செப்பு மொழி இருபத்தி ஐந்து! (Post No.11,166)

1.எனக்கு ஒரு கெடுதியை நீ செய்தால் உனக்கு கெடுதி வந்து சேரும். இது தான் கர்மா!

If You will do bad with me the bad will happen to you this is known as karma.

2.எனக்குக் கிடைக்காத கேள்வியை நீ கொடுத்தாயானால், உனக்குப் புரியாத விடைகளை நான் தருவேன்.

You give me questions I don’t get; I’ll give you answers you won’t understand.

3.எனது விடைகள் எல்லாம் நீ எப்படி கேள்வி கேட்கிறாய் என்பது பற்றித் தான்!

My answers are all about how you question me.

4.எனது கஷ்ட காலத்தில் எனக்கு நீ கை கொடுத்து உதவினால் நான் ஒரு போதும் நல்ல காலத்தில் உனது கையை விட மாட்டேன்.

If you will hold my hand in my bad time I will never leave your hand in my good time.

5. மற்றவனை அடக்கி ஆளும் ஒருவன் சக்தி வாய்ந்தவனாக இருக்கலாம்; ஆனால் எவன் ஒருவன் தன்னை அடக்கி ஆள்கிறானோ அவன் இன்னும் அதிக சக்தி வாய்ந்தவன்  –  லாவோ ட்சு

He who controls others may be powerful, but he who has mastered himself is mightier still. – Lao Tzu

6.உனது கோபத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு பதில் அது ஏன் என்பதை வெளிப்படுத்தினாயென்றால், நீ விவாதத்திற்கு பதில் தீர்வுகளைக் காணும் கதவைத் திறந்து விட்டவனாவாய்!  – ரூத் காடூரி

Explain your anger instead of expressing it, and you will open the door to solutions instead of arguments. –  Ruth Ghatourey

7. 10% முரண்பாடு கருத்து வேறுபாட்டினால் ஏற்படுகிறது; 90% அதை வெளிப்படுத்தும் குரலினால் ஏற்படுகிறது.

10% of conflict is due to differences in opinion, and 90% is due to delivery and tone of voice.

8. என்னை எனது வெற்றியை வைத்து எடை போடாதீர்கள். நான் எத்தனை முறை விழுந்து எழுந்திருந்திருக்கிறேன் என்பதை வைத்து எடை போடுங்கள் – நெல்ஸன் மண்டேலா

Don’t judge me by my success. Judge me by how many times I fell down and got back up again. – Nelson Mandela

9. என்ன, நான் எப்போதும் ஒரு லோ-கட் ஆடையைத் தான் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா, நான் முக்கியமானவளாக இருக்க! – நடிகை ஜீன் ஹார்லோ

Must I always wear a low-cut dress to be important? –  Jean Harlow 

10. கடவுள் ஒருவர் இருக்கிறார், ஹாலிவுட்டில் கூட! – நடிகை ஜீன் ஹார்லோ

There is a God, even in Hollywood. Jean Harlow 

11. ஒரு எம்ஜிஎம் குவியலில் நான் எனது 12ஆம் வயதில் பிறந்தேன். – நடிகை ஜூடி கார்லேண்ட்

I was born at the age of twelve on an MGM lot. – Judy Garland

12. ஒவ்வொரு மேகத்தின் பின்னாலும் இன்னொரு மேகம் இருக்கிறது. – நடிகை ஜூடி கார்லேண்ட்

Behind every cloud is another cloud.  – Judy Garland

13. எனது கால்களும் எனது மேக்-அப் பெட்டியும் இருக்கும் வரையில் நான் ஓய்வு பெறவே மாட்டேன் – நடிகை பெட்டி டேவிஸ்

I will not retire while I’ve still got my legs and my make-up box. – Bette Davis

14. பதினைந்து மில்லியன் டாலர்களை கையில் வைத்திருந்து அதில் பாதியை எனக்கு எழுதி வைத்து, தான் இன்னும் ஒரு வருடத்தில் செத்து விடுவேன் என்று  உத்தரவாதம் அளிக்கும் ஒரு ஆளைப் பார்த்தால் நான் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளத் தயார்! – நடிகை பெட்டி டேவிஸ்

I’d marry again if I found a man who had fifteen million dollars, would sign over half to me, and guarantee that he’d be dead within a year. – Bette Davis

15. இந்த (சினிமா) வியாபாரத்தில் நீ ஒரு பிசாசு என்று அறியப்பட்டால் தான் நீ ஒரு ஸ்டார் – நடிகை பெட்டி டேவிஸ்

In this business, until you’re known as a monster, you’re not a star. –– Bette Davis

16. அழகான கண்களைப் பெறுவதற்கு மற்றவர்களிடம் உள்ள நல்லதைப் பார்; அழகான உதடுகளுக்கு அன்பு வார்த்தைகளை மட்டுமே பேசு; நிதானத்திற்கு நீ தனியாக ஒரு போதும் இல்லை என்ற அறிவுடன் நட! – ஆட்ரி ஹெப்பர்ன்

For beautiful eyes, look for the good in others; for beautiful lips, speak only words of kindness; and for poise, walk with the knowledge that you are never alone. – Audrey Hepburn 

17. நான் டயட் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. காரட்டுகளில் எனக்கு ஆர்வம் ஊட்டும் காரட் வைரத்தில் உள்ள காரட் எண்ணிக்கை தான்! – நடிகை மே வெஸ்ட்

I never worry about diets. The only carrots that interest me are the number you get in a diamond. – Mae West

18. நான் இரண்டு மொழிகளில் பேசுகிறேன் – உடல் மற்றும் ஆங்கிலம்! – நடிகை மே வெஸ்ட்

I speak two languages – body and English. – Mae West

19. திருமணம் என்பது ஆயிரம்காலத்துப் பயிர்; நான் ஆயிரம் காலத்திற்குத் தயாரில்லை – நடிகை மே வெஸ்ட்

Marriage is a great institution, but I’m not ready for an institution – May West

20. என்னைப் பார்ப்பவர்கள் பார்த்து விட்டுப் போகட்டும், பார்க்காமல் இருப்பதை விட அது மேல்! – – நடிகை மே வெஸ்ட்

It is better to be looked over than overlooked. – May West

21. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் கண்களைச் சுழற்றும் ஒரு பெண் இருக்கிறாள் – ஜிம் கேரி

Behind every great man is a woman rolling her eyes. – Jim Carey

22. இரண்டு விஷயங்கள் எல்லையே இல்லாதவை. ஒன்று பிரபஞ்சம், மற்றொன்று மனிதனின் முட்டாள் தனம்; எனக்கு பிரபஞ்சம் பற்றி உறுதியாக ஒன்றும் தெரியாது – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe. —Albert Einstein

23. இந்தப் புத்தகம் 100 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட வார்த்தைகளினால் எழுதப்பட்டதே தான். – டெர்ரி ப்ரட்செட்

This book was written using 100% recycled words.
― Terry Pratchett, Wyrd Sisters

24. நீ ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அறிய,  அவரை ஸ்லோ இண்டர்நெட்டுடன் உள்ள ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தச் சொல் – வில் ஃபெர்ரல்

Before you marry a person, you should first make them use a computer with slow Internet to see who they really are. —Will Ferrell

25. எல்லாம் முன்னாலேயே நிர்ணயிக்கப்பட்டதே, நம்மால் எதையும் மாற்ற முடியாது என்று உறுதியாகக் கூறும் மனிதர்கள் கூட சாலையைக் கடக்கும் முன்னர் இரு பக்கமும் பார்த்து விட்டுத் தான் கடக்கிறார்கள் – ஸ்டீபன் ஹாகிங்

I have noticed that even people who claim everything is pre­determined and that we can do nothing to change it look before they cross the road.
— Stephen Hawking

xxx

புத்தக அறிமுகம் – 19

புராணத் துளிகள் – பாகம் 3

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பகுதி

புராணங்கள் பற்றிய விளக்கம் : காஞ்சி பரமாசார்யாள் அருளுரை!

இரண்டாம் பகுதி

அத்தியாயங்கள்

1. யோக ரஹஸ்யம்

2. பரமபதம் அடைவது எப்படி?

3. நமது துக்கத்திற்குக் காரணம்!

4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!

5. மூவகை பக்தி

6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?

7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்?

8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?

9. திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?

10. மனிதர்களின் கால அளவும் தேவர்களின் கால அளவும்!

11. பக்தி தமிழ் தேசத்தில் பிறந்தவள்!

12. வியாஸர் எங்கு தவம் செய்தார்?

13. பாகவதத்திற்கு இன்னொரு பெயர் என்ன? வியாஸர்

14. கங்கைக்கும், பாகவதருக்கும் பாவம் எப்படிப் போகிறது?

15. சந்தோஷம், பொறுமை, நேர்மை, தயை … என்றால் என்ன? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

16. தமிழில் பாடுக! உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

17. ஒன்பது தத்துவங்கள் எவை? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

18. ஐந்து அதர்மங்களை விலக்க வேண்டும்!

19. பிரம்மத்தின் இலக்கணம்!

20. கன்னியின் கைவளை தந்த உபதேசம்!

21. 49 அக்னிகள்!

22. பிரகலாதன் தன் விளையாட்டுத் தோழர்களுக்குக் கூறியது

23. 28 நரகங்களின் பெயர்கள்!

24. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!

25. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!

26. ஆன்ம தத்துவங்கள் 24

27. ஜோதிர்லிங்கங்கள் 12

28. உப ஜோதிர்லிங்கங்கள் 12

29. பத தானங்கள்!

30. ஓம் தோன்றியது எப்படி?

31. ஓம் என்ற பிரணவத்தின் மஹிமை!

32. ஓம் என்ற பிரணவ உச்சரிப்பால் ஏற்படும் பலன்கள்!

33. அருணாசலேஸ்வரரின் மஹிமை : பகவான் ரமண மஹரிஷி மொழி பெயர்த்து அருளியது!

34. எது சிறந்த செயல்?

35. சரணாகதியே சகலமும் தரும்

36. எவனை வித்வான் என்று கூறலாம்?

37. ஆயிரம் ஜன்மம் கழித்து வருவது எது?

38. பக்தர்களில் சிறந்த பக்தர் யார்?

39. எந்தப் பாவம் போகவே போகாது?

40. மூவுலகங்களிலும் துன்பப் படுபவர் யார்?

41. மகாலக்ஷ்மி தோற்றம்

42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர் ஜீவராசி நாசமடைவதற்கு உதாரணங்கள்!

43. சிவாலயம் எழுப்புவதால் அடையும் பலன்கள்!

44. சிவனை பூஜித்து நன்மை அடைந்தவர்கள்!

45. ஹரிச்சந்திரன் சரித்திரத்தைக் கேட்பதின் பலன்!

46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!

47. நவநிதிகள் யாவை?

48. விபூதி தாரண மஹிமை

49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!

50. ஆதிசைவர் தோற்றம்!

*

அணிந்துரை

திரு ச. நாகராஜன் அவர்கள் எழுதிய புராணத்துளிகள் மூன்றாம் பாகம் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். எனது சம்பந்தி என்ற முறையில் திரு ச. நாகராஜன் அவர்களைப் பதினைந்து ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். தேசியமும் ஆன்மீகமும் நிறைந்த பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர் . அறிவியல், விண்வெளித்துறை, சுய முன்னேற்றம், ஆன்மீகம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவருடையை கட்டுரைகள் தமிழ் நாட்டின் முன்னணி பத்திரிகைகள், இதழ்களில் வந்துள்ளன. பாக்யா பத்திரிகையில் இவருடைய கட்டுரைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து சாதனைகள் படைத்துள்ளன. 

நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதி உள்ளார். இன்றும் பல வலை தளங்களில் எழுதிக் கொண்டிருப்பவர்.

அவரைச் சந்திக்கும்போதெல்லாம், அவருடன் பல் வேறு தலைப்புகளில் விவாதித்துள்ளேன். உண்மையில் அவர் ஒரு வித்தகர். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்று என்னால் சொல்லமுடியும். அவருடைய உற்சாகம், சுறுசுறுப்பு, படைப்பாற்றல் திறன் இவைகளே என்னையும் எழுதத் தூண்டின. என்னுடைய குருவாகவே அவரை நான் நினைக்கிறேன்.

ஒரு எழுத்தாளனுக்குச் சமுதாயப் பொறுப்புணர்வு மிக அவசியம். அதை உணர்ந்தவர் திரு ச, நாகராஜன். இன்றைய இளைய சமுதாயம் சினிமா, சின்னத்திரை இவைகளில் சீரழிந்து கொண்டிருக்கின்றது. இளையவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், உபநிஷத்கள் இவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவேண்டிய முதியோர்கள் தமது கடமையிலிருந்து நழுவி, தொலைகாட்சி தொடர்களில் மூழ்கிவிட்டனர். திரு ச. நாகராஜனது அறிவியல், விண்வெளித்துறை மற்றும் ஆன்மீகம் பற்றிய கட்டுரைகள் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்து மிக மிக எளிய முறையில் விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அறிவியல் உலகில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் மாறுதல்களைப்பற்றி தெரிந்துகொள்ள அவருடைய கட்டுரைகளைப் படித்தாலே போதும். அதுபோல ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மெனக்கிடவேண்டியது இல்லை. அவருடைய ஆன்மீக கட்டுரைகள், புராணத்துளிகள் இவற்றைப் படித்தாலே போதும். மிகச் சுருக்கமாக எளிதாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் படைத்துள்ளார்.

அந்த வரிசையில் வந்ததுதான் புராணத்துளிகள் பாகம் மூன்று. தனது முன்னுரையில் தனது குறிக்கோளைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். “பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பணியை மேற்கொண்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துக்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகச் சொல்லி உள்ளார். பாகவதம் என்பது ஒரு பெரிய கடல்.அதில் உள்ள சிறப்பு அம்சங்களை இந்த புத்தகத்தில் கையாண்டுள்ளார். ஆசனங்களைப் பற்றிய எளிய குறிப்புகள். துன்பத்தின் காரணம், முக்தி அடைய எளிய வழிகள், மூவகை பக்திகள், தேவிபாகவத்தின் கால அளவைகள் இப்படி பலருக்கும் தெரியாத விஷயங்களைத் தொகுத்துள்ளார். கால அளவைகள் என்று சொல்லும்போது மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே உள்ள கால அளவின் வேறுபாடுகளைப் பற்றி அவர் தெரிவித்துள்ள செய்திகள் மிகவும் சுவையானவை.அவை நம்மை பிரமிக்கவைக்கின்றன.

உத்தவருக்கு கிருஷ்ணர் அளிக்கும் பதில்களில் பல முக்கிய விஷயங்களை சொல்லி உள்ளார், அதில் சொல்லப்பட்டுள்ள அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் இவர்களுடைய குண நலன்கள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை.

உத்தவரிடம் கிருஷ்ணர் தமிழில் பாடச்சொல்வது புதிய செய்தி. மொத்தத்தில் இப்புத்தகம் ஒரு அகராதியின் தொகுப்பு போல உள்ளது. எல்லோருக்கும் பயன்தரக்கூடியது. இதைப் படிப்பவர்கள் எல்லோரும் அத்தோடு நின்றுவிடாமல் அதை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்போதுதான் திரு நாகராஜன் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்தப் பணியைச் செய்கின்றாரோ அது நிறைவேறியதாகக் கருதப்படும்.

திரு நாகராஜன் அவர்கள் இது போன்று பல படைப்புகளை உருவாக்கித் திசை தெரியாது அலையும் இந்த சமுதாயத்திற்கு நல்ல வழி காட்டவேண்டும். இத் தொண்டினை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்வதற்கு அவருக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நல்கவேண்டுமென்று நான் வணங்கும் மகாபெரியவரிடம் வணங்கி வேண்டுகிறேன்.

வெல்க அவர் பணி!

சென்னை
22-12-2021

இராம. சேஷாத்ரிநாதன்

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் – மூன்றாம் பாகம் மலர்கிறது.

பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை நல்கி என்னைக் கௌரவிக்கும் திரு இராம. சேஷாத்ரிநாதன் இதிஹாஸம் மற்றும் புராணங்கள் பால் மிகுந்த பக்தி கொண்டவர். பாரம்பரியம் மிக்க இசை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

யூனியன் வங்கியில் 30 ஆண்டு காலம் உயர் பதவி வகித்த இவர் இப்போது இராமாயணத்தின் மிக முக்கிய பகுதிகளை வால்மீகி, துளஸி, கம்ப ராமாயணம் ஆகியவற்றை இணைத்து அனைவரும் வியக்கும் வண்ணம் பல நூறு பகுதிகளாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த நூலை அழகிய முறையில் மின்னணு நூலாகத் தயாரிக்க முன் வந்த புஸ்தகா டிஜிடல் மீடியா பிரைவேட் லிமிடட் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்அவர்களுக்கும் மற்றும் இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்டு உதவியாற்றும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

ச.நாகராஜன்
பங்களூர்
22-12-2021

மின்னஞ்சல் முகவரி :snagarajans@gmail.com                                           

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

1 Comment

 1. Ammunni Balasubramanian

   /  August 5, 2022

  எல்லாம் தெரிந்த இந்த வித்தகருக்கு எனது நெடு நாளைய சந்தேகம்.
  “Origin of Ganesha”. It’s puzzling me this God’s origin. I heard several unbelievable story about how he originated which no children will believe.
  Why we consider Ganesha as removal of obstacles. Why other gods cannot do?
  Bala.

  Sent from my iPad

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: