Post No. 11,122
Date uploaded in London – – 20 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
இலக்கணம் பற்றி புலவர்கள் கருத்து
இலக்கியமின்றி யிலக்கணமின்றே
எள்ளின்றாயினெண் ணெயுமின்றே
எள்ளின் றெண்ணெயெடுப்பது போல
இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்
“ இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது ; எள் இல்லாமல் எண்ணெய் இல்லை என்பது போல.
எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்திலிருந்து இலக்கண ம் உண்டாகிறது” – பேரகத்தியம்
இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில்லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.
இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து பிறந்தவை!
உலகிலேயே இலக்கணத்துக்கு அதிக பெருமை சேர்த்தவர் இந்துக்களே. இப்போதுள்ள இலக்கண நூல்களில் உலகிலேயே பழைய புஸ்தகம் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் நூலாகும். இது 2700 ஆண்டுக்கு முந்தியது. அவர்க்கு முன்னர் வாழ்ந்த 64 இலக்கண கர்த்தாக்கள் பெயர்களும் நமக்கு கிடைக்கின்றன
வேதபாட சாலைகளில் வேதம் பயில்வோருக்கு ஆறு துணைப்பாடங்களைக் கற்பிக்கின்றனர். அவற்றில் ஒன்று வியாகரணம் ; தமிழில் இலக்கணம் என்போம்.
வேத மாதாவின் வாய் (முகம்) இலக்கணம் (வியாகரணம்) .
இது பற்றிய விளக்கமான உரை, காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின் தெய்வத்தின் குரலில் உள்ளது
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் பரத முனிவர் ஸம்ஸ்க்ருதத்தில் பரத நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அவர் சொல்கிறார் :_
“எல்லா சாஸ்திரங்களிலும் சொற்கள் உள்ளன. அவற்றின் குறிக்கோள் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பதுதான் .ஆகையால் மனிதனின் பேச்சை விட உயர்ந்தது எதுவுமில்லை. பேச்சுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகிறது” .
அவர் எழுதிய ஸ்லோகம்
வான்மயானீஹ சாஸ்த்ராணி
வாணீஸ்தானி ததைவ ச
தஸ்மாத் வாசஹ பரம் நாஸ்தி
வாக்கி ஸர்வஸ்ய காரணம்
—நாட்யசாஸ்த்ர 15-3
அவருக்குப் பின்னர் வந்த தண்டி என்ற புலவர் பாடுகிறார் –
“எல்லா மக்களும் பேச்சு என்பதன் அருளால் தான் உலக நடப்புகளைச் செய்கின்றனர் . அது உயர்ந்தோர் பலர் இயற்றிய இலக்கணத்தை ஒட்டி அமைகிறது “.
இதோ அவருடைய ஸ்லோகம் :–
இஹ சிஷ்டானுசி ஷ்டாநாம்
சிஷ்டாநாம் அபி ஸ ர்வதா
வாச்சாமேவ பிரசாதேன
லோகயாத்ரா ப்ரவர்த்ததே
—காவ்யாதர்ச , பாடல் 13
அவரே மேலும் அழுத்தம் திருத்தமாக , மிகவும் அழகாகச் சொல்கிறார் :
“சப்தம்/ஒலி Sound என்னும் ஒளி Light இந்த மக்கள் படைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிராவிடில் மூன்று உலகங்களும் இருள் என்னும் அந்தகாரத்தில் மூழ்கிப் போயிருக்கும்”.
இதம் அந்தம் தமஹ கிருஷ்ணம்
ஜாயேத புவனத்ரயம்
யதி ச ப்தாஹ்வண்யம் ஜ்யோதிர்
ஆஸம்ஸாரா ன்ன தீப்யதே
—காவ்யாதர்ச , பாடல் 14
உலகில் இந்துக்கள் போட்ட பாட திட்டம் (Syllabus) போல எங்குமே காணமுடியாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திரத்தில் பெண்கள் கற்கவேண்டிய 64 சப்ஜெக்ட்டு Subjects களை ஆய கலைகள் 64 என்று ஸம்ஸ்க்ருதத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவற்றைத் தமிழ்ப் புலவர்களும் அப்படியே ஏற்றனர். அந்த 64 கலைகளில் இலக்கணமும் ஒன்று. உலகில் வேறு எந்த நாகரீகமும் இப்படி பாடதிட்டம் வகுத்தது இல்லை.
பாமஹ என்னும் கவிஞர் எழுதிய காவ்யாலங்கார நூலில் செப்புகிறார் :
சப்தஸ் சந்தோ பிதானா ர்த்தா
இதிஹாசஸ் ரயஹ கதாஹ
லோகாயுக்தி கலாஸ்சேதி
மந்தவ்யாஹ காவ்யாகைர்வாசி
—காவ்யாலங்கார 1-9
“சப்த என்னும் சொல்லால் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறார் பாமஹர் .கவிதை என்னும் துறை வளர காரணமாய் விளங்குவது ஸப்த /இலக்கணம் ஆகும். கவிதை வளரத் தேவைப்படும் பல பாடங்களில் இலக்கணமே முதலிடம் வகிக்கிறது” என்கிறார் .
கவிதை எழுத விரும்புவோர் உடனே இலக்கணம் கற்பது இன்றியமையாதது என்று காவ்யாலங்கார நூலின் ஆறாவது அத்தியாயத்தில் முதல் நான்கு பாடல்களில் பாமஹர் நுவல்கிறார்.
4 பாடல்களின் பொருள் இதோ :-
“இலக்கணம் என்பது பெரிய கடல் ; அதை நீந்திக்கடக்காத வரை சொற்களை வைத்து நகைகள்/ அணிகள் செய்ய இயலாது. அந்தக் கடலில் உள்ள தண்ணீர் சூத்திரங்கள் ஆகும்; சொற்கள் என்பன நீர்ச் சுழல் போன்றவை .மனப்பாடம் செய்து, தக்க வைக்கும், நினைவாற்றல் கடற்படுகை ஆகும். உணாதி கணங்களும் தாது பாடமும் முதலைகள்; கவனமும் புரிதலும் பெரிய கப்பல்கள். இப்பேற்பட்ட கடலின் கரை படிப்பாளிகளுக்கு மட்டுமே தெரியும். அடி மக்குகளோ இதைப் புறக்கணிப்பர் ; மற்ற சாஸ்திரங்களை யானை போல அனுபவிப்பர். பாடல்களை இயற்ற விரும்புவோர் நேரடியாக இலக்கணத்தைக் கற்க வேண்டும் மற்றவர்களின் பலத்தைச் சார்ந்து நிற்கக் கூடாது.”
சூத்ராம் பஸாம் பதாவர்தம்
பாராயண ரசாதலாம்
தாதூணாதி கண க்ராஹம்
த்யான க்ரஹ ப்ருஹத் ப்லவாம்
தீரைர் ஆலோகித ப்ராந்தம்
அமெதோபிர் அஸூயிதாம்
சதோபபுக்தம் ஸர்வாபிர்
அந்யவித்யாகரேனுபிஹ க
நா பாரயித்வா துர்கதாம்
அ மும் வ்யாகரணார்ணவாம்
சப்த ரத்னம் ஸ்வயம் கம்யம்
அலங்கர்து மாயம் ஜன ஹ
தஸ்ய சா திகமே யத்னஹ
கார் யஹ காவ்யம் விதித்ஸதா
பர ப்ரத்ய யதோ யத்து
க்ரியதே தேன கா ரதிஹி
–காவ்யாலங்கார 6-1/4
SOURCE BOOK- Paniniyan Influence on Sanskrit Poetics, Shrutidhara Chakravarty, Pratibha Prakashan, Delhi, 2008 (with my inputs)
தொடரும் …………………………………………………………
இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய …
https://tamilandvedas.com › இலக்…
26 Jul 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). agastya-in-london. Agastya in London V and A Museum.
—Subham —-
TAGS– இலக்கணம் ,புலவர்கள் கருத்து, கடல், முதலைகள்