சமண மதக் கதைகள்- தங்கச் சுரங்கமும் , கபிலனும் (Post No.11,140)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,140

Date uploaded in London – –    26 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகில் இரண்டு மஹாவீரர்கள்தான் உண்டு. ஒருவர் ஜெய வீர ஆஞ்சநேயன் (ஹனுமான்); மற்றொருவர் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் ஆன மஹாவீரர். புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்று அவ்வைப்பாட்டி கூறியது போல இவர்கள் இருவரும் ஜிதேந்த்ரியன் ; அதாவது இந்திரியங்களை– புலன்களை — வென்ற மகா வீரர்கள்; அவர்களின் சிலைகளை பார்த்தாலேயே நமக்கும் புலன் அடக்கம் வந்து விடும்.

புத்தர் எப்படி மக்கள் பேசிய பாலி மொழியில் பேசினாரா அதே போல மஹாவீரர் அவர் மாநிலமான பீஹாரில் வழங்கிய அர்த்தமாகதி மொழியில் பேசினார். பாலி , அர்த்தமாகதி என்பனவெல்லாம் சமஸ்கிருதத்தின் கிளை மொழிகள். சம்ஸ்க்ருதம் றிந்ததோர் அவைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம். மஹாவீரர் அர்த்த மாகதி மொழியில் சொன்ன விஷயங்கள் ஸ்லோகங்களாக, மஹாவீர வசனாம்ருதம் என்று தொகுக்கப்பட்டுள்ளன (வசன+ அம்ருதம் = வசனாம்ருதம் ).

அதிலிருந்து இரண்டு கதைகளைக் காண்போம்.

சில வர்த்தகர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஆன்றோர் மொழிக்கு இணங்க செல்வம் தேடிப்  புறப்பட்டனர் . அவர்கள் அதிர்ஷ்டம் , முதலில் ஒரு இரும்புச் சுரங்கத்தைக் கண்டார்கள். உடனே சாக்குகள் நிறைய (Iron ores) இரும்புத் தாதுக்களை நிரப்பி இழுத்து வந்தனர் . பல மைல்கள் கடந்து வந்த பின்னர் காரீய (Lead) சுரங்கத்தைக் கண்டனர். உடனேயே இரும்புச் சாக்குகளை விட்டு விட்டு ஈயச் சாக்குகளை சுமந்து வந்தனர். பின்னர் தாமிரச் (Copper) சுரங்கத்தைக் கண்டனர். அட, இதற்கு இன்னும் விலை மதிப்பு அதிகம். ஆகையால் ஈயத்தை எல்லாம் கொட்டிவிட்டு தாமிரத்தை எடுத்துச் செல்வோம் என்று தாமிரத் தாதுக்கள் நிரம்பிய சாக்குகளை இழுத்து வந்தனர். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டும் இவற்றின் மதிப்பு பற்றி அறியாமல், பிறர் சொன்னதையும் கேளாமல், இரும்பை மட்டும் தொடர்ந்து சுமந்து வந்தான். பின்னர் அவர்கள் வெள்ளிச் (Silver Mine) சுரங்கத்துக்கு வந்தனர். கடைசியாக தங்கச் சுரங்கத்தைக்(Gold Mine)  கண்டனர். ஒவ்வொரு முறையும் முன்னதை விட மதிப்புமிக்க உலோகங்களைக் கண்டவுடன், பழைய மதிப்புக்குறைந்த உலோகங்களை விட்டு நல்லதை, விலை உயர்ந்ததை, எடுத்துச் சென்றனர். ஆனால் பிடிவாதக்காரனாக இருந்த ஒரு வணிகன் மட்டும் இரும்பைச் சுமந்து வந்து ஏமாந்தான் ; அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல என்றும் சொல்லாமாம் ; அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற பழமொழியையும் ஒப்பிடலாம்.

இதைச் சொல்லும் மஹாவீரர் ஸ்லோகம் ஒரு நீதியைப் போதிக்கிறது:

நல்ல மதக் கொள்கையை விட்டு வேறு ஒன்றை  நாடாதே .சின்ன விஷயங்களுக்காக பெரியதைத் தியாகம் செய்யாதே. அப்படிச் செய்தால் பின்னர் வருந்த நேரிடும்; எப்படி என்றால் இரும்பை மட்டும் சுமந்தவன் கதை போல .

இதோ அந்த அர்த்தமாகதி மொழி ஸ்லோகம் :

மா ஏயம்  அவமனந்தா அப்பே ணம்  லும்பஹா பஹும்

ஏயஸ்ச உ  அமோக்காயே அயோஹாரி  வ்வ ஜூரஹ

இந்தக் கதையை கேசி குமார சமண என்பவர் பாயேசி என்ற மன்னனுக்குச் சொன்னார். இது ராய பாஸேன ஜ்ஜம்  என்ற நூலில் உள்ளது.

XXX

கபில ப்ராஹ்மணன் கதை

ஜஹா லோஹோ  தஹா லோஹா லாஹா லோஹா பவத்தஈ

தோமாஸகயம் கஜ்ஜம் கோடீ ஏ  வி ந நிட்டியம்

“உனக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவுக்கு தேவையும் அதிகரிக்கும்; லாபம் கிடைக்கக்  கிடைக்க பேராசை வரும்;  இரண்டு மாச காசுகளுக்குச் செய்யக்கூடியதை  பத்து மில்லியன்/கோடி கிடைத்தாலும் செய்யமுடியாது”

மாச என்பது வேத காலம் முதல் இருந்து  வரும் தங்கக் காசின் பெயர்; இது பற்றிய கதையாவது :

கபிலன் என்ற பிராஹ்மணன் ஒரு அரசனிடம் சென்று இரண்டு ‘மாச காசுகள்’ தருமப்படி வேண்டினான். ஏன் இரண்டு காசுகள் மட்டும் கேட்கிறீர்கள்? என்று அரசன் கேட்கவே எனக்கு அவ்வளவுதான் தேவை என்கிறார். அ வருடைய  நேர்மையை மெச்சிய அரசன், ஓ பிராமணா ! நீ எவ்வளவு வேண்டுமானாலும் கேள்; நான்  தருகிறேன். உங்கள் வாய்மையைப்  பார்த்து  நான் வியப்படைகிறேன் என்றான் மன்னன்

உடனே கபிலர் மனதில் எண்ண அலைகள் எழுந்தன. நான் ஆயிரம் தங்கக் காசுகள் கேட்பேன்; இல்லை, இல்லை 10,000 தங்கக் காசுகள் கேட்கலாமே ! ஏன் , நூறாயிரம் காசுகள் கேட்டால் என்ன , அவர்தான் கொடுக்கிறேன் என்கிறாரே. இப்படி எண்ண அலைகளில் சிக்கிய அவருக்குத் திடீரென்று ஞானோதயம் உதித்தது. அடக்கடவுளே ! ஆசைக்கு அளவே இல்லை என்று ஆன்றோர்கள் செப்பினரே. நான்  இரண்டு மாச காசு கேட்க வந்ததே தப்பு , தவறு என்று எண்ணியவாறு அரசனிடம் Good Bye குட் பை சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அது மட்டுமல்லாமல் அந்த இடத்திலேயே ஒரு காவித் துணியை வாங்க்கிப் போட்டுக்கொண்டு சந்நியாசி ஆகிவிட்டார்.

இந்த இரண்டு கதைகளும் மஹா வீர வசன அம்ருத நூலின் விளக்க உரையில் உள்ளன.

–SUBHAM —

Tags-  சமண மதம், கதைகள், கபிலன், மாச , தங்கக் காசு, சுரங்கம், வெள்ளி, தங்கம், இரும்பு, வர்த்தகர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: