­­நிகமாந்த வேதாந்த தேசிகர் அருளிய கோதா ஸ்துதி (Post No.11,157)

WRITTEN BY Dr A.Narayanan, London

Post No. 11,157

Date uploaded in London – –    1 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதிய கோதா ஸ்துதியை, லண்டன் டாக்டர் ஏ. நாராயணன் தமிழில் கவிதை வடிவில் தந்துள்ளார். நாம் அனைவரும் ,திரு ஆடிப் பூரத்தன்று (1-8-2022)  இதை பக்தியுடன் துதித்து , ஆண்டாளின் அருளைப் பெற்று சகல செளபாக்கியங்களுடன் வாழ்வோமாக!

 ஸ்ரீரங்கநாதன் அருள் துணை .

விட்டுசித்தன் துழாய்  தோட்டத்தவதரித்தப் பூமகளே  ! 

விண்ணுலகச் சந்தனைத்தரு தழுவிய கற்பகக்கொடியே!

கண்ணுறங்கு மரவணைத்துயிலோன் கட்டளை மீறிய

மண்ணுலகோர் மீதவன் சினங்கொளாப் பொறுத்தருள

பெண்ணின் பெருமைவடிவாய் அரங்கனையார்த்தவளே                             1

கோதாத்துதி

வேதங்கள் போற்ற இயலாப் புகழெய்திய கோதைநாயகி 

வேதத்துக் கொப்பத் தமிழ் பாமாலை தொகுத்த வேதநாயகி

வேதவல்லியைத் துதிக்கத் துணிவிலா இவ்வேதியோனை 

கவிதைவடிவாய் நின் புகழ் பாட என் கைப்பிடித்தெழுதிய        

கவியரசியைக் காலமெல்லாமடி பணிவேனே                                                                      2

கோதையின் கொலுசு மணியோசைக் கேட்டனரங்கன்

ஒலித்ததிலோ அணங்கின் பெருமை கவிதை மொழியாக

ஓதிய வேங்கட நாதனுக்கு ஓதுவித்தவளோ கோதையாக

ஆழி கையேந்தா அரங்கன் மகிழ  ஆண்டாளும் மகிழ்ந்தாள்                                        3

கண்ணனின் பால லீலை கண்டதால் யமுனைக்கரைக் கேற்றமே

கரு நிறமான நீர் பெருகுகின்ற யமுனை கோதையின் தோற்றமே

கண்ணனே கோதை மொழிந்த யமுனைத்துறைவனாகக் கிட்டியதே

கண்ணனுபவம் யமுனை நீராடிய குருமார்களுக்குக் கோதையாலே           4

அணங்கணிந்த  பூ மாலைத் தன் கழுத்தைத்  தழுவ  அயருற்ற அரங்கன்

அடியவளாக வந்து  அவனை ஆண்டவளாக அவள் பாடிய  திருப்பாவையும்

நாச்சியார் திரு மொழியும் வீணை நாதமாயொலிக்கப் பேச்சிலா நிலயில்

அச்சமில்லாப் பாபம் புரிவோரைத் தண்டிக்க இச்சையில்லாதவனுமானான்           5 

 நாச்சியார் கோதையின் சிவந்த உதடுகளோ சோனை நதி செந்நீர் போலாக­

பேச்சிலே பெருகும் கவிதை தெளி நீர் ஸரஸ்வதியாகி விரஜா நதி சிறப்பெய்த­

பேரழகி  வனிதை கோதையின் வனப்பான மார்போ துங்கபத்ரா நதியுமாக

கவிதை வரியிலே கோதாவரியும் நர்மதையுமானதி லமிழ்ந்தானோ அரங்கன்        6  

வேதம் மொழிவதோ எறும்புப்புற்று  நிலமகள் செவியென

கோதையும் நிலமகளாய் தோன்றியதாலன்றோ அவள்

செவிவாய் வழிவந்த காரணப்பெயரே வால்மீகீ என்ற ஆதி

கவி வாய் மொழிந்ததோ ராமாயணமெனும் இதிகாசம்                                                    7

நாயகியாய் நாயகனாய் நின்ற நந்த கோபன் குமரனை

ஓயாமல்  அனுபவிக்கு கந்ததோ கோதை குமரியானதாலே

நாயகியாய் பாவித்துக்  கண்ணனுக்கு விரித்த வலையிலே  

விட்டுசித்தனுக்கு கிட்டாது தட்டி தவிக்கவிட்டான் மாயன்                   8

பையத்துயின்றப் பரமனடி பாடி பாருள்ளோருய்ய  

பைந்நாகம் படுக்கையா யுடையோநின் சிறப்பறிய

பரமன் மனமுதித்த மதியே பட்டர்பிரான் கோதையே!

அலைமகளும் அம்புலியோனுடன்பிறந்தவளாயாவாளே                          9                                                                

பரமனோ அகமகிழ்வான் அடியாரவன் புகழ் பாடக்கேட்க

பட்டர்பிரானுட்பட ஆழ்வார் பாசுரங்களில் அதி  ­

பரவசமாகா அரங்கன் கோதை சூடிய மாலையவன் தோள்

பற்றியதருணமே விட்டுசித்தன் பெரியாழ்வாரானான்                                                     10

யோகத்துயிலில் அரங்கன் கண்கள் தழுவிய தென் திசை

வில்லிபுத்தூர் புகழோங்கியதோ குமரி கோதைப் பிறப்பால்

விழிவைத்தெதிர் கொள்ள நங்கை சூட்டிய நற்பாமாலையில்

ஏங்கிய அரங்கனின் கண்கள் தேங்கியது தென் திசை நோக்கி                                    11­

கரைகிறதோ மக்களின் பாபங்கள் புண்ய நதிகளில் நீராட்டத்தில்

கரைந்த பாபங்களால் கறைபட்ட  இந்நதிகள் பருவகாலத்தில்

கறை நீங்கிப் புனிதமாகிறதோ கோதாவரியுடன் சங்கமாகி புனிதம்

குறையாத கோதாவரியின் சிறப்பு கோதாவின் பெயரோடிணைய                            12

அழகுக்கேற்ற அங்கங்களும் அமைந்த அணங்கு கோதாய்!

படுக்கையாகப் பாம்பும் பயணிக்கப் பறவையும் கொண்ட

வயோதிக அரங்கனா நீ விரும்பும் மணாளனெனத் தோழிகள்

ஏளனம் செய்தும் ஏற்றவனரங்கனே என்றாளோ கோதை                                              13

கோதையின் கேச உறவால் தேசடைந்த மாலை கேசவன்

தோளேற்க அவனணிந்த வைசயந்தி மாலையின் வண்டுக்

கூட்டங்கள் கோதை சூடிய மாலைக்குத் தாவிக் கருத்த

குடை போல் காட்சியளித்ததோ அரங்கன் திரு முடி மேல்                                         14

 மணம் கமழும் வைசயந்தி மாலை மாலனின் மார்பேற்க

மண் மகள் சூடிக்கொடுத்த மாலையோ மாதவனின்

மணி முடியோடிணைந்தது  காட்டுவதோ இம்மாசிலா

மாதவியின் பக்திக்கிடம் மாதவனின் மகுடமே                                                              15

மங்கை சூடிக்கொடுத்த மாலையின் கீர்த்தி  மாலனின்

மகுடத்தோடிணைந்ததாலாக மணம் கமழ்ந்த மலர்

மாலையில் மதுவருந்தும் தேனீக்களின் ரீங்காரம்

மங்கல வாத்திய ஒலியாயறிவித்தது மண நன் நாளை                                              16

மாலனின் நாபிக்கமலத்தின் நறுமணமும்  அவன் திரு

மார்புறையும் அலைமகளின் சந்தனக்காப்பின் மணமும்

மணம் கமழும் தமிழ் வேதமான பாசுரங்களிலும் நிறையா

மனம் நிறையுற்றதோ கோதை சூடிய மாலையவனணிய                                         17

அரங்கன் அகமகிழ்ந்து ஆண்டாளின் மேலாடையையே

 அணிய பரிவட்டமாகவும் அவள் கூந்தலின் மணம்

அள்ளி வீசிய சூடிக்கொடுத்த மாலையிலுமே அரங்கன்

அடியார்க்கு அருளும் அதிகச்சிறப் பெய்தினான்                                                           18

மறைகளின் சிரமான உபனிடதங்களில் கமழ்வதோ

மண்டலமெங்கும் காணா மாலன்  மங்கை கோதை சூடிய

மாலையவன் தோள் சேர அதிலுன் கருங்கூந்தலின்மணம்

வீச விஞ்சிய அவன் பெருமையை உபனிடதங்கள் காணா                                        19

உலகுக்கே  அப்பனானோன் நீ சூடிய மாலையை சிரமேற்று

உன் திருப்பணியிலவன்  உவகையடையக்கண்டு நாணம்

நண்ணிய நயனங்கள் நாயகனின் மலரிணைந்த மகுடம்

நல்க நீலக்கமல மாலையோ ஒன்றுத் தோன்றாத்தோன்றியது                                 20                                     

நாயகனரங்கனும் நாயகிக் கோதையும் மாலை மாற்றிய

நயமுறக் கண்டோரெழுப்பிய ஆரவாரச் சர்ச்சையிலே

நெடியோன் நிலமகளி வர்களில் உயர்வு  தாழ்வு காண விழைய

நடு நிலையோர் கண்டதோ இவ்விருவரும் சம நிலையே                                             21

அடியார்க்கென்றுமருளும் மாலன்  நீல முகில் வண்ண மேனியில்

அருகில் நின்ற ஆண்டாளின் இளம்புல்லொத்த ஒளிப் படர அத்துடன்

அமலன் அகமுறையும் அலைமகளின் பொன்னோளி இணைந்து

அடைந்ததோ அரங்கன் மேனி ஆடிடும் மயில்  கழுத்து வண்ணம்                            22

நெடியோனினொரு பக்கம் கொடி இடையாள் கோதை நிலமகளாய்

நெருங்கி இருக்கத் திருமகள் மரு தோள் கற்பக தருவாய் இணைந்த

சிலையான நிலையில் தலை முடி தாள் வைத்துப் பூசித்ததாலோ

மனுவும் மாந்தாதாவும் மாட்சி பெற்று பல் காலம் ஆட்சி செய்ய                                     23

சாத்திரங்களை மீறி நெறி தவறுவோர் மீது அனந்தன்

ஆத்திரமடைவதை திருமகள் தடுக்க இயலா நிலையில்

ஆண்டாளின் பார்வையில் அலைமகளின் ஏக்கம் ஏறி

கெஞ்சியத் தயையால்  விடுத்ததோ விட்ணுவின் சீற்றம்                                             24   

அவரவர் விதைத்த வினைக்கேற்ப அவரவரைத் தண்டிக்க

அறுகுணன் அமலுக்குக் கொணரா வண்ணம் நெறித்த

புருவத்தால் கோதை கசிந்த பார்வையில் பொங்கிய

கருணையால் போர்த்துவிட்டாளோ அரங்கனை                                                           25

அரவணைத்துயிலுமரங்கனோ நீல மேகத் திருமேனியான்

அவன் திருமார்புறங்கும் அலைமகளோ மின்னற்கொடியாள்

மின் தாங்கிய முகில் சொரிந்த நீர் கோதையெனும் தயையே

அமுதமாய் உலகோரனுபவிக்கு மல்லல்களுக்கு ஔடதமாய்                                 26

தாய்ப்பாலருந்தும் சேய் முலை கடித்தும் வலியுணரா

மேலும் பாலூட்டி இன்புறுவதையொத்தத் தாயன்பே

நாச்சியார் கோதை தயை வடிவாய் அடியார்

பிழை பொறுத்தருள் பாலிப்பது                                                                                      27

இந்திர நீல நிறத்தழகாள் நிலமகள் நப்பின்னை

இளங்கரத்தில் அல்லி தாங்கப் பெருதனத்தால்

தலைக் குனிந்த நிலையில் பட்டர்பிரான் செல்வி 

நோக்க இயலாளோ அடியாரபராதமனைத்தும்                                                           28

பட்டர்பிரான்  கோதையைப்போற்றும் வேங்கட நாதன்

கோதாத் துதியைத் தூய்மையாய் இடைவிடாத்

துதிப்போர்  அரங்கன் கோயில் திருப்பணியில்

அமர்ந்து அரங்கன் திருவடியிலேயே ஒன்றிவிடுவர்                                                           29   

 நாராயணன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: