பகவத் கீதையில் சுவையான சொல் ‘லோக ஸங்க்ரஹம்’ (Post No.11,158)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,158

Date uploaded in London – 1 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பகவத் கீதை மூன்றாம் அத்தியாயம் இருபதாவது ஸ்லோகத்தில் (3-20) ‘லோக ஸங்க்ரஹம்’ என்ற சொல்லை கிருஷ்ண பரமாத்மா  பயன்படுத்துகிறார். இதன் பொதுவான அர்த்தம் “உலகத்தை நல்வழிப்படுத்தி , அதனால் வேற்றுமைகளைப் போக்கி  ஒற்றுமையை வள ர்ப்பது” (அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை)

இதைப் படிக்கையில் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. சுவாமி விவேகானந்தருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது . நான் ஒருவன் மட்டும் தவம் செய்து முக்தி அடைவது சரியா , அல்லது மக்களுக்கு நல்லதைப் போதித்து அவர்களையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்லுவது சரியா என்று மனதில் கேள்வி எழுந்தது. கன்னியாகுமரிக்கு வந்து கடலில் நீந்தி ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்தபோதுதான் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அதன்படி பாரத மக்களுக்கு சேவை செய்வதே மேல் என்று உலகம் முழுதும் பயணம் செய்து ஆன்மீக உத்வேகம் ஊட்டினார். சேவை அமைப்புகளை உருவாக்கி மற்றவர்களையும் சேவை செய்யவைத்தார். இப்போது கன்யாகுமரியில் அந்த இடத்தில் விவேகானந்தா பாறை நினைவுச் சின்னம்  உளது

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) சொற்பொழிவாற்றுகையில், உயர்ந்த அத்வைத (அஹம் பிரம்மாஸ்மி) நிலையை அடைந்த பின்னர் எதற்கு எங்களுக்கு நித்திய கிரியைகள், பூஜைகள் என்று எண்ணலாம். இவையெல்லாம் மற்றவர்களுக்கும் கிடைப்பதற்காகவே சங்கர பகவத் பாதாளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று.

என்னுடைய விளக்கம்

ஏணியை வைத்து மேலே ஏறிச் சென்றவர் அந்த ஏணியை அகற்றிவிட்டால் , ஏனையோர் மேலே வரமுடியாது. ஆகையால் அந்த படிகள் மிகவும் அவசியம். இதைத்தான் பகவான் கிருஷ்ணர் ‘லோக ஸங்க்ரஹம்’ என்று சொல்லுகிறார்.

முதலில் ஸ்லோகத்தைப் பார்த்துவிட்டு இது தொடர்பாக சுவாமி சித்பவானந்தர், ராமகிருஷ்ண மடம் அண்ணா ஆகியோர் சொல்லும் கதைகளைப் பார்ப்போம்.முன்னாள் ஜனாதிபதியும், தத்துவப் பேராசிரியருமான டாக்டர் ராதா கருஷ்ணரும் யோக வாசிஷ்ட ஸ்லோகங்களை மேற்கோள்  காட்டுகிறார்.

பகவத் கீதை மூன்றாவது அத்தியாயம்:–

कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः।
लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि॥२०॥

கர்மணைவ ஹி ஸம்ஸித்³தி⁴மாஸ்தி²தா ஜநகாத³ய:|
லோகஸங்க்³ரஹமேவாபி ஸம்பஸ்²யந்கர்துமர்ஹஸி ||3-20||

ஜநகாத³ய: ஹி = ஜனகன் முதலியோரும்
கர்மணா ஏவ = செய்கையாலேயே
ஸம்ஸித்³திம் ஆஸ்தி²தா = சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்
லோகஸங்க்³ரஹம் ஸம்பஸ்²யந் = உலக நன்மையைக் கருதியும்
அபி கர்தும் ஏவ அர்ஹஸி = நீ தொழில் புரிதல் தகும்

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.

(from sangatham.com; thanks)

இந்த ஸ்லோகத்தில் ஜனகன் என்னும் மன்னனை கண்ணன் உதாரணம் காட்டுகிறார். அவர் ஆட்சி செய்து, யாக யக்ஞங்கள் செய்தபோதும், தாமரை இலைத் தண்ணீர்போல வாழ்ந்து முக்தி எய்தினார் .இது பற்றி அண்ணா உரை:–

“உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே ஆத்ம ஞானத்தைப் பெற்றவர்க்கு உதாரணமாக ஜனங்கள் எப்போதும் ஜனக மஹாராஜாவைச் சொல்லுகின்றனர். மானிட ஜீவிய சரித்திரம் முழுவதிலும் இந்த உதாரணம் ஒன்றேதான் காணப்படுகிறது . நீ உலகில் இருந்துகொண்டே ஜனகரைப்போல இருப்பதாக நினைத்து ஏமாந்துவிடாதே! பல மக்களைப் பெறுவதாலேயே பலருக்கு ‘ஜனகர்’ (பிதா , அப்பா Father ) என்னும் பெயர் பொருத்தமாகும்; ஜனகரைப் போல ஞானம் பெற் றதாலன்று . அந்த ஞானம் அரிதினும் அரிது” – ராமகிருஷ்ண பரமஹம்சர் .

இதை மேற்கோள் காட்டும் அண்ணா மேலும் ஒரு ஸ்லோகத்தையும் ; உபநிஷத் வாக்கியத்தையும் காட்டுகிறார்.

கடோபநிஷத் 2-19க்கு ஆனந்த கிரி சொன்னது-

விவேகி ஸர்வதா முக்தஹ  குர்வதோ நாஸ்தி கர்த்ருதா

அலேபவாத மாச்ரித்ய  ஸ்ரீ க்ருஷ்ண ஜனகெள யதா

சுவாமி சித்பவானந்தர் சொல்கிறார் –

ஞானியர்கள் கர்மத்தில் ஈடுபடுதலில் இன்னொரு சிறப்பு உண்டு. குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது கண்ணுடையவன்தான் கண்ணில்லாதவனைக் கையைப் பிடித்து  அழைத்துக்கொண்டு போகமுடியும். ஞானக் கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றி செய்ய வல்லவர்கள் ஆவர். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைந்தாகவேண்டிய உலக மக்களை நல்வழியில் நடாத்துதல் அவர்களுக்கு இயலும். ஆக, அப்பொறுப்பை எண்ணிப் பார்க்குமிடத்து  கர்மம் செய்வது அவசியமாகிறது.

xxx

முன்னாள் ஜனாதிபதியும் தத்துவப் பேராசிரியருமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், யோக வாசிஷ்ட ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறார்.

“மதத்தின் பணி , உலக மக்களுக்கு ஆன்மீக ஒளியை உண்டாக்குவதாகும் லோக ஸங்க்ரஹம் என்பது உலகை வழிநடத்தல் ஆகும். சமூகத்தை இணைக்கும் பாலம், உலக ஒற்றுமையை உண்டாக்கும் பணி” .

யோக வாசிஷ்டத்தில் வரும் ஸ்லோகங்கள் இவை –

ஞானியானவன் கர்மத்தைச் செய்வதாலோ செய்யாமல் இருப்பதாலோ லாபம்/ பலன் எதையும் அடையப்போவதில்லை.ஆகையால் கர்மம் வரும்போது அதைச் செய்கிறான் .

ஒன்றைச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் எனக்கு ஒன்றேதான் .கர்மம் செய்யாதே என்று நான் எதற்கு கட்டாயப்படுத்த வேண்டும்.; எந்த எந்த கர்மம் வருகிறதோ அதை நான்  செய்கிறேன்

–யோக வாசிஷ்டம்

ஞாஸ்ய நார்த்தஹ கர்மத் தியாகைஹி நார்த்தகர்ம ஸமாச்ரயைஹி

தேன ஸ்திதம் யதா யத் யத் தத் ததைவ கரோதி அசெள 6-199

மம நாஸ்தி க்ருதேணார்த்தோ நாக்ருத்தேன கஸ்சன

யதா ப்ராப்தேன திஷ்டாமி ஹி அகர்மணி க ஆக்ரஹக 6-216

பகவத் கீதையில் இதற்கு அடுத்த சுலோகத்தில் (3-21) பெரியவன் எதைச் செய்கிறானோ அதையே மற்றவர்களும் செய்வர் என்று கண்ணன் பகர்கிறார். அது தொடர்பான கதைகளை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

–சுபம்–

Tags-  பகவத் கீதை, சுவையான சொல், லோக ஸங்க்ரஹம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: