Post No. 11,174
Date uploaded in London – 7 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
தற்காலத்தில் கோவில்களின் சுவர்களில் தேவாரம், திவ்யப் பிரபந்தம் , திருமந்திரம் , திருப்புகழ், அபிராமி அந்தாதி துதிகளை, திருக்குறள் போன்ற நீதி நூல்களை பொறி ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த வழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஹலாயுதன் என்பவர் செய்து இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் மாந்தாதா என்னும் இடத்தில் அமரேஸ்வரா கோவில் இருக்கிறது. அதன் சுவற்றில் சிவ பெருமான் மீது ஹலாயுதர் என்பவர் இயற்றிய ஹலாயுத ஸ்தோத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.பரமார வம்சத்தைச் சேர்ந்த முஞ்ஜா என்ற மன்னரின் அவைக்கள புலவர் அவர்.. அது கி.பி.1063ல் எழுதப்பட்டது . 63 செய்யுட்களைக் கொண்ட அந்த துதியின் பின்னால், செய்யுளை இயற்றியவர் பற்றிய குறிப்பும் உளது.
அதைத்தொடர்ந்து சிவ துவாதச ஸ்தோத்திரம் ஒன்றும் காணப்படுகிறது. அதில் துவாதச (12) ஜோதிர்லிங்க பற்றிப் பாடியுள்ளார் . விவேக ராசின் என்பவரின் சீடரும் சாபல கோத்திரத்தவரும் ஆன கந்தத்வஜர் என்றும் உள்ளது. அந்தக் கவிஞர் ஒரு சைவத் துறவி என்றும் ராஷ்ட்ர கூட வம்ச மன்னர் மூன்றாம் கிருஷ்ணர் சபையிலும் கிபி. 934-967 பரமார வம்ச அரசர் வாக்பதி முஞ்ச சபையிலும் 974-993 பணியாற்றியவர் என்றும் தெரிகிறது
ஹலாயுதன் வேறு சில நூல்களையும் இயற்றியுள்ளார் ; அவையாவன-
கவி ரஹஸ்ய – சம்ஸ்க்ருத இலக்கணம் பற்றியது மூன்றாம் கிருஷ்ணர் என்ற மன்னர் பற்றிய புகழுரையும் இணைக்கப்பட்டுள்ளது.
அபிதான ரத்ன மாலா
ம்ருத சஞ்சீவினி — இது பிங்கலரின் சாந்த சூத்ரம் மீதான வியாக்கியானம்/ உரை
ஹலாயுத: – ஹல என்றால் கலப்பை . இது கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமரின் நாமம்.; தமிழ் சொல் கலப்பை என்பதும் ஹல என்பதும் ஒரே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தன.
முன்காலத்தில் சைவ பெயர் கொண்டவர்கள் விஷ்ணு மீதும், வைஷ்ணவ பெயர் கொண்டவர்கள் சிவன் மீதும் துதிகளை இயற்றி வந்தனர். பிற்காலத்தில் வேற்றுமை பெருகவே அந்த வழக்கம் அருகிவிட்டது
கல்வெட்டுகளில் துதிகளை பொறிப்பதால் அவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் உள்ளது.
xxx
இவர் தவிர மேலும் மூன்று ஹலாயுதர்கள் வாழ்ந்தனர்.வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமண சேனா மன்னரின் அவையில் இருந்த ஹலாயுதன் , வத்ச கோத்ர தனஞ்சயனின் மகன் ஆவார்.அவர் பிராஹ்மண ஸர்வஸ்வ , பந்த ஸர்வஸ்வ , மீமாம்ச ஸர்வஸ்வ ஆகியவற்றை எழுதியவர்.
மேலும் இரண்டு ஹலாயுதர்கள் சேன வம்ச அரசர்களிடம் பணியாற்றினர்..
Xxx
தமிழ் மொழியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட துதிகள் பொறித்த கல்வெட்டுகள் இல்லை.ஆனால் தந்தி வர்ம பல்லவனின் (CE 800) திருவெள்ளறைப் பாடல் கல்வெட்டு குறிப்பிடத்தக்கது
திருவெள்ளறை சுவஸ்திகா கிணறு
திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் உள்ளது. பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டுக்கால வரலாறு பெற்ற கோவில் இது. கோவிலுக்குப் பின் புறம் இந்துக்களின் புனிதத் சின்னமான சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு உள்ளது. அதில் அருமையான பாடல் உள்ளது. நேற்று வாழ்ந்த ஒருவன் இன்று இல்லை என்னும் சிறப்புடையது இந்த உலகம் என்று வள்ளுவன் பாடுகிறான். மஹாபாரதம் யக்ஷப் பிரஸ்னத்திலும் இக்கருத்து உள்ளது. ஆகையால் இறைவனை உடனே பாடிப் பரவுவோம் என்கிறார்கள் பெரியோர்கள்
பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்ற இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும்.. கி.பி 800ல் ஆலம்பக் கிழான் விசைய நல்லூழான் என்பவன் தோண்டி அமைத்தான் இந்த கிணற்றின் சுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது,
ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்
தண்டார் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்!
—சுபம் —
TAGS- ஸ்வஸ்திகா கிணறு, திருவெள்ளறை, கண்டார் காணா , ஹலாயுத, ஸ்தோத்திரம், கல்வெட்டு