செப்பு மொழி இருபத்தியிரண்டு (Post No.11,126)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,126

Date uploaded in London – –    22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தியிரண்டு!

ச.நாகராஜன்

  1. இயற்கை, காலம், பொறுமை – இந்த மூன்றும் தான் பெரிய வைத்தியர்கள்!

In, Nature, Time and Patience are the three great Physicians.

2) இயற்கையின் ஒரு ஸ்பரிஸம் உலகனைத்தையும் உறவாக்கி விடுகிறது.     –     ஷேக்ஸ்பியர்

One touch of nature makes the world kin – Shakespeare

3) நெருஞ்சியை விதைப்பவன் நெருஞ்சி முள்ளையே அறுவடை செய்வான்.

He that sows thistles shall reap prickles

4) போருக்குப் போக ஒரு மணி நேரம் முன் பிரார்த்தனை செய்;

கடலில் இறங்க இரண்டு மணி நேரம் முன்னர் பிரார்த்தனை செய்;

திருமணத்திற்கென்றால் மூன்று மணி நேரம் முன்னர் பிரார்த்தனை செய்  – இந்தியப் பழமொழி

Pray one hour before going to war;

Two hours before going to sea,

And three hours before getting married.  – Indian proverb

5) கடவுள் மனித குலத்தைத் தூய்மைப் படுத்த நினைத்தான்; வக்கீல்களை அனுப்பினான்.  – ரஷிய பழமொழி

God wanted to chastise mankind, so he sent lawyers.  – Russian

6) உடல் நலத்துடன் இருக்கும் போதே வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பி.   – தாமஸ் ஃபுல்லர்

Study sickness while you are well.   – Thomas Fuller

7) கெட்ட மனிதர்கள் இல்லையென்றால் நல்ல வக்கீல்களே இருக்க மாட்டார்கள் – சார்லஸ் டிக்கன்ஸ்

If there were no bad people there would  be no good lawyers.  – Charles Dickens

8) சுருங்கிய பர்ஸ், சுருக்கங்கள் கொண்ட முகத்தை உருவாக்குகிறது. – பிரெஞ்சு பழமொழி

Wrinkled purses make wrinkled faces.  – French

9) ரோஜாவை விரும்புபவன் முள்ளை மதிக்க வேண்டும் – பெர்சிய பழமொழி

He who wants a rose must respect the thorn.  – Persian

10) நான் மிஸ்டர் ‘ரைட்’டை முதலில் சந்திக்கும் போது அவரது பெயரின் ஆரம்பம் “ஆல்வேஸ்” (எப்போதும்) என்பது தெரியாது! – ரீடா ருட்னர்

When I first met Mr Right  I had no idea that his first name was Always.  – Rita Rudner

11) என் மனைவியிடம் நான் பேசி பல வருடங்களாகி விட்டன. அவளை ஒரு போதும் குறுக்கிட்டுப் பேச நான் விரும்பவில்லை. – ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட்

I haven’t spoken to my wife in years. I didn’ want to interrupt her. – Rodney Dangerfield

12) உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் வயதாகி விட்டால் சில அடையாளங்கள் இருக்கும். நான் ஒரு கல்லறைப் பக்கம் போன போது இரண்டு ஆட்கள் மண்வெட்டியுடன் என் பின்னால் ஓடி வந்தார்கள் – ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட்

You know when you’re getting old, there are certain signs. I walked past a cemetery and two guys ran after me with shovels.   – Rodney Dangerfield

13) நான் ஒரு நீதிபதியால் மணம் செய்து வைக்கப்பட்டேன். ஜூரிகளை நான் கேட்டிருக்க வேண்டும்.  – க்ரௌச்சோ மார்க்ஸ்

I was married by a Judge, I should have asked for a jury. – Groucho Marx

14) ஒரு மரத்தை நடுபவன் தன்னை நேசிப்பதோடு மற்றவர்களையும் நேசித்தவன் ஆகிறான். – ஆங்கிலப் பழமொழி

He that plants trees loves others besides himself.  – English

15) குழந்தைகள் ஏழைகளின் செல்வம் – ஆங்கிலப் பழமொழி

Children are poor men’s riches. – English

16) வரதட்சிணை எங்கு இருக்கிறதோ, அங்கு அபாயம் இருக்கிறது – அயர்லாந்து பழமொழி

Where there is dowry, there is danger.  – Irish

17) அனுபவமே ஒரே ஆசான்

Experience is the only teacher.

18) வியாதியை விட பெரும்பாலும் டாக்டரைப் பார்த்துத் தான் பயப்பட வேண்டும். – பிரெஞ்சு பழமொழி

The doctor is often more to be feared than the disease. – French

19) வைத்தியர்கள் அதிகம் பணம் செலவழிக்க வைக்கும் விருந்தாளிகள்.

Physicians are costly visitors.

20) ஒரு பூ மாலையாகாது. – பிரெஞ்சு பழமொழி

One flower will not make a garland.   – French

21) திருமணம் செய்து வைக்கப்பட நான் விரும்புகிறேன். வாழ்க்கை முழுவதும் எரிச்சலூட்ட ஒரு விசேஷ ஆசாமியை கண்டு பிடிப்பது ஒரு பெரிய விஷயம் தானே! – ரீடா ருட்னர்

I love being married. It’s so great to find that one special person you want to annoy for the rest of your life. – Rita Rudner.

22)  சமுத்திரத்தைப் புகழ்ந்து பேசு; ஆனால் நிலத்தை வைத்துக் கொள்.

Praise the sea but keep on land.

***

புத்தக அறிமுகம் – 5

சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும்

ச.நாகராஜன்

https://pustaka-assets.s3.ap-south-1.amazonaws.com/tam/cover/literature/sanga-ilakkiyathil-anthanarum-vedhamum.jpg

பொருளடக்கம்

என்னுரை

1. திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

2. திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

3. நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !

4. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 1

5. புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2

6. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3

7. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 4

8. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 5

9. பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

10. பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும்!

11. குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும்!

12. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்!

13. அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை!

14. பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

15.பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

16. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

17. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

18.பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4

19. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5

20. பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !

21. பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!

நூலில் எனது உரையாகத் தந்திருப்பது இது:

என்னுரை

தமிழை வளர்ப்போர் என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொண்டு தன் வயிற்றையும் குடும்பத்தையும் வளர்ப்போர், அத்தோடு நில்லாமல் பல தவறான கருத்துக்களைத் தமிழ் சமுதாயத்தில் விதைத்து பிளவையும் வெறுப்பையும் தூண்டி விடுவதைக் கண்டு திடுக்கிடுகின்றோம்.

இதற்கென பல புத்தகங்களை சங்க இலக்கிய ஆய்வுரைகள் என்ற பெயரில் வெளியிட்டு அதில் தமது கருத்துக்களைப் புகுத்தி அதை அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர்.

இந்தக் கருத்துக்கள் பல்வேறு விதமாக இளம் சிறார்கள் மத்தியிலும் விதைக்கப்படுகின்றன.

பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்றும் வேதம் கவைக்குதவாத ஒன்று என்றும் இவர்களது ஆய்வு முடிவுகள் அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டே இருக்கும்.

சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இவர்களது பொய்க் கூற்றுகள் வெளிச்சத்திற்கு வந்து விடும்.

பல ஆண்டுகளாக சங்க இலக்கியம் அந்தணரையும் வேதத்தையும் தரும் பல செய்திகளைத் தொகுத்துத் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஒரு அன்பர் தனது விமரிசனத்தால் இந்தக் கருத்தை வலுப்படுத்தித் தூண்டி விட்டார்.

தொடர் உருவானது.

‘மெக்காலே மாடல்’ என்று சொல்லப்படும் ‘இந்தியாவை பிளவு படுத்தும் சதியைப்’ பற்றி இப்போது அனைவரும் அறிவர்.

மாக்ஸ்முல்லர் விதைத்த பிரிவினை வாதக் கொள்கை பற்றியும் இப்போது அனைவரும் அறிவர்.

மாக்ஸ்ம்ல்லர் மர்மம் என்ற எனது ஆய்வு நூலில் பல உண்மைகள் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளன.

ஆரிய- திராவிட வாதம் என்பது அடிப்படையற்றது.

இதைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளில் தெளிவாகக் கூறுகிறார்.

அவரது கட்டுரைகளில் சில பகுதிகளைக் கீழே காணலாம் :

“தமிழ் இலக்கியம் கண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இந்தப் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்றும் வடக்கேயிருந்து வந்து புகுந்து கொண்டவர்கள் என்றும் வெறும் வம்பு பேசுகின்றோம்.”

“சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழியாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணும் அவளுடைய கணவன் சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர்களா? உக்ரபாண்டியன் ஆட்சியில் கடைச் சங்கத்தில் பல பார்ப்பனப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர்களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர்களா?”

இப்படி ஏராளமான வாதங்களை முன் வைத்து ஆரிய திராவிட வாதத்தைப் பொடி பொடி ஆக்குகிறார் நாமக்கல் கவிஞர்.

அடுத்து 2009ஆம் ஆண்டு ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் ஆய்வாளர்களும் இந்திய இயல் பற்றிய ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகளும் ஆரிய – திராவிட வாதம் அடிப்படையற்றது என்பதை அறிவியல் அடிப்படையில் கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

ஐந்து லட்சம் மரபு சார் அணுக்களை 25 குழுக்களிலிருந்து 132 தனி நபர்களிடம் ஆராய்ந்து அவர்கள் தம் முடிவை வெளியிட்டுள்ளனர்.

அவர்களது ஆய்வு பற்றிய செய்தியை 25-9-2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா விரிவாக வெளியிட்டுள்ளது.

(The study was conducted by CCMB in collaboration with Harvard Medical School, Harvard School of Public Health and the Broad Institute of Harvard and MIT).

ஆக ஆரியர், திராவிடர், பிராமணர், பிராமணர் அல்லாதார் போன்ற கருத்துக்கள் பிரிவினையை உண்டு பண்ணி தமிழ்ச் சமுதாயத்தை அழிக்க நினைப்பவரின் சதியே என்பது நிரூபணமாகிறது.

அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம்.

அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டோர்; வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று.

பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இவை.

சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சங்க இலக்கியங்களில் அந்தணர் போற்றப்படுவதையும் வேதம் மிகவும் மதிக்கப்படுவதையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும்.

அனைவரும் பொய்களைப் புறம் தள்ளி உண்மைகளைக் கண்டறிந்து அவற்றைப் பரப்புவோம்.

ஏக பாரதத்தை என்றும் நிலை நிறுத்துவோம்.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

நன்றி.

பங்களூர்
4-4-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: