செப்பு மொழி இருபத்திமூன்று! (Post No.11,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,132

Date uploaded in London – –    24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்திமூன்று!

ச.நாகராஜன்

  1.  சத்தியம் தனது காலணியை அணிந்து கொள்வதற்குள் பொய் உலகெங்கும் சுற்றி விடுகிறது – பிரெஞ்சு பழமொழி

A lie travels round the world while truth is putting her boots on – French

  •  எவன் நிறைய அறிந்திருக்கிறானோ அவன் குறைவாகவே பேசுகிறான் – ஸ்பானிய பழமொழி                              Who knows most speaks less – Spanish
  • ஒரு அறிவாளி ஒரு வார்த்தையைக் கேட்கிறான், இரண்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்கிறான். – யிட்டிஷ் பழமொழி

        A wiseman hears one word and understands two. Yiddish

  • கந்தல்துணிகள் தான் பேப்பரை உருவாக்குகின்றன,

பேப்பர் தான் பணத்தை உருவாக்குகிறது,

பணம் தான் வங்கிகளை உருவாக்குகிறது,

வங்கிகள் தான் கடனை உருவாக்குகிறது,

கடன் தான் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறது,

பிச்சைக்காரர்கள் தான் கந்தைத் துணிகளை உருவாக்குகின்றனர்!

Rags make paper,

Paper makes money,

Money makes banks,

Banks make loans,

             Loans make beggars

             Beggers make rags

  • பணம் சேர்ப்பது ஒரு கலை அல்ல, அதைப் பாதுகாப்பது தான் கலை!

The art is not making money, but in keeping it.

  • பழமையாக எதெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் நான் விரும்புகிறேன்,

பழைய நண்பர்கள், பழைய காலம்,                       பழைய பழக்க வழக்கங்கள்,                              பழைய புத்தகங்கள், பழைய ஒயின்….    ஆலிவர் கோல்ட்ஸ்மித்

     I love everything that is old                                                 

     Old friends, old times,                                                   

     old manners, Old books, old wines…..      – Oliver Goldsmith

  • மாமியார் உனக்கு கல்யாணம் ஆகும் போது கிடைக்கும் பரம்பரைச் சொத்து!  – ஆங்கிலப் பழமொழி

A mother-in-law is what you inherit when you marry – English

  • இன்று என்பது நேற்றைய தினத்தின் மாணாக்கன்.

Today is yesterday’s pupil.

  • புன்னகை இல்லாத மனிதன் ஒரு கடையைத் திறக்கக் கூடாது.

A man without a smiling face must not open a shop

  1. ஒரு கடையைத் திறப்பது சுலபமான விஷயம்; அதைத் திறந்தே வைத்து நடத்துவதோ ஒரு கலை!

To opend a shop is easy, to keep it open is an art.

  1. ஒரு கால் உடையவன் தடுக்கி விழுவதே இல்லை.                The one legged never stumble.
  1. நண்பர்களை அடைவது நரகத்தில் கூட நல்லது.                 It is good to have friends even in hell.
  1. எல்லா அந்நியர்களும் ஒருவருக்கொருவர் உறவினரே.          All strangers are relations to each other.

அயர்லாந்து பழமொழிகள் (14 முதல் 23 முடிய)

  1.    என்னுடைய ‘இன்று’ நேற்றை விட நல்லதாக இருக்கலாம், ஆனால் நாளையை விட நல்லதாக இருக்க முடியாது.         May today be better than yesterday, but, not as good as tomorrow. …
  1. நிதானமானன ஒருவன் இதயத்தில் எதை வைத்திருக்கிறானோ அதை குடிகாரன் உதடுகளில் வைத்திருக்கிறான்.               What a sober man has in his heart, the drunk has on his lips. …
  1. அதிர்ஷ்டம் ஒரு போதும் கொடுப்பதில்லை; அது கடனாகத் தான் தருகிறது.                                                  Luck never gives; it only lends. …
  1. கடந்த காலம் கணிக்கவே முடியாதது.                          The past is very unpredictable. …
  1. நீ எதைச் சொன்னாலும், அதைச் சொல்லாதே.                 Whatever you say, say nothing.
  1.  கூட வரும் ஒருவன் கடக்கும் தூரத்தைச் சிறிதாக்குகிறான்.     A companion shortens a road.
  • தூக்கம், மீண்டு வருவதன் முதல் அறிகுறி.                     Sleep is the first sign of recovery.
  • அன்பும் சிரிப்பும் உன் நாட்களை பிரகாசமுடையதாக ஆக்கட்டும்.   May love and laughter light your days, …
  • கடனை மறப்பது அதைத் திருப்பிக் கொடுத்ததாக ஆகி விடாது. Forgetting a debt doesn’t mean it’s paid.
  • நல்ல வார்த்தை ஒரு போதும் பல்லை உடைக்காது.        

                 A good word never broke a tooth.

xxxx

புத்தக அறிமுகம் – 7

தமிழ் என்னும் விந்தையில்

(வி) சித்திர கவி விளக்கம்

ச.நாகராஜன்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

அத்தியாயங்கள்

தமிழ் என்னும் விந்தை! – 1 – சதுரங்க பந்தம் -1

தமிழ் என்னும் விந்தை! – 2 – சதுரங்க பந்தம் – 2

தமிழ் என்னும் விந்தை! – 3 – சதுரங்க பந்தம் -3

தமிழ் என்னும் விந்தை! – 4 – சதுரங்க பந்தம் -4

தமிழ் என்னும் விந்தை! – 5 – சதுரங்க பந்தம் – 5

தமிழ் என்னும் விந்தை! – 6 – சதுரங்க பந்தம் – 6

தமிழ் என்னும் விந்தை! – 7 – சதுரங்க பந்தம் – 7

தமிழ் என்னும் விந்தை! – 8 – சதுரங்க பந்தம் – 8

தமிழ் என்னும் விந்தை! – 9 – சதுரங்க பந்தம் – 9

தமிழ் என்னும் விந்தை! – 10 – சதுரங்க பந்தம் – 10

தமிழ் என்னும் விந்தை! – 11 – சதுரங்க பந்தம் – 11

தமிழ் என்னும் விந்தை! -12 – சருப்பதோபத்திரம் – 1

தமிழ் என்னும் விந்தை! -13 – சருப்பதோபத்திரம் – 2

தமிழ் என்னும் விந்தை! -14 – சருப்பதோபத்திரம் – 3

தமிழ் என்னும் விந்தை! -15 – சருப்பதோபத்திரம் – 4

தமிழ் என்னும் விந்தை! -16 – கூட சதுர்த்தம் – 1

தமிழ் என்னும் விந்தை! -17 – கூட சதுர்த்தம் – 2

தமிழ் என்னும் விந்தை! -18 – கோமூத்திரி – 1

தமிழ் என்னும் விந்தை! -19 – கோமூத்திரி – 2

தமிழ் என்னும் விந்தை! -20 – மாலைமாற்று – 1

தமிழ் என்னும் விந்தை! -21 – மாலைமாற்று – 2

தமிழ் என்னும் விந்தை! -22 – சுழிகுளம் – 1

தமிழ் என்னும் விந்தை! -23 – சுழிகுளம் – 2

தமிழ் என்னும் விந்தை! -24 – திரிபங்கி – 1

தமிழ் என்னும் விந்தை! -25 – திரிபங்கி – 2

தமிழ் என்னும் விந்தை! -26 – பேசுவதெல்லாம் கவிதை!

தமிழ் என்னும் விந்தை! -27 –தமிழ் என்னும் விந்தைக் கடல்!

அணிந்துரை

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி,
மேனாள் விரிவுரையாளர்( பணிநிறைவு),
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ர்

தமிழ்மொழி காலந்தோறும் கற்றறிந்தார்க்கு அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்ந்துவருகிறது. இன்று பன்மொழி கற்கவேண்டிய தேவையும் சூழலும் பெருகியுள்ளது. இந்நிலையில் 

‘நாமமது தமிழரெனக்’ கொண்டிருந்தும் – தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் மிகப்பலர் இம்மொழியின் பெருமை உணராது கற்க விருப்பம் இல்லாது உள்ளனர். இச்சூழலில் ஐயா சந்தானம் நாகராஜன் அவர்களின் ‘தமிழ் என்னும் விந்தையில்(வி)சித்திரகவி விளக்கம்’ என்னும் நூல் வெளிவருவது தமிழின் மாண்பை எடுத்துரைக்கும் முயற்சி மட்டுமன்று; அதனைக் கட்டிக்காக்கும் முயற்சியும் ஆகும்.

வாழ்க்கைக்காகப் பொறியியல் கற்ற நூலாசிரியர் வாழ்வுக்காக வளமார் தமிழைப் பழுதறக் கற்றவர்! நெஞ்சை நிறைக்கும் தஞ்சைமண்ணிலே தமிழ்ப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். தேசப்பற்று மிக்க குடும்பத்தின் வாரிசான இவரிடம் தேசநேசமும் மொழிநேசமும் இல்லாது போய்விடுமா? அந்த நேசத்தால் தமிழை விந்தைமொழி எனக் கொண்டாடி மகிழ்கிறார். தமிழை அவர் விந்தைமொழியாகக் கண்டதற்கும் காட்டியதற்கும் காரணங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தமிழில் அமைந்துள்ள சித்திரகவி என்னும் கவிவகை. சித்திரகவி இவருக்கு விசித்திர கவியாகவே தோன்றுகிறது! இவர் சமஸ்கிருதம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என இந்திய மொழிகள் பலவற்றுடன் ஆங்கிலமும் கற்றவர் என்ற கருத்தை உளங்கொண்டு சிந்திக்கையில் இவருக்குச் சித்திரகவி எவ்வாறு விசித்திரகவியானது என்பதை நம்மால் உணரமுடிகிறது. பன்னூற்பயிற்சிமிக்க இவர் ஒப்பீட்டுப்பார்வையுடன் சித்திரகவி விசித்திரகவியான விந்தையைத் தம்நூலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

‘சித்திரகவி விளக்கம்’ என்னும் பரிதிமாற்கலைஞரின் நூலுக்கு எளியமுறையில் விளக்கம் தருகிறார் நூலாசிரியர் நாகராஜன். நாகராஜன் அவர்களின் நூலைப்பற்றிப் பேசுமுன் பரிதிமாற்கலைஞரின் நூல் எழுந்ததன் பின்னணியை அறிவது அவசியமாகும். அப்போதுதான் நாகராஜன் அவர்கள் எத்தகைய உழைப்பை மூலதனமாக்கி மெனக்கெட்டு இந்த நூலுக்காகப் பாடுபட்டிருக்கிறார் என்பதை நாம் உணரமுடியும்.

கி.பி.1897 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்குரிய நூல்களில் தண்டியலங்காரத்தின் சொல்லணியியல் பாடமாக வைக்கப்பட்டது. சுத்தமான பாடத்தோடு கூடிய தண்டியலங்காரப்பிரதி கிடைத்தற்கு அரிதாயிருந்தது. மேலும் சித்திரகவிதைகள் இன்னின்னவாறு தீட்டப்படவேண்டும்; இன்னின்ன எழுத்துகள் இன்னின்னவாறு அமைக்கவேண்டும் என்பது புலப்படாததால் தம் மாணாக்கர்கள் இடர்ப்படக்கூடாது என்னும் நோக்கில் சித்திரகவிகளின் இயல்புகளை விளக்கிப் பரிதிமாற்கலைஞர் எழுதிய நூலே சித்திரகவி விளக்கம் என்பதை இந்நூலின் பதிப்புரை வழியே அறிகிறோம். பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ்த்தொண்டினைப் பேசும் பெரும்பாலான இலக்கியவரலாறுகள் ‘சித்திரகவி விளக்கம்’ என்னும் நூலைக் குறிப்பிடவே இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் நூலை உருவாக்கிய பேராசிரியர் மது.ச. விமலானந்தம் “இவர் யாத்த தனிப்பாடல்கள் – தனிப்பாசுரத்தொகை; ஆங்கிலத்தில் போப் ஐயர் பெயர்த்துள்ளார். சித்திரக்கவிகள் சில புனைந்துள்ளார்” (ப-483) என்று மட்டுமே எழுதுகிறார். பரிதிமாற்கலைஞரின் சித்திரகவி விளக்கத்தில் அகச்சான்றாகப் பரிதிமாற்கலைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் உதாரணச் செய்யுள்களுக்கு உரையும் வரைந்து சேர்த்து அன்னாரின் மகன் வி.சூ.சுவாமிநாதன் அவர்கள் முயற்சியால் 1939இல் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அரிய இந்த நூலுக்கு விளக்கம் எழுதி மேலும் எளிமைப்படுத்தி உள்ளார் திரு நாகராஜன் அவர்கள்.

சித்திரகவிதையை யாப்பிலக்கணத்தின் மணிமுடி’ என்று கூறுவது தவறாகாது. சித்திரகவிதையை எழுதுவதற்கும், அதைப்படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஆழ்ந்த யாப்பறிவு இன்றியமையாதது. சதுரங்க பந்தத்திற்கு 11 வகையான விளக்கங்களும்,சருப்பதோபத்திரம் என்னும் சித்திரகவிக்கு 4 வகை விளக்கங்களும், கூட சதுர்த்தம், கோமூத்திரி, மாலைமாற்று, சுழிகுளம், திரிபங்கி என்பனவற்றுக்கு முறையே இரண்டிரண்டு வகை விளக்கங்களும் தந்து விளக்கியுள்ளார். விளக்கத்துக்கு விளக்கம் எழுதுவது கடினமான வேலையா என்று சிலர் யோசிக்கலாம். ஆம்! உண்மையில் கடினமான வேலைதான். இதனைச்செய்வதற்கு அறிதலும் புரிதலும் அடிப்படை. இவற்றுக்கும் மேலாக இவரின் கணிதஅறிவும் சிந்தனைத்திறனும் பெரிதும் உதவியுள்ளன. குறுக்கெழுத்துப்போட்டி போன்று இவரே முயன்று பல புதிர்களை விடுவித்துள்ளார். சதுரங்க துரககதி பந்தம் என்னும் வகையை உதாரணமாக எடுத்துக்கொண்டு பரிதிமாற்கலைஞரின் சித்திரகவியில் கட்டங்களில் எழுத்துகள் இருக்க அவற்றுக்கு எண்கள் கொடுத்துக் குதிரைப்பாய்ச்சலை விளக்க முயல்கிறார்.

இவருடைய இந்த நூல் வழி பல புதிய தகவல்களை நாம் பெற முடிகிறது. 1911இல் வெளிவந்த ‘நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து’ என்னும் நூல் விளக்கக்குறிப்புரையுடனும் சித்திரக்கோட்டங்களுடனும் ‘நகுலேச ஸ்தோத்திரம்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ள செய்தியையும் இந்நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப்பிரசித்த நோத்தரி மயிலிட்டி க.மயில்வாகனப்பிள்ளை என்பதையும், இந்நூல் மறுபதிப்பாக 2004இல் தேன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது எனவும் அறிகிறோம். இன்றளவும் பழமைக்கு உள்ள மதிப்பைப்புரிந்துகொள்கிறோம். பழமை தானே புதுமைக்கு வித்திடுகிறது?

சித்திரகவிகள் வெறும் புலமைச் சித்திரங்கள் மட்டுமல்ல; அவை மந்திர ஆற்றல் வாய்ந்தவை என்பதற்குப் பாம்பன் சுவாமிகளின் சித்திரகவிதைகளை எடுத்துக்காட்டுகிறார். மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போன்ற புலவர் பெருமக்கள் தமக்குள் மொழிவிளையாட்டுகளின் வாயிலாகப் புலமைவிளையாட்டுகளையும் நடத்தி உள்ளதை அறியும்போது இன்றைய கற்றல் கற்பித்தல் சூழலில் பயன்படும் புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி போன்றவற்றின் தொன்மையையும் அவை நமக்குப் புதிதல்ல என்பதையும் இந்நூல் கூறுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள சித்திரகவிகளையும் ஆங்கிலத்தில் உள்ள குறுக்கெழுத்துப்போட்டியையும் உதாரணம் காட்டி விளக்குகிறார். சதுரங்கவிளையாட்டுக் குறித்து விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்டுத் தம் புரிதலை விசாலப்படுத்திக்கொண்டு சதுரங்கபந்தத்தை விளக்க முனைகிறார்.

இந்த நூலில் தமக்கு விளங்காத பகுதிகளை நேர்மையாகச் சொல்வதன் மூலம் புதிய ஆய்வுமுயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் வழிகாட்டுகிறார் எனலாம். சித்திரகவிகளைப் பற்றிய இவருடைய தேடல் இன்னும் தொடர்கிறது. சிங்கப்பூரில் உள்ளவற்றையும் நூலாசிரியர் என்னிடம் கேட்டுள்ளார். இவருடைய ஆய்வுத்தாகம் வருங்காலத் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டகத் திகழும் பெற்றி வாய்ந்தது. நூலாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்
முனைவர் எம் எஸ் சிங்கப்பூர் ஸ்ரீலக்ஷ்மி
சிங்கப்பூர்.

ஜனவரி 2022

*

புத்தகத்தில் என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

இப்பாடல்கள் www.tamilandvedas.com லும் வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.

இந்த நூலுக்கு அழகியதொரு அணிந்துரையை சிங்கப்பூரில் வசிக்கும் முனைவர் திருமதி எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி அளித்துள்ளார். அவர் தமிழின் பல் சுவையைக் கண்டவர். எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழகம்,சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட ஆகப் பெரிய பெரும் கல்வி நிலையங்களில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்துத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். மலாய், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி வல்லுநரான இவர் 33 அரும் நூல்களைப் படைத்துள்ளார். இவற்றில் சில பல்கலைக் கழகப் பாட நூல்களாகும். 150க்கும் மேற்பட்ட பிரமிக்க வைக்கும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். கதாசிரியர்; ஒரு கவிஞரும் கூட. பல பயிலரங்குகளை நடத்தி வருபவர். இவர் 17 விருதுகளைப் பெற்றதில் வியப்பே இல்லை. தமிழுக்குத் தொடர்ந்து அரும்பணி ஆற்றிவரும் இவர் என்னை கௌரவித்து அணிந்துரை அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: