செப்பு மொழி இருபத்திநான்கு! (Post No.11,142)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,142

Date uploaded in London – –    27 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்திநான்கு!

ச.நாகராஜன்

1)      சிரிக்காமல் இருக்கும் நாள், சிதைந்த நாளே!  – சார்லி சாப்ளின்

A day without laughter is a day wasted.  – Charlie Chaplin

2)      மற்றவருக்கு நடக்கும் போது எல்லாமே வேடிக்கை தான்! – வில் ரோஜர்ஸ்

Everything is funny, as long as it’s happening to somebody else.  – Will Rogers

3)      சிரிப்பு என்பது உடனடி விடுமுறை  – மில்டன் பெர்லி

Laugher is an instant vacation. – Milton Berle

4)      இருவருக்கிடையே உள்ள குறுகிய தூரம் சிரிப்பு தான்! – விக்டர் போர்ஜ்

Laughter is the closest distance between two people. – Victor Borge

5)      சீரியஸாக இருப்பதை நகைச்சுவையாகக் காட்டிக் கொள்வதே காமடி. –

பெட் உஸ்டினோவ்

Comey is simply a funny way of being serious.   – Petr Ustinove

6)      தர்க்கம் முடங்கி இருக்கும் நிலையே நகைச்சுவை – க்ருஸோ மார்க்ஸ்

Humor is reason gone mad.   – Groucho Marx

7)      நடக்கும் ஒரு நிலையை உங்களால் மாற்ற முடியாது போகலாம். ஆனால் நகைச்சுவையுடன் அது பற்றிய உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளலாமே.   – ஆலன் க்லெய்ன்

You may not be able to change a situation, but with humor you can change your attitude about it.   – Allen Klein

8)      மனித மூளையிநன் பிரதானமான செயல்பாடு நகைச்சுவை தான்! – எட்வர்ட் டீ போனோ

Humor is by far the most significant activity of the human brain.  – Edward de Bono

9)   நகைச்சுவையை ஆராய்ந்து அலசுவது ஒரு தவளையை வெட்டிச் சோதனை செய்வது போலத் தான்! சிலருக்கு அப்படி செய்ய ஒரு ஆர்வம் உண்டு; விளைவு தவளை செத்துப் போகிறது. ஈ. பி.ஒய்ட்

Analyzing humor is like dissecting a frog. Few people are interested and the frog dies of it.  – E.B.White

10)  நகைச்சுவையின் ரகசியம் அது தரும் ஆச்சரியம் தான்! – டாக்டர் செயூஸ்

The secret to humor is surprise.   – Dr. Seuss

11)  மனித குலத்தின் மிகப் பெரிய வரபிரசாதம் நகைச்சுவையே. – மார்க்  ட்வெயின்

Humor is mankind’s greatest blessing.  – Mark Twain

 12)  பொது அறிவும் நகைச்சுவை உணர்வும் வெவ்வேறு வேகத்தில் போகும் ஒரே விஷயம் தான். நகைச்சுவை உணர்வு நடனமாடுகின்ற பொது அறிவு, அவ்வளவு தான்! – க்ளைவ் ஜேம்ஸ்

Common sense and a sense of humor are the same thing, moving at different speeds. A sense of humor is just common sense, dancing.   Clive James.

13)  காமடியின் கடமை வேடிக்கை காட்டி மனிதர்களைத் திருத்துவது தான்!  – மோலியர்

The duty of comedy is to correct men by amusing them.  – Moliere

 14) பழிவாங்கும் தன்மை என்னிடம் இருப்பதாக எனது சிகிச்சையாளர் என்னிடம் கூறுகிறார்! பார்த்துக் கொள்கிறேன், அவரை!

My therapist says I have a preoccupation for revenge. We’ll see about that.

15) எதுவும் சரிப்பட்டு நடக்காது என்று நினைப்பவனிடமே கடனை வாங்குங்கள். அவன் ஒரு நாளும் அது திரும்பி வரும் என்று நினைக்க மாட்டான்.

Always borrow money from a pessimist. They’ll never expect it back.

16) குண்டாக இருப்பது உங்கள் குடும்பத்தில் ஓடுகின்ற ஒரு விஷயம் என்பது பிரச்சினை அல்ல; உங்கள் குடும்பத்தில் யாருமே ஓடுவதில்லை என்பது தான் பிரச்சினை!

The problem isn’t that obesity runs in your family. It’s that no one runs in your family.

17) புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான விசை பற்றிய புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைக் கீழே வைக்கவே முடியவில்லை!

I’m reading a book about anti-gravity. It’s impossible to put down.

18) சமீபத்திய ஆய்வு ஒன்று, ‘கொஞ்சம் கூட உடல் எடை கொண்ட பெண்மணி அதைப் பற்றி அவளிடம் பேசும் ஆண் மகனை விட கூட வாழ் நாள் கொண்டிருப்பதை’ உறுதிப்படுத்துகிறது.

A recent study has found that women who carry a little extra weight live longer than the men who mention it.

19) நேற்று இரவு எனது காதலி நான் அவள் சொல்வதைச் சரியாக கேட்பதே இல்லை என்று புகார் கூறினாள். ஒரு நிமிடம்… அவள் அப்படித்தான் சொன்னாள் என்று  நினைக்கிறேன்!

Last night my girlfriend was complaining that I never listen to her… or something like that.

20) ஆடமும், ஈவும் தான் ஆப்பிளின் விதி மற்றும் நிபந்தனைகளைப் பற்றிக் கவலைப்படாத முதல் ஆசாமிகள்!

Adam & Eve were the first ones to ignore the Apple terms and conditions.

21) வேலையற்றவர் பற்றிய சில ஜோக்குகள் என்னிடம் இருக்கின்றன; ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.

I have a few jokes about unemployed people, but none of them work.

22)35க்கு மேல் பெண்கள் குழந்தைகளைப் பெறவே கூடாது; 35 குழந்தைகள் போதாதா, என்ன?!

“Women should not have children after 35. Really, 35 children are enough.”

23) நான் ஒரு வேலை தெரியாத மோசமான எலக்ட்ரீஷியன் என்பதை அறியும் போது பலரும் ஷாக்கிற்கு உள்ளாகிறார்கள்.

Most people are shocked when they find out how bad I am as an electrician.

24)  எல்லா நாட்களிலும் அதிகம் வீணாக்கும் நாள் சிரிப்பில்லாத நாளே! -ஈ ஈ கம்மிங்ஸ்

The most wasted of all days is one without laughter. – E E Cummings

***

 tags-நகைச்சுவை

புத்தக அறிமுகம் – 10

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்

பொருளடக்கம்

அணிந்துரை

முன்னுரை

1. இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 1

2. இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 2

3. இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 3

4. கண்ணதாசனின், இரு சொல் விந்தைகள்!

5. மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

6. கண்ணதாசனும் தி.ஜ.ர.வும்

7. கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?

8. க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! – 1

9. கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்!

10 கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்! – 2

11. கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

12. கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

13. கண்ணதாசனின் நல் – எண்ணதாசன் நான்!

14. தமிழன்னையிடமிருந்து கண்ணதாசன் பெற்றது!

15. தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் கண்ணதாசன்!

16. கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’!

17. அபிராமி அந்தாதியும் கண்ணதாசனின் விளக்கவுரையும்!

அணிந்துரை

இந்நூலாசிரியர் திரு நாகராஜன் அவர்கள் எனது இனிய நண்பர். பலரையும் பாராட்டும் பண்பு கொண்டவர். மெத்தப் படித்தவர். அனுபவசாலி. ஆனாலும், மிக எளிமையானவர். இவரின் தந்தை தேசபக்தர் மற்றும் இலக்கியவாதி. அவரின் மகனான இவர், 5000க்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என அளித்தவர். இன்னும், வலைத்தளம், youtube என பவனி வரும் இவரின் இலக்கிய பயணத்தில், இந்தப் புத்தகம் இன்னொரு மைல்கல் என்றால் மிகை ஆகாது.

புத்தகத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. திரு ராஜம் அய்யர், மஹாகவி பாரதி, பட்டுக்கோட்டை என்ற பட்டியலை விவரித்து, அதே போல, 54 வயதிற்குள்ளேயே, யாருமே எட்டாத சாதனைகளை தொட்டவர் கவியரசர் என்று கூறியது சிறப்பு.

“கண்ணதாசன்” – இந்த வார்த்தை, தமிழோடு மட்டுமல்ல, தமிழர்களோடு மட்டுமல்ல, மனிதர்கள் அனைவரின் உணர்வுகளோடு ஒன்றிப்பிணைந்த வார்த்தை என்றால் மிகை ஆகாது. காரணம், பிறப்பு முதல், இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விற்கும் பாடல் தந்த பெருமை கொண்டவர் கண்ணதாசன்.

ஒரு கவிஞனுக்குத் தேவை மூன்று விஷயங்கள். நம்பிக்கை, திறமை, துணிவு. பாரதியைப் போலவே, கண்ணதாசனுக்கும், இது நன்றாகவே அமைந்திருந்தது. அதனால்தான், மரணம் அவனை முத்தமிடுவதற்கு 20 வருடங்கள் வருடங்களுக்கு முன்னரேயே, நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று 

பாடினான். அவனுக்குப் பிடித்த தலைவர்களை எந்த அளவுக்கு உயரே தூக்கி வைத்தானோ, அவர்கள் கொள்கை மாறியபோது, அப்படியே அவர்களைத் தூக்கிப் போட்டான்.தான் கொண்ட தத்துவம் என்றும் மாறவில்லை – தலைவர்கள் மாறினார்கள், என்றே கூறினான். இப்படி அவன் செய்த போது குறிப்பிட்ட ஒரு கட்சியினர் செருப்பைத் தூக்கி எறிந்தபோது, கைகளில் பிடித்துக் கொண்டு பேசினான் – தலையில் உள்ளதை உபயோகிக்க தெரியாததால், காலில் உள்ளதை உபயோகிறார்கள் என்றான். அந்த அளவிற்கு, துணிச்சல் மற்றும் நம்பிக்கை, அவனிடம் நிறைந்திருந்தது. மதுபோதை மற்றும் மாது போதையில் தடுமாறியவன், என்றுமே புகழ் போதையில் நின்றதே இல்லை. எல்லாம், அந்த அன்னையின் அருள் என்றே கூறி வந்தான்.

கவிஅரசின் ஆற்றலை, அடுக்கடுக்கான நிகழ்வுகளை, அற்புதமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். பாரதியைப் போலத்தான் கவிஅரசும் என்று கூறி, அவனின் வார்த்தைகளுக்கு உள்ள சக்தியை –

கே ஆர் ராமசாமியின் பாட மாட்டேன் என்ற பாடலையும், இளையராஜா இசையமைக்க வந்த புதிதில் தான் எழுதிய பாடலையும் ஒப்பு நோக்கி இருப்பது சிறப்பு. வார்த்தைகளுக்கு VIBRATION உண்டு என்பது நிஜம்தானே. அதேபோல, கவியரசு ஒற்றை வார்த்தையை வைத்தே தமிழில் விளையாடினார் – தேன், பூ, காய், தான், நிலா எனப் பல. நூலாசிரியர், கவிஅரசின் இரு சொல் முத்திரை மூன்று சொல் முத்திரை எனப் பாடல்களை அடுக்கி இருக்கிறார். கண்ணதாசனின் முதற்பாடலான, கலங்காதிரு மனமே – கனவெல்லாம் நனவாகுமே என்ற பாடலே இரு சொல் முத்திரை என்பது புதிய செய்தி. அதேபோல, முத்தையாவின் (கவியரசு தான்) முத்தான மூன்று சொற்களை முத்துக் குளிக்க வாரீகளா என்று ஆரம்பித்து, வள்ளுவன் பாரதி பாடல்களை ஒப்பிட்டு இருப்பது குற்றால அருவியில் குளித்த சுகம். எழுத்தாளர் தி ஜ ர அவர்களைப் பாராட்டியது, அவரைத் தன் எழுத்து நடைக்கு முன்னோடியாகக் கொண்டது என்பதெல்லாம் சுவையான, புதிய செய்தி.

கவிஅரசின் காதல்,தத்துவப் பாடல்களை விதவிதமாய் விளக்கி வரும்போது, அவரின் அங்கதச் சுவையையும், சுவைப்படக் கூறியிருக்கிறார் ஆசிரியர். காற்றடிக்கும் போது, தென்னை மரம் ஏன் ஆடுகிறது தெரியுமா – தென்னையில் இருந்துதானே கள் வருகிறது என்பது ஒரு உதாரணம்.ஆம். தான் பல நேரங்களில் மது, மாது இவற்றுடன் இருப்பதைக்கூட, கவிஞர் தனக்கே உரிய பாணியில் கூறுவார் –

ஓர் கையில் மதுவும்
ஓர் கையில் மாதுவும்
சேர்ந்திருக்கும் வேளையில்
என் ஜீவன் பிரிந்தால்தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்

இல்லையேல்
ஏன் வாழ்க்கை என்றே
இறைவன் எனைக்
கேட்பான்

என்பதில் என்ன ஒரு அங்கதம்? இப்படி வாழவில்லையா என்று இறைவன் இவரைக் கேட்பானாம்!!

அதேபோல, காலங்கள் இருக்கும் வரை நிலைத்திருக்கும் கவிஞரின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் தலைப்பு தோன்றிய விதம், கதிரில் அதை படித்த மூதறிஞர் ராஜாஜி, கல்கி பத்திரிகைக்கு, கவிஞரை எழுத வைத்தது – கடைசிப்பக்கம் என கவிஞர் எழுதியது, தொடர்ந்து, பின்னாட்களில் சாகித்திய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி நாவலும் கல்கியில் எழுதியது எனப் பல சுவையான தகவல்கள் இந்தத் தலைமுறை அறியும்படி உள்ளது.

கவிஞரின் வார்த்தைகள் சத்தியமானவை என்பதற்கு, தமிழகம் மழையற்று இருந்த ஒரு நேரத்தில், அவரின்

ஞானம் தூங்கினால் நல்லறம் தூங்குமே
நல்லவர் தூங்கினால் நானிலம் தூங்குமே

என்ற கவிதையை நினைவு படுத்துகிறார். இந்தப் பாடல் எழுதி, பலர் வாசித்தபின், எதிர்பாராமல், மழை கொட்டியது என்பது தமிழகம் அறிந்த ஒன்று.

கவிஞரின் வனவாச (ஆரம்பகால) வாழ்வை, அருணகிரி, அப்பரடிகள், நாவுக்கரசர் இவர்களின் தொடக்க கால வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, கவிஞர், திராவிடமாயையிலிருந்து மீண்ட வரலாற்றை நயம்படக் கூறியிருக்கிறார். செத்தமொழி பெற்றமகன், தமிழைப் பார்த்து திணறுகிறார் என்றே வடமொழியைத் தாக்கி எழுதிய காலத்தை, முட்டாள்தனம் என வருந்தி, பிராயச்சித்தம் போல, வடமொழியில் கொஞ்சம் பயிற்சியும் பெற்றார். தமிழ் மொழி உயிர் – வடமொழி ஆத்மா என்று கவியரசு கூறிய சிறப்பைக் கூறியிருப்பது மிக அழகு. தொடர்ந்து தனது இனிய நண்பர் ஆஷா நடராஜன் அவர்களுடன் இணைந்து, பகவத் கீதை, பஜ கோவிந்தம், கீத கோவிந்தம், கனகதாரா ஸ்தோத்திரம் என பல வடமொழி நூல்களை தமிழ்ப் படுத்தினார், கவிஞர். அவரின் ஒரு வடமொழிப் பாடலும், கிருஷ்ணகானம் இசைத் தட்டில் இடம் பெற்றதைக் குறிப்பிடுகிறார் (அமர ஜீவிதம் – சுவாமி அமுத வாசகம் என்ற பாடல்)

நிறைவாக, பார்த்தது கோடி- பட்டது கோடி – சேர்த்தது என்ன! சிறந்த அனுபவம்! என்ற வரிகளைக் கோடிட்டு, இந்த எண்ணமே, கவிஞருக்கு, ஆன்மிகம், மற்றும் விரிந்த மனம், நம்பிக்கை, எதிர்காலம் என்பதையெல்லாம் காட்டியது என்கிறார். நான் ஒரு ஹிந்து என்று மிக

தைரியமாக, ஆணித்தரமாக, மனதின் குரலாக அவர் கூறி இருப்பதையும், நூலாசிரியர், அழகாக எடுத்து உரைக்கிறார். ஆம், கவிஞரின் –

நாளை பொழுது என்றும் நமக்கென
வாழ்க
அதை நடத்த ஒருவன் உண்டு
கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்ற நம்பிக்கை
கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப்
போல,

என்பது சத்தியமான வார்த்தைகள் தானே? இப்படி, பல்வேறு நேரங்களில், பல்வேறு கட்டுரைகள் எழுதியதை, ஒரு தொகுப்பாக, நூலாசிரியர் கொண்டு வந்திருப்பது, வாசமுள்ள மலர்களை வண்ணக் குவியலாக்கி, மணம் வீசும் மாலையாக்கித் தந்திருப்பது போல, படிப்போருக்கு மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை. நூலாசிரியர் இன்னும் பல நூல்கள் தந்து, மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் நான் வணங்கும் குருநாதரை வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்

20-12-2021

முனைவர் தென்காசி கணேசன்,
சென்னை 600092
(94447 94010)

புத்தகத்தில் எனது முன்னுரையில் ஒரு பகுதி இது:

முன்னுரை

இந்த நூலின் உள்ளே கவியரசனின் கவிதை ஜாலத்தைக் காண உங்களை அழைக்கிறேன். ஒரு பெரும் கடலில் சில துளிகளை இனம் காட்டியுள்ளேன், அவ்வளவு தான்!

இந்த நூலுக்கு அருமையானதொரு அணிந்துரையைத் தந்து என்னைக் கௌரவித்த எனது இனிய நண்பர் முனைவர் தென்காசி கணேசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு கணேசன் அவர்கள் டிவிஎஸ், அசோக் லேலண்ட் & எல்.டி. நிறுவனங்களில் மனித வளத்துறைப் பிரிவில் மேனாள் துணைப் பொது மேலாளர். ஆன்மீகப் பேச்சாளர், எழுத்தாளர். பல அமைப்புகளின் உயிர் நாடி. கண்ணதாசனின் ஊன்றித் தோய்ந்தவர். பல நூல்களை எழுதியவர்.

திரைப்படப் பாடல்கள் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம் இவர் என்றால் அது மிகையாகாது. அது மட்டுமல்ல, திரைப்படத் துறை சார்ந்த அனைவரையும் உரிய முறையில் பெரும் விழாக்கள் எடுத்து கௌரவிப்பவர். அவரது தமிழ் உணர்விற்கு மீண்டும் நன்றி.

இந்த நூலை அழகிய முறையில் வெளியிட முன் வந்திருக்கும் ‘Pustaka Digital Media’ உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

ச. நாகராஜன்
பெங்களூர்
21-12-2021

*.

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: