ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்! (Post No.11,146)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,146

Date uploaded in London – –    28 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்!

ச.நாகராஜன்

பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் அரசாட்சி செய்யும் போது அவன் அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தான்.

1799இல் அவன் அரியணை ஏறிய பின் ஏராளமான விஞ்ஞானிகளுக்குப் பரிசுகளையும் தங்க மெடல்களையும் வழங்க ஆரம்பித்தான்.

வானவியல் பற்றி ஆய்வு நடத்தியதற்காக லோலாண்ட் விருதை (Lolonde Prize in Astronomy) ஒரு சிறிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஒருவருக்கும், 6000 நக்ஷத்திரங்களைப் பட்டியலிட்ட ஒரு துறவிக்கும் அவன் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தான். ஒரு ஆங்கிலேயருக்கு வோல்டா விருது என்னும் விருதை மூன்று முறை வழங்கினான்.

அந்தக் காலத்தில் எர்னஸ்ட் ஃப்ளோரென்ஸ் கால்ட்னி என்பவர் ஒரு அரிய சோதனையைச் செய்து காட்டினார். அவர் ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி. ஒரு இரும்பினால் ஆன தடியின் மீது ஒரு மெல்லிய தகட்டை வைத்து அந்தத் தகட்டின் மேல் மெல்லிய மணல் துகளை அவர் பரப்பினார். அந்தத் தகட்டின் ஒரு பக்கத்தில் வயலினின் வில்லை வைத்து மேலும் கீழும் இழுக்க அதனால் ஏற்பட்ட ஒலி அதிர்வலைகளால் பல்வேறு வடிவங்கள் அந்தத் தகடில் உருவாக ஆரம்பித்தன.

இதனால் மிகவும் மகிழ்ந்து போன மன்னன் நெப்போலியன் அவரை பெரிதும் கௌரவித்தான்.

அத்தோடு இதை அறிவியல் பூர்வமாக விளக்குபவருக்குப் பரிசு அளிக்கவும் முன் வந்தான்.

அந்தப் பரிசை வென்றவர் தான் சோபி ஜெர்மெய்ன்  (Sophie Germain) என்ற பெண்மணி.

(1776-1831)

சோபி பாரிஸில் வளர்ந்து வந்தார். அவரது தந்தை ஒரு பட்டு வியாபாரி.

1789இல் பிரெஞ்சு புரட்சி வெடித்த போது அவருக்கு வயது 13 தான்.

கணிதத்தில் ஆழ்ந்து மூழ்கி இருந்த போது ஆர்க்கிமிடீஸ் கொல்லப்பட்டார் என்பதைப் படித்து வியந்து போன சோபி அப்படி என்ன கணிதத்தில் இருக்கிறது என்று பிரமித்து  கணிதத்தில் ஆர்வத்தைச் செலுத்தலானார்.

லத்தீன் மொழியில் வல்லவரான அவர் ஜாமெட்ரியில் தனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தலானார்.

நியூடன், யூலர் ஆகியோரின் நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.

1894இல் கஸ்பர்ட் மாங்கே (Gaspard Monge) என்பவர் இயற்பியல் மற்றும் பொறியியல்  கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஆனால் அதில் பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே சோபியால் அதில் சேர முடியவில்லை.

அதிக ஆர்வம் கொண்ட சோபி பல வித பாடக் குறிப்புகளைச் சேகரித்துத் தானே படிக்க ஆரம்பித்தார்.

தனது அறிவால் அந்தக் காலத்தின் பிரபல விஞ்ஞானிகளை பிரமிக்க வைத்தார்.

இந்தக் கால கட்டத்தில் தான் கால்ட்னி தனது கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவித்தார்.

இதைப் பற்றி ஆராய முன் வந்தார் சோபி.

தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இதற்கான தீர்வை கணித வடிவில் அவர் தந்தார்.

முதலில் அதற்குப் பரிசு வழங்கப்படவில்லை. 1813ஆம் ஆண்டு இரண்டாம் முறை தனது ஆய்வுப் பேப்பரை அவர் சமர்ப்பித்தார். அது அங்கீகரிக்கப்பட்டது. தனது ஆய்வை மேலும் தொடர்ந்த சோபி 1816இல் மூன்றாம் முறையாக விரிவான ஆய்வுப் பேப்பரைச் சமர்ப்பித்தார்.

பரிசையும் வென்றார்.

எலாஸ்டிக் ஸ்டர்க்ஸர்ஸ் (Elastic Structures and Numner Theoty( மற்றும் நம்பர் தியரி பற்றி விரிவான ஆய்வை அவர் மேற்கொண்டார். அதில் வியக்கவைக்கும் பங்களிப்பைச் செய்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மார்பகப் புற்று நோய் வியாதியால் அவர் பீடிக்கப்பட்டார்.

1831இல் தனது 55ஆம் வயதில் அவர் மறைந்தார்.

கணித மேதையாகத் திகழ்ந்த அவருக்கு பெண் என்ற காரணத்தால் கல்வி கற்பதில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிட்டி இருப்பின் உலகம் போற்றும் மேதையாக அவர் ஆகி இருக்கக் கூடும்!

என்றாலும் கூட மிக அதிசயமாக ஒலி அலைகளுக்கு ஒரு சக்தி உண்டு என்பதை நிரூபித்த கால்ட்னி காலத்தில் அவர் வாழ்ந்ததும் அதை கணிதவியல் மூலமாக விளக்கியதும் பெருமைக்குரிய ஒரு விஷயம் தான்!

உலகம் அறியாத இந்த மேதையை நாம் அறிந்து அவரைப் போற்றலாமே!

***

புத்தக அறிமுகம் – 11

12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள்!

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

சம்ஸ்கிருத இலக்கியம்

1. காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!

2. சம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!!!

3. சம்ஸ்கிருதத்தில் புதிர்க் கவிதைகள்! அழகியின் மேனியும், உதடுகள் அழுத்தும் போது கத்துவதும்!

4. ஏனடி கோபம் என் மேல்! கவர்ச்சிப் பாவையே!! – ஒரு காதலனின் புலம்பல்!!!

5. சங்கிலிருந்து எழும் கலாநிதி மண்டலம் : பேரழகியின் வர்ணனை!

6. வீ ணா நாதமோ, பேச்சோ, கலசமோ, மார்பகமோ, வாழைத் தண்டோ, தொடையோ, – அழகியின் அழகு தரும் அனுபவம்!

7. அழகு என்பது என்ன?

8. வளையல் ஓசையால் உன்னை என் தலைவி வரவேற்கவில்லையா நளனே!

9 ரதி ரஹஸியம் – காதல் விளையாட்டில் நடந்தது என்ன?

10. “ஓ, எனது காதலனின் மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்று!”

11. கேளிக்ரஹத்தில் (உல்லாச விளையாட்டு அறையில்) ஈருடல் ஓருடல் ஆனதோ!

12. கேளிக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும் கவிதை!

13. போஜ மன்னன் ரசித்த ஒரு காதல் கவிதை!

தமிழ் இலக்கியம்

14. நள தமயந்தி – சுவையான காதல் கதை!

15. கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!

16. தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!

17. மார்பகங்களுக்கேற்ற மார்பு இல்லையே : இளைஞனின் புலம்பல்!

18. ஆற்றைக் கடக்க உனக்குத் துணையாக வருபவர் யார்?

19. வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!

20. காதலில் டைம் -டைலேஷன்!

21. வாடைக் காற்று சுடுகின்ற வேளை!

22. காதலுடன் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்த நிலை!

23.மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!

ஆங்கில இலக்கியம்

24. மிகச் சிறந்த ஆங்கிலக் காதல் கவிதை எது?

பாடல் முதற்குறிப்பகராதி

*

புத்தகத்தில் நான் தந்த முன்னுரை இது:

முன்னுரை

இந்திய வாழ்க்கை முறையில் புருஷார்த்தங்கள் நான்கு.

அவையாவன : அறம் பொருள் இன்பம் வீடு.

இதில் அறத்தை மேற்கொண்டு அதன் வழியே பொருளை ஈட்டி இன்பம் துய்க்காத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

காதலைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை.

காதலை மையமாக வைத்து எழுகின்ற கதைகளும் உண்மைச் சம்பவங்களும் கோடானு கோடி!

காதலுக்காக மணிமுடியையே துறந்தார் எட்டாம் எட்வர்டு. எமனிடமிருந்தே சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி!

காதல் கவிதைகள் இல்லாத மொழிகளே உலகில் இல்லை.

சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக் கணக்கில் காதல் கவிதைகள் உள்ளன.

சிருங்கார ரஸத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த பூமி பாரத பூமி.

தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில இலக்கியங்கள் சுட்டிக் காட்டும் சில கவிதைகள் பற்றி அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுதி வந்தேன்.

அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தத் தொகுப்பை புத்தகமாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

இதைத் தொடராக வந்த போது இதைப் படித்து ஆதரவு தந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

பங்களூர்
15-3-2022

ச.நாகராஜன்

*.நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

TAGS- ஒலி அதிர்வு, சோபி ஜெர்மெய்ன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: