Post No. 11,153
Date uploaded in London – – 30 JULY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விழா நாட்கள் – ஆகஸ்ட் 1 ஆடிப்பூரம் /ஆண்டாள் பிறந்த தினம்; 3-ஆடிப்பெருக்கு , சிலருக்கு ரிக் உபாகர்மம்; 5-வரலெட்சுமி விரதம் ; 11- யஜுர் உபகர்மா சிலருக்கு ரிக் உபாகர்மம், ரக்ஷா பந்தன்; 12- காயத்ரீ ஜபம்; 13- ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை ; 15- சுதந்திர தினம் ; 19- ஜன்மாஷ்டமி ; கோகுலாஷ்டமி /கிருஷ்ணர் பிறந்த தினம் ; 20-ஸ்ரீ ஜயந்தி ; 31- கணேஷ் சதுர்த்தி
சுப முகூர்த்த தினங்கள்- ஆகஸ்ட் 21, 24, 29.
அமாவாசை – 26; பெளர்ணமி -11; ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 8, 22/23
Xxx
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
மணிமேகலை மேற்கோள்கள்
மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே
xxx
ஆகஸ்ட் 2 செவ்வாய்க் கிழமை
சோழ மன்னன் வேண்டியதால் அகத்தியர் தண்ணீர் கலசத்தைக்
கவிழ்க்கவும் காவிரி உற்பத்தி
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)
Xxx
ஆகஸ்ட் 3 புதன் கிழமை
காவிரி நதி ஜீவ நதி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை
xxxx
ஆகஸ்ட் 4 வியாழக் கிழமை
அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?
அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின் மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (மணி 25-228)
xxx
ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை
பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்
மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன் தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்
கன்னி ஏவலிற் காந்த மன்னவன் அமர முனிவன் அகத்தியன் ரனாது
துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25
xxxx
ஆகஸ்ட் 6 சனிக் கிழமை
யவனர்களும் தமிழர்களுடன் வேலை
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
xxxx
ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக் கிழமை
பசி வந்திட பத்தும் பறந்துபோகும்
குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)
xxxx
ஆகஸ்ட் 8 திங்கட் கிழமை
செல்வத்தின் பயனே ஈதல்
ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)
xxxx
ஆகஸ்ட் 9 செவ்வாய்க் கிழமை
அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?
கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை
xxxx
ஆகஸ்ட் 10 புதன் கிழமை
மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக (மணி 7-8)
xxxx
ஆகஸ்ட் 11 வியாழக் கிழமை
ஆறு அறிவு படைத்த மனிதன்
பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்
தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)
xxxxx
ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை
மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் உறுவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக (2-64)
xxx
ஆகஸ்ட் 13 சனிக் கிழமை
பூம்புகாரில் இந்திர விழா
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோளெடுத்த நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39
xxxx
ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக் கிழமை
மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?
காணார், கேளார், கால் முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)
Xxxx
ஆகஸ்ட் 15 திங்கட் கிழமை
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென காவலன் உரைக்கும்
xxx
ஆகஸ்ட் 16 செவ்வாய்க் கிழமை
வினையின் வந்தது வினைக்கு விளைவாது
புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
xxx
ஆகஸ்ட் 17 புதன் கிழமை
மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
xxx
ஆகஸ்ட் 18 வியாழக் கிழமை
பசிப்பிணி என்னும் பாவி
xxx
ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
xxx
ஆகஸ்ட் 20 சனிக் கிழமை
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
‘மனம் கவல் ஒழிக!’ என மந்திரம் கொடுத்ததும்
xxx
ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக் கிழமை
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன்
xxxx
ஆகஸ்ட் 22 திங்கட் கிழமை
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ ‘வான்பதி தன்னுள்
xxx
ஆகஸ்ட் 23 செவ்வாய்க் கிழமை
திரு விழை மூதூர் வாழ்க!’ என்று ஏத்தி
‘வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
xxx
ஆகஸ்ட் 24 புதன் கிழமை
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
xxx
ஆகஸ்ட் 25 வியாழக் கிழமை
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
xxx
ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் | 01-060 |
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் |
xxx
ஆகஸ்ட் 27 சனிக் கிழமை
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!’ என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு
xxx
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக் கிழமை
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி
xxx
ஆகஸ்ட் 29 திங்கட் கிழமை
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
xxx
ஆகஸ்ட் 30 செவ்வாய்க் கிழமை
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல’
xxxx
ஆகஸ்ட் 31 புதன் கிழமை
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும், | |
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் பிடவமும் தளவமும் முட முள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி 03-160 |
xxxxx
Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2022 காலண்டர்