பகவத் கீதையில் சுவையான சொற்கள் -சொர்க்க வாசல் ,நரக வாசல் (Post.11,168)

பகவத் கீதையில் சுவையான சொற்கள் -சொர்க்க வாசல் ,நரக வாசல் (Post.11,168)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,168

Date uploaded in London – 5  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகவத் கீதையின் மொத்த கருத்தை மனதில் கிரகிக்க ஒரு சுலபமான வழி , சுவையான சொற்களை நினைவு வைத்துக் கொள்வதாகும். பகவான் கிருஷ்ணர் சொர்க்கத்தின் கதவுகள் மற்றும் நரகத்தின் கதவுகள் எது என்று சொல்கிறார். இதோ இரண்டு ஸ்லோகங்கள் :

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।

सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्॥३२॥

யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்|

ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||

பார்த² = பார்த்தா;

யத்³ருச்ச²யா உபபந்நம் = தானே வந்திருப்பதும்

அபாவ்ருதம் ஸ்வர்க³த்³வாரம் = திறந்து கிடக்கும் ஸ்வர்க வாயில்

ஈத்³ருஸ²ம் யுத்³த⁴ம் = இத்தகைய போர்

ஸுகி²ந: க்ஷத்ரியா: லப⁴ந்தே = பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக/ ஸ்வர்க வாயில் போன்றது இத்தகைய போர்;  

இது கிடைக்கப் பெறும் மன்னர் அனைவரும் பாக்கியவான்கள் .

என்னுடைய வியாக்கியானம்

பகவத் கீதை யுத்தத்தை ஆதரிக்கிறதா? உண்மைதான். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எப்போதும் யுத்தம் நடை பெறுகிறது. ரிக் வேதத்திலேயே அசுரர்கள் காணப்படுகிறார்கள் . பகவான் கிருஷ்ணரும் நாலாவது அத்தியாயத்தில் ஸம்பவாமி யுகே யுகே என்று சொல்கிறார். அதர்மத்தை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்  கடவுள் யுகம் தோறும் அவதரிப்பார் என்ற கருத்தே அசுரர்கள்/ அரக்கர்கள்/ தீயோர் எப்போதும் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறது. மேலும் நாம் எல்லோரும் கலியுக அவதாரமாகிய கல்கி அவதாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கிறோம்.

அப்படியானால் யுத்தத்தில் நிறைய பேர் இறப்பார்களே ! அதுவும் உண்மை தான் ; அர்ஜுனன் தனது சொந்த மகனானான அபிமன்யுவையே இழந்தான்; பீஷ்ம பிதாமஹர் , துரோணர், கர்ணன் ஆகியோரும் இறந்ததைக் கண்டோம். ஆனால் போரில் இறப்போர் அனைவரும் சொர்க்கத்துக்குச் செல்வர் என்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் உள்ளது. உலகிலுள்ள 200+++++ நாடுகளின் படை வீரர்களின் எண்ணிக் கை  யைக் கூட்டிப்பார்த்தால் பல கோடிகள் வரும். நாட்டைக் காப்பதும் தர்மத்தைக் காப்பதும் புனிதமான தொழில். உலகம் அஹிம்சையை ஏற்பது இல்லை. அப்படி ஏற்றால் அவதாரங்களுக்குப் பொருள் இராது. இந்த ஸ்லோகத்தில் அர்ஜுனனை ப் பார்த்து “போர் செய்; இறந்தால் சொர்க்கம் ; வாழ்ந்தால் அரசாட்சி” என்கிறார். நமது எல்லைகளைக்  காத்து நிற்கும், இமய மலையைக் காத்து நிற்கும், நம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்லோகம் இது.

XXX

நரக வாசல் 3

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।

कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥१६- २१॥

த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |

காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||

இத³ம் ஆத்மந: நாஸ²நம் = இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான

த்ரிவித⁴ம் நரகஸ்ய த்³வாரம் = இம் மூன்று நரக வாயில்கள்

காம: க்ரோத⁴: ததா² லோப⁴ = காமம், சினம், அவா

தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் = ஆதலால், இம்மூன்றையும் விடுக

ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நரகம் :(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.

எனது வியாக்கியானம்

இது அற்புதமான உண்மை. தினமும் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளையும், பத்திரிகையில் வரும் குற்றவியல் செய்திகளையும் படியுங்கள்; செக்ஸ் அல்லது கோபம் அல்லது பேராசை ஆகிய மூன்று வகைகளில் பிரித்து விடலாம். இதை நாம் நன்கு புரிந்துகொண்டு இந்த மூன்று நன்றாக வாயில்களையும் மூட வேண்டும்.

நான் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறைச் சாலைகளுக்கு விஜயம் செய்து இந்து மத சிறைக் கைதிகளின் (Hindu Chaplain) ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தேன். கிறிஸ்தவ, முஸ்லீம் கைதிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்தக் கைதிகளின் எண்ணிக்கை மிக, மிக ,மிகக் குறைவு. ஆயினும் அவர்களையும் இந்த மூன்று வகைகளில் அடக்கி விடலாம் (செக்ஸ், கோபம், பணத்துக்கு ஆசை).; இதைக் கிருஷ்ணர் இவ்வளவு அழகாக ஒரே வரியில் சொன்னதை எண்ணி எண்ணி வியப்பேன் . ஆகையால் இந்த இரண்டு ஸ்லோகங்களும் என் மனதில் எப்போதும் நிற்கும்.

நீங்களும் சொர்க்க வாசல், நரக வாசல்களை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

நாட்டிற்காக உயி துறப்போர் அனைவரும் சொர்க்கம் செல்லுவார்கள்.

–SUBHAM—

Tags- பகவத் கீதை, சுவையான சொற்கள், சொர்க்க வாசல், நரக வாசல்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: