Post No. 11,176
Date uploaded in London – 8 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
இற்றைக்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கியத்துறையில் பெரும்சாதனைகள் புரிந்த ஒரு கல்வெட்டுக் கவிஞன் சோமேஸ்வர தேவன்.
குஜராத்தில் வாழ்ந்த அவரது படைப்புகள் பற்றி அக்காலக் கல்வெட்டுகள் யேசுகின்றன ; ஆயினும் அவற்றில் பெரும்பாலான படைப்புகள் நமக்குக் கிடைத்தில.
சோமேஸ்வர தேவனின் தந்தை, தாயார் – குமார, லெட்சுமி
சகோதரர் பெயர்கள் – மஹாதேவ, விஜய
கோத்ரம் – நாகர பிராஹ்மணன், வசிஷ்ட கோத்ர
ஆசிரியர் பெயர் – பிரஹ்லாதன தேவ
கவிஞனின் மூதாதையர்கள் – சோள , லல்ல சர்மா, முஞ்ச, சோம , ஆம , சர்மா, குமார , சர்வதேவ, , அமிக, சர்வ தேவ, குமார , அ மிக,
இவர்கள் 10 சாளுக்கிய அரசர்களின் அவையில் பணிபுரிந்த 10 பேர் பட்டியல்
கல்வெட்டிலுள்ள சாளுக்கிய அரசர்கள்- சாமுண்ட ராஜ, துர்லப ராஜ பீமா, கர்ண, சித்த ராஜ ஜெய சிம்ம, குமாரபால, அஜயபால மூல ராஜ, பீமா
இவர்கள் 250 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். பலரும் யாக யக்ஞங்கள் செய்தனர்.
சோமேஸ்வர தேவ ஒரு பல்துறை வித்தகர். மஹா காவ்யம் , நாடகம், சுபாஷிதம், ஸ்தோத்ரம், பிரசஸ்தி (புகழுரை) யாத்தவர் ..
அவர் எழுதிய மஹா காவ்யங்கள் – கீர்த்தி கெளமுதி , சுரதோத்ஸவ
எழுதிய நாடகம் – உல்லாச ராகவ
எழுதிய துதி – ராம சதகம், 100 செய்யுட்கள் உடையது.
தனிப்பாடல்/சுபாஷித தொகுப்பு- கர்ணாம்ரித பிரபா
குமார பால என்ற மன்னர் சரிதத்தை அவர் எழுதினார். அது இப்போது கிடைக்கவில்லை
கீழ்கண்ட கல்வெட்டுகள், பிரசஸ்திகளுடன் (மன்னர் மீதான புகழ் உரைகள்) கிடைத்து இருக்கின்றன
1)அபு, தேல்வட , அரசன் விரதவால மற்றும் அவனது சமண மத அமைச்சர்கள் வஸ்துப்பால , தேஜாபால மீதான 74 செய்யுட்கள்
2)வஸ்துப்பால கோவிலில் உள்ள 2 கிர்னார் கல்வெட்டுகள்
3)சத்ருஞ்ஜய பிரசஸ்தி
4)தபோய், வைத்யநாத பிரசஸ்தி
5)தோல்காவிலுள்ள வீரநாராயண கோவிலில் 108 ஸ்லோகங்களுடன் ஒரு பிரசஸ்தி இருந்தது ; ஆனால் இபோது இல்லை.. அவருக்கு போட்டியாக இருந்த கவிஞர் ஹரிஹர பற்றி பிரபந்த கோச நூலில் ராஜசேகரன் என்பவர் எழுதிய குறிப்பில் இந்த தகவல் உள்ளது.
குஜராத்தை ஆண்ட மன்னர்கள் சோமேஸ்வர தேவை மிகவும் மதித்தனர். அவர் அரசவைக் கவிஞர் மட்டும் அல்ல. அரசவைப் புரோகிதரும் ஆவார்.. காளிதாசரை மிகவும் மதிக்கும் அவர், காளிதாசர் மீதும் கவி இயற்றினார் சுரதோத்ஸவ காவியத்தில் உள்ள அந்தக் கவிதை பினருமாறு-
ஸ்ரீ காளிதாஸஸ்ய வசோ விசார் யா நைவால்ய காவ்யே ரமதே மதிர் மே
கிம் பாரிஜாதம் பரிஹ்ருத்ய அந்த பிருங்காலி ரானந்ததி ஸிந்து வாரே
இன்னும் ஒரு இடத்தில் காளிதாசனை பிறவிக் கவிஞர் என்றும், ஸ்ரீ ராமனுடைய வாழ்க்கையையே நேரில் கண்டவர் என்றும் புகழ்கிறார். பாண என்ற கவிஞரையும் அவர் போற்றுகிறார்.
இந்தக் கல்வெட்டு ஒருவரின் பெற்றோர், சகோதரர், பல அரசவைக் கவிஞர்கள், பல மன்னர்கள், பல கோவில்கள், உதலிய பல்வேறு தகவல்களை வெளியிடுவதால் மிகவும் முக்கியமான ஒன்றாகும் .
Xxx subham xxx
tags- கவிஞன் , சோமேஸ்வர தேவன், கல்வெட்டு