மேலும் சில சமண சமய பொன்மொழிகள் (Post.11,152)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,152

Date uploaded in London – –    30 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மஹாவீர வசனாம்ருதம் என்ற நூலிலிருந்து மேலும் பல சுவையான பொன்மொழிகளைக் காண்போம். அர்த்தமாகதி  என்னும் பிராக்ருதக் கிளை மொழியில் அமைந்த ஸ்லோகங்கள் இவை:-

புச்சா வி தே பயாயா கிப்பம் கச்சந்தி அமரபவ ணாஇம்

ஜேஸிம் பிஓ தவோ ஸ ஞ்ஜமோ  ய கந்தீ ய பம்பசேரம்  ச

நல்ல குணங்களை அதாவது தவம், புலனடக்கம், பிரம்மச்சர்யம் , மன்னிக்கும் குணம் ஆகியவற்றை உடையோர் விரைவில் சொர்க்கலோகத்தை அடைவர்; வாழ்க்கையின் பிற்பாதியில் நல்லனவற்றை அடைந்தாலும் இது முடியும்.

XXX

இட்டீ ஜூஇ ஐஸோ வண்ணோ ஆ உம் ஸுஹமணு த்தரம்

புஜ்ஜோ ஜத்த மணுஸ்ஸேஸு  தத்த ஸே  உவ வஜ்ஜ இ

ஒருவனுடைய சொர்க்க லோக வாழ்வு முடிந்த பின்னர் (புண்ணியம் எல்லாம் செலவழிக்கப்பட்ட பின்னர்) அவன் செல்வச் செழிப்புள்ள, புகழும் பெயரும் உள்ள, குடும்பத்தில் பிறந்து நீண்டகாலம் சுகமாக வாழ்வான்.

இந்தக் கருத்து பகவத் கீதையிலும் உள்ளது.

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः।

शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते॥४१॥

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸா²ஸ்²வதீ​: ஸமா​:|

ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே யோக³ப்⁴ரஷ்டோऽபி⁴ஜாயதே ||6-41||

யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களையெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

अथवा योगिनामेव कुले भवति धीमताम्।

एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्॥४२॥

அத²வா யோகி³நாமேவ குலே ப⁴வதி தீ⁴மதாம்|

ஏதத்³தி⁴ து³ர்லப⁴தரம் லோகே ஜந்ம யதீ³த்³ருஸ²ம் ||6-42||

அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. 6-42

(கீதை ஸ்லோகங்கள் சங்கதம் வலைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி)

xxx

அட்டாவயம் ந ஸிக்கிஜ்ஜா  வேஹாஇயம்  ச  ணோவஏ

ஒரு சமணத் துறவி செஸ் /சதுரங்கம்/ சூதாட்டம்  ஆடுவதற்குக் கற்கக் கூடாது.;

 மதத்திற்கு  எதிராகப் பேசக் கூடாது .

XXX

ஸே ஹு சக்கூ மணுஸ்ஸாணம்  ஜே  கங்கா ஏ அந்த ஏ

அந்தேண  குரோ வஹ இ  சக்கம் அந்தேண லோட்டஇ

ஆசையின் விளிம்பில் வசிப்பவன் மனிதர்களின் கண் (வழிகாட்டி); ஒரு கத்தியானது அதன் விளிம்பில் உள்ளது ; ஒரு சக்கரமானது அதன் விளிம்பில் உள்ளது .

அதாவது கத்தியின் கூர்மையும், சக்கரத்தின் விரிசல் இல்லாத விளிம்பும் போல வழிகாட்டுபவன் (கண்) யார் என்றால் ஆசை அனைத்தையும் துறந்தவனே .

XXX

துல்லஹா உ முஹாதாஈ  முஹாஜீவீ வி துல்லஹா

முஹாதாஈ முஹாஜீவீதோ வி கச்சந்தி ஸோக்கஇம்

எதையும் எதிர்பாராமல், சுய நலமின்றி  கொடுப்போரும் , கொடுத்ததை என்ன, ஏது எனப்  பாராமல் ஏற்போரும் இந்த உலகில் அரிது . அவ்விரு வகையினரும் மரணத்திற்குப் பின்னர் உயர்நிலை அடைவர் .

XXX

ஸீஹம் ஜஹா குட்டமிஹா சரந்தா தூரே சரந்தி பரிஸங்கமணா

ஏவம் து மோஹாவி ஸமிக்க தம்மம்  தூரேன பாவம் பரிவஜ்ஜ ஏ ஜ்ஜா

சிங்கத்திடமிருந்து குட்டி மிருகங்கள், பயந்து கொண்டு ,  எப்படி விலகி ஓடுகின்றனவோ , அப்படி  புத்திசாலி மனிதன், விவேகத்துடன், பாவச் செயல்களிலிருந்து தொலைவில் செல்லவேண்டும்

XXX

ஜத்தேவ பாஸ கஇ துப்பஉத்தம் காஏண  வாயா அது மாணஸேணம்

தத்தேவ தீரோ படிஸாஹரேஜ்ஜா ஆஇண்ணஓ  கிப்பமிவ க்கலீனம்

மனம், மொழி, மெய்யினால் ஒரு தவறு செய்து விட்டோம் என்று கண்ட அந்த நொடியிலேயே , ஒரு துறவியானவன் , சேணத்தை / லகானைப் பிடித்திழுத்த குதிரை போல நின்றுவிட வேண்டும்..

அதாவது, உடனே நின்று, சிந்தித்துத் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும்

XXX

வேராஇம்  குவ்வஈ வேரிதஓ  வேரேஹிம் ரஜ்ஜஈ

பாவோ வகா ய ஆரம்பா துக்கபாஸா  ய அந்தஸோ

வெறுப்பவன் மற்றவர்களை வெறுத்துக் கொண்டே இருக்கிறான். (கொடியவன் கொடும் செயல்களையே செய்துகொண்டு இருக்கிறான் ). அதில் இன்பமும் அடைகிறான். ஆனால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதை அறிவதில்லை.அவை அவனுக்கு துன்பத்தை விளைவிக்குமென்பதையும் உணர்வதில்லை .

XXX

ஜஸம் கித்திம் ஸிலோகம் ச ஜா ய  வந்தண பூயணா

ஸவ்வ லோயம்ஸி ஜே காமா தம் விஜ்ஜம் பரி ஜாணியா

புகழ், கீர்த்தி, எல்லோரும் அறிந்தவன், பட்டங்கள், வணங்கப்படுபவன் , சுக போகங்கள் — இவை அனைத்தையும் ஒரு அறிவுள்ள மனிதன் தெரிந்துகொண்டு, பின்னர் துறக்க வேண்டும் .

அதாவது அவற்றின் செல்வாக்கு எவ்வளவு பெரிது என்று தெரிந்த பின்னரும், அதில் மயங்கி விடாமல்,  அவற்றை ஒதுக்கவேண்டும்.

XXX

நேரஇ யத்தாயே  கம்மம் பகரேத்தா நேரஇஏஸு உவ வஜ்ஜந்தி , தம் ஜஹா

மஹாரம்பயாஏ , மஹாபரிக்கஹயா ஏ பஞ்சிதியவஹேணம்   குணிமாஹேணம்

உயிரினங்கள் நரகத்தில் உழல்வதற்கு செய்வினையே/ கர்மனே  காரணம் ; அவையாவன : – மற்ற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் ( போர், படுகொலை); பொருள்களை குவித்தல் ( இது மற்றவர்களை கொள்ளை அடிப்பதாலேயே ஏற்படும்); ஐந்தறிவு  படைத்த உயிரினங்களைக் கொல்லுதல் ; மாமிஸம் சாப்பிடுதல் ;

XXX

குஸக்கமேத்தா இமே  காமா ஸன்னிருத்தம்மி  ஆஇயே

கரஸ ஹேஉம் புராகாஉம் ஜோகக் கேமம் ந ஸம்விதே

மனிதர்களின் குறுகிய ஆயுட்காலத்தில் , சுகபோகங்கள் என்பன ஒரு புல் முனையில் தொங்கும் நீர்த்த துளி போன்றதே ; பின்னர் ஏன் மனிதன் இதை உணர்ந்து மேல் நிலை அடைய மனித வாழ்வைப் பாதுகாத்துப்  பயன்படுத்துவதில்லை !

XXX

–SUBHAM–

சமண சமய பொன்மொழிகள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: