால் திருப்பதிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையேயுள்ள தமிழ் கூறு நல்லுலகம் அதை ஏற்றுக்கொண்டது.
இதில் ஐந்திரம் என்பதற்கு இரண்டு பொருள் உள்ளது. ஓவிய நூல், இலக்கண நூல் (காண்க 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி மற்றும் சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி).
இந்திரன் எழுதியது என்பது வடமொழி இலக்கணப்படி ஐந்திரம் என்ற சொல்லாக உருப்பெறும்.
இந்த ஐந்திரம் பற்றி சம்ஸ்க்ருதத்தில் என்ன உள்ளது என்பதைக் காண்போம்.
உலகப் புகழ் பெற்ற பாரதியாரால் புகழப்பட்ட பாணினி, இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பாணினி வேறு ஆறு இலக்கண கர்த்தாக்களினின் பெயர்களை மட்டும் சொல்கிறார். அவருக்கு முன்னர் 64 இலக்கண வித்தகர் இருந்தனர் என்று சொல்லி அவர்களின் பெயர்களையும் சொல்கிறது வடமொழி இலக்கிய வரலாறு (அதில் இந்திரன் பெயர் இருக்கும் என்று நான் நம்புகிறேன்)
ஹர்ஷரின் நைஷத சரிதத்துக்கு வித்யாதரர் என்பவர் எழுதிய உரையில் , ஹர்ஷர் எல்லா துறைகளிலும் வல்லவர் என்று புகழ்கையில் அவர் எட்டு வகை இலக்கணங்களில் வல்லவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.
பாணினியின் இலக்கணத்துக்கு விரிவுரை கண்ட நூல்கள் குறைந்தது பத்து ஆகும். அவையாவன –
பாணினி எழுதிய வியாகரண நூல், அதாவது இலக்கண நூல், அஷ்டாத்யாயீ / எட்டு அத்தியாயங்கள் எனப்படும் . அதை நூல் எழுதிய ஆசிரியரின் பெயரில் பாணினீயம் என்றும் பகர்வர்
அதன் மீது எழுந்த உரை நூல்கள்
1.காத்யாயன வரருசியின் வார்த்திகம்
2.பதஞ்சலியின் மஹாபாஷ்யம்
3.பர்த்ருஹரியின் வாக்கபடீயம்
4.ஜயாதித்யர், வாமனர் ஆகிய இருவர் எழுதிய காசிகா வ்ருத்தி
5.ஜினேந்திர புத்தி எழுதிய ந்யாஸ
6.சரண தேவ எழுதிய துர்கத வ்ருத்தி
7.ராமசந்திர எழுதிய ப்ரக்ரிய கெளமுதி
8.பட்டோஜி தீக்ஷிதர் எழுதிய சித்தாந்த கெளமுதி
9.நாகேச எழுதிய பரி பாஷேந்து சேகர
10.நாகேச எழுதிய வல்யாகரான சித்தாந்த மஞ்சூஸா
இவைகளில் முதல் எட்டு நூல் களைத்தான் வித்யாதரர் ஹர்ஷர் படித்ததாகச் சொல்கிறாரோ என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் வித்யாதரர் உரை 13ம் நூற்றா ண்டைச் சேர்ந்தது; ராமசந்திர உரை 14ம் நூற்றா ண்டைச் சேர்ந்தது. ஆக மேற்கூறிய பட்டியலில் ஆறு உரைகள்தான் தேறு கின்றன.
வித்யாதரர் பயன்படுத்திய சொல் அஷ்டெள வியாகரணானி . ஆகையால் பாணிணிக்குப் பின்வந்த உரைகாரர் என்று பொருள்கொள்ளாமல் அக்காலத்தில் நிலவிய வெவ்வேறு எட்டு வகை வியாகரணம் என்று பொருள் கொண்டால் அவை என்ன என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்.
வித்யாதரர் உரையில் அவரே பல இடங்களில் காதந்தர வியாகரணம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
வோபதேவ என்பவர் கவி கல்பத்ரும நூலில் ஒரு ஸ்லோகத்தில் எட்டு வகை இலக்கணம் கிடைக்கிறது . அவையாவன
இந்த்ரஸ் சந்த்ரஹ காஸக்ருத்ஸ்னாபிசாலி சாகடாய
பாணீனியமரஜைநேந்த்ரா ஜயந்த்யாதிஷ்ட திஸாப்திகஹ
முதலில் வருவது இந்திரன் பெயர். அவர்தான் நாம் இப்போது சொல்லும் ஐந்த்ர இலக்கணத்தின் கர்த்தா என்று ஊகிக்கலாம் . ஆனால் அப்படி ஒரு இலக்கண நூலும் கிடைக்கவில்லை. யஜுர் வேதத்தின் தைத்ரீய சம்ஹிதைதான், ‘இந்திரனை இலக்கணம் எழுதியவர்’ என்று குறிப்பிடும் பழைய நூல்’ ஆகும்.
காசிநாதர் எழுதிய ஸாரஸ்வத வ்யாகரண பாஷ்யமும் ‘இந்திரனை இலக்கணம் படைத்தவர் என்று சொல்லும்
மேற்கூறிய ஸ்லோகம் குறிப்பிடும் இரண்டாவது இலக்கண கர்த்தா சந்திர என்பதாகும் .அவருடைய முழுப்பெயர் சந்திர கோஸ்வாமின். . அவர்படைத்த இலக்கணம் காஸ்மீர், திபெத், நேபாளம், இலங்கையில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிரதி ஒன்று திபெத்தில் கிடைத்தது. அதை 1902ல் ஜெர்மனி வெளியிட்டது .
மூன்றாவது பெயர் காச கிருத்ஸ்ணா ; அவர் பாணினிக்கும் முந்தியவர். காசிகா உரையில் அவர் குறிப்பிடப்படுகிறார்.; அவர் 3 அத்தியாயங்கள் கொண்ட நூலை எழுதினார்
நாலாவது பெயர் ஆபிஸாலி. அவருடைய இலக்கண விதிகளை பாணினியே குறிப்பிடுவதால், சம காலத்தவராகவோ முந்தியவராகவோ இருக்கலாம்.
அடுத்தவர் சாகடாயனர் . பாணினி, பதஞ்சலி , நிருக்தம் எழுதிய யாஸ்கர்
ஆகியோர் இவர் பெயரைக் குறிப்பிடுகின்றன.அவர் ஊனாதி சூத்திரங்களை எழுதி இருக்கலாம் .
(மற்றோர் சாகடாயனர் உண்டு 3200 சூத்திரங்கள் உடைய அந்த நூல் கி.பி.1025ல் எழுதப்பட்டது)
இவர்களுக்கு அடுத்தபடியாக பாணினியின் பெயர் வருகிறது ; உலகமே போற்றும் இலக்கண கர்த்தாவுக்கு அறிமுகம் தேவை இல்லை
அவருக்கு அடுத்தபடியாக வருவது அமர என்னும் பெயர் . அமரகோசம் என்னும் அகராதியை உலகம் அறியும். ஆனால் அது இலக்கண நூலன்று. அவரே ஒரு இலக்கண நூல் எழுதி அழிந்துபோனதா அல்லது வேறு ஒருவரா என்பது தெரியவில்லை ஒருசாரார் , அமரகோஷம் என்னும் அகராதியை வேத பாடசாலைகளில் , வியாகரணம் என்ற வுகுப்பில் சொல்லித் தருவதால் அதுவும் இலக்கண நூல் என்பர்.. அமரகோச நூலின் உண்மைப் பெயர் நாமலிங்கானுசாசனம் நாம NOUN , லிங்க GENDER ஆகிய இரண்டும் இலக்கணத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் ஆகும்.. பதஞ்சலி கூட சப்தானுசாசனம் பற்றிப் பேசுகிறார்.
கடைசி பெயர் ஜைநேந்த்ர என்பதாகும் . ஒரு சமண முனிவர் இதை சமணர்களுக்காக எழுதி இருக்கலாம்; வோபதேவ என்பவர் ஜினேந்திர என்ற பெயரில் ஒரு இலக்கண கர்த்தா இருந்ததாகவே எண்ணுகிறார். திகம்பர வகுப்பு ஜைனர்கள் மஹாவீரர் இலக்கணம் எழுதி இந்திரனுக்கு சொல்லிக்கொடுத்ததாகவும் கதைப்பார்கள்.
பூஜ்யபாத தேவநந்தி என்பவர் எழுதிய ஒரு இலக்கண நூலை காசியிலுள்ள பாரதீய ஞான பீடம் 1956-ல் வெளியிட்டுள்ளது
xxx
பவிஷ்ய புராணத்திலும் எட்டு வகையான இலக்கணங்கள் பற்றிய ஸ்லோகங்கள் உள்ளன . ஆனால் அவர்கள் எல்லோரும் கடவுளர்கள் – பிரம்மா, இந்திரன், யமன், ருத்ரன், வாயு, வருணன், சவிதா, விஷ்ணு என்னும் எட்டுப் பேர் ஆவர் .
காதந்த்ர இலக்கணத்துக்கு கெளமார இலக்கணம், கலாப இலக்கணம் என்ற பெயர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
1568 வரை இலக்கண நூல்கள் எழுந்தன. ஸ்ரீ மல்லதேவ என்ற அஸ்ஸாம்/ காமரூப மன்னரின் ஆதரவில் புருஷோத்தம பட்டாச்சார்ய வித்யா வாகீச எழுதிய ‘பிரயோக ரத்னமாலா வியாகரண’ நூல் குறிப்பிடத்தக்கது .
நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் தோன்றியமையும், 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினிக்கு முன்னர் 64 பேர் இருந்ததும், பாணினியே ஆறு பேரைக் குறிப்பிடுவதாலும், சம்ஸ்க்ருத மொழி பல்லாயிரம் ஆண்டு பழமையுடையதென்பதும் சொல்லாமேயே விளங்கும். உலகில் சீன, தமிழ், கிரேக்க, பாரசீக , அவஸ்தன், எபிரேய/ஹீப்ரு , லத்தீன் மொழிகளுக்கு இப்படிப்பட்ட இலக்கண வரலாறு இல்லை என்பதும் குறிப்பிட்டது தக்கது.
–சுபம் —
tags- ஐந்திரம் , எட்டு இலக்கணங்கள்