WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,139
Date uploaded in London – – 26 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்!
ச.நாகராஜன்
உலகமே பயப்படும் கொடிய வியாதியான கான்ஸர் எத்தனை பேரைக் கொன்றிருக்கிறது என்பதற்குக் கணக்கே இல்லை.
இந்த வியாதிக்கு ஒரு மருந்தே இல்லை போலும் என்று நினைத்திருந்த சமயத்தில் தான் தனது அரிய ஆராய்ச்சி மூலம் ஒரு நம்பிக்கையைத் தந்தார் ஜேன் ரைட் என்னும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி! (தோற்றம் : 20, நவம்பர் 1919 மறைவு 19, பிப்ரவரி 2013) (
அமெரிக்காவில் மன்ஹாட்டனில் ஜேன் பரம்பரையான டாக்டர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தாக்களான சியா கெட்சம் ரைட் (Ceah Ketcham Wright)மற்றும் வில்லியம் ஃப்லெட்சர் (William Fletcher) ஆகியோர் டாக்டர்களே! ஜேனின் தந்தையான லூயி டாம்கின்ஸ் ரைட் (Louis Tompkins Wright)ந்ஒரு தேர்ந்த சர்ஜன். கான்ஸரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ந்து வந்தவர்.
இந்தப் பரம்பரையில் வந்தவர் தான் ஜேன்; என்றாலும் கூட அவருக்கு நல்ல ஓவியராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. ஆனால் அவரது தந்தை தான் அவரை மெடிகல் படிக்கலாமே என்று யோசனை கூறினார்.
உடனே வைத்தியத் துறையில் இறங்கினார் அவர். முப்பது வயது ஆரம்பிக்கும் போது அவர் கான்ஸரைப் பற்றி ஆராய ஆரம்பித்தார். 1952இல் ஹார்லெம் மருத்துவமனையில் கான்ஸர் ரிஸர்ச் ஃபவுண்டேஷனின் டைரக்டராக ஆனார்.
கேன்ஸர் வியாதியினால் பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் பொருந்தும்படியான ஒரு மருந்து இல்லை என்பது தான் அவரது முடிவு.
கான்ஸரைப் பரப்பும் செல்களை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது தான் அவரது ஆய்வின் ஒரே நோக்கம்.
1945ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கான்ஸர் ஆய்வு மையத்தின் இயக்குநர் இந்த பிரச்சினையை அழகாக இப்படிச் சொன்னார்: “ இடது காதை பங்கப்படுத்தினாலும் வலது காதை அப்படியே பங்கமில்லாமல் வைக்க முடிவது எப்படி என்பதற்கான ஒரு ஏஜண்டை நாம் கண்டுபிடிக்க வேண்டும்!”
ஒரு இரசாயன ஆயுதத்தைக் கையில் எடுத்து கான்ஸரைத் தாக்க முடியுமா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை என்று தெரிய வந்தது.
கான்ஸர் கிருமிகள் எப்படிப் பரவுகின்றன என்பதே தெரியாத நிலை!
அப்போது கான்ஸர் வியாதிக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு விபத்து கான்ஸர் வியாதியைத் தீர்க்க வழியைக் காட்டியது!
1943ஆம் ஆண்டு கடுகு வாயுவை (mustard gas) ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கடற்படைக் கப்பல், விபத்து ஏற்பட கடலில் மூழ்கியது. கப்பல் கடலில் மூழ்கும் போது கடுகு வாயு வெளிப்படவே அதனால் பாதிக்கப்பட்டு ஏராளமான வீரர்கள் இறந்தனர்.
அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு வரப்பட்டன.
அப்போது ஒரு விஷயம் வெளிப்பட்டது.
தொற்றுவியாதி பரவுவதைத் தடுக்கும் வெள்ளை அணுக்கள் அவர்கள் உடலில் சிதிலமாகி இருந்தன. இந்த செல்கள் தான் லூகேமியா நோயாளிகளிடம் கான்ஸரைப் பரப்பவும் காரணமாக அமைந்திருந்தன.
1946இல் முதன்முதலாக ஒரு கான்ஸர் நோயாளிக்கு ஊசி மூலம் நைட்ரஜன் மஸ்டர்ட் செலுத்தப்பட்டது. அதில் சற்று குணம் காணப்பட்டது.
அதிலிருந்து கான்ஸர் வியாதிக்கான சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வரலானார் ஜேன்.
மார்பகப் புற்று நோய்க்குத் தரப்படும் மருந்து கோலன் புற்று நோய்க்குச் சரிப்பட்டு வரவில்லை.
ஒவ்வொரு கேன்ஸர் நோயாளியையும் தீவிரமாக ஆராய வேண்டி இருந்தது.
ஆகவே சுமார் 22 வருடங்கள் ஒவ்வொரு நோயாளியையும் ஆராய்ந்து கொண்டே இருந்தார் ஜேன். ஒவ்வொரு நோயாளியின் கட்டியிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து அதைத் தன் சோதனைச்சாலையில் ஆராய ஆரம்பித்தார் அவர். டிஷ்யூ கல்சரில் அவரது ஆய்வு முடிவுகள் பெரிய பயனை கான்ஸர் சிகிச்சையில் தந்தது.
உலகம் கீமோ தெராபி (Chemo therapy) என்ற புதிய சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்க முடிந்தது.
அவர் கண்டுபிடித்த புதிய முறைகளைப் பற்றி அவரது இரு மகள்களுமே அறிந்திருக்கவில்லை.
அவர் இறந்த பின்னர் அவரது நோயாளிகளும் நண்பர்களும் அவரைப் புகழ்ந்து பேசிய போது தான் அவரைப் பற்றிய முழு விவரங்களும் உலகினருக்குத் தெரிய ஆரம்பித்தது.
1987இல் அவர் பணி ஒய்வு பெற்ற பின்னர் வண்ண ஓவியங்களிலும் மர்ம நாவல்கள் படிப்பதிலும், கடல்பயணம் செய்வதிலும் மனதைச் செலுத்தி மகிழ்ந்தார்.
2013ஆம் ஆண்டு நியூ ஜெர்ஸியில் குட்டன்பர்க்கில் தனது 93ஆம் வயதில் மன நிறைவுடன் அவர் மறைந்தார்.
தன் வாழ்க்கையில் எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை அவர் சாதித்த பின்னரே மறைந்தார்.
***
.
புத்தக அறிமுகம் – 9
நோய் தீர, இன்பம் சேர, வினை தேய தேவாரம், திருவாசகம்!
பொருளடக்கம்
திருஞானசம்பந்தர்
1. ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட் செயல்கள்!
2. அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!
4. ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல, நல்ல, நல்ல, நல்ல, நல்ல பதிகம்!
5. நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர் கவசம் அணிவோம்!
6. நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!
7. பிறவியை வேண்டும் பேரருளாளர்!
8. அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!
9. வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?
10. அப்பரின் அருமையான லாபரட்டரி!
11. தேவாரத்தில் வரும் தேனினும் இனிய சொற்கள்!
12. யமனுக்கு அப்பரின் பாராட்டும்
சுந்தரர்
மணிவாசகர்
20. இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!
சிவபிரகாசர்
21. ‘சிவ சிவ’ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!
உமாபதி சிவம்
22. சிவப் பிரசாதம், குருப்பிரசாதம்!
23. ஏறாத கொடியை ஏற்றுவித்த கொடிப்பாட்டு!
24. முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது!
25. உமாபதி சிவம் இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!
*
புத்தகத்தில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை
தமிழ் மொழி தெய்வ மொழி!
தெய்வத் தமிழின் பெருமையை உணர ஏராளமான பாடல்கள் உள்ளன.
பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட நூல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் தெய்வத் தமிழின் பெருமையை உணர்வதோடு இறைவனின் திருவருளையும் பெறலாம்.
உலகியல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பேறுகளை தர வல்லது பன்னிரு திருமுறைப் பாடல்கள்.
செல்வம் பெருகும். நோய் தீரும். வினை தேயும். சிவனருள் கிட்டும். அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெருகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை ஞான ஆலயம், www.tamilandvedas.com உள்ளிட்ட பத்திரிகைகள், ப்ளாக்குகளில் எழுதி வந்தேன்.
அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
கட்டுரைகள் வெளியாகி வந்த போது படித்துப் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சளா ரமேஷ், லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தேவார, திருவாசகத்தை ஓதி அனைத்து நல் பேறுகளையும் பெற இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நன்றி.
பங்களூர்
ச.நாகராஜன்
11-4-2022
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852