காலசூரி வம்ச அரசர் மீது சீனிவாசன் எழுதிய கவிதைக் கல்வெட்டு (Post.11179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,179

Date uploaded in London – 9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பில்ஹரி கல்வெட்டு (Bilhari Inscription) என்றும் ஜபல்பூர் கல்வெட்டு(Jabalpur) என்றும் அறியப்பட்ட கல்வெட்டு ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமையுடைத்து. கலசூரி (கல சூரி என்பதே சரியான உச்சரிப்பு.).

வம்சத்தினர் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். ஜபல்பூர்  நகரிலிருந்து ஆறு மைல் தொலைவில் இருந்த த்ரிபுரி (Tripuri)  நகரிலிருந்து அவர்கள் ஆட்சி செய்தனர். சூரி என்றால் கத்தி என்று பொருள். கல்லி என்றால் மீசை என்று அர்த்தம். இவர்கள் கத்தி போல மீசை வைத்துக் கொண்டதால் இப்படிப்பெயர் வந்ததாக ஒரு சாரார் கருதுவர். இந்த வம்சத்தில் கொடிகட்டிப் பறந்தவன்  கங்கேய தேவன்.(1015-1041 CE). அவருக்கு முன்னதாக ஆண்டவர் இரண்டாம் யுவ ராஜ தேவன் (CE 980-990). இந்த வம்சத்தினர் பற்றி வி.வி. மிராஷி ( V V MIRASHI) என்பவர் ஆராய்ச்சி செய்து நூல்களை எழுதியுள்ளார். இந்த வம்சம் சேதி நாட்டு அரசர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள் .

இரண்டாம் யுவராஜ தேவ காலத்தில் வாழ்ந்தவர்  கவிஞர் ஸ்ரீனிவாச (Srinivasa). அந்த மன்னரைப் புகழ்ந்து 45 ஸம்ஸ்க்ருதக் கவிகளை இயற்றினார். ஹேஹயர் வம்சம் , அத்ரி மகரிஷி முதல் யுவராஜா வரை வந்த மன்னர்களை பாடும் பிரசஸ்தி / புகழுரை இது. அந்த வம்சத்தில் வாழ்ந்த புராண கால மன்னன் கார்த்த வீர்யார்ஜுனன் மிகவும் புகழ் பெற்றவன்.கவிஞன் சீனிவாச, ஸ்திர நந்த என்பவரின் மகன்.

கல்வெட்டிலுள்ள  கவிதையின் இரண்டாம் பகுதியை யாத்தவர் பெயர் திர என்பவர் மகனான ஸஜ்ஜன ஆவார். கல்வெட்டின் கடைசி பகுதியை யாத்தவர் காயஸ்தர் (எழுதியவர்) ஸீரூக ஆவார். 87 செய்யுட்களுக்கு மேலுள்ளது இந்தக் கவிதைக் கல்வெட்டு.

பல சைவ குருமார்களின் பெயர்களையும் இந்தக் கல்வெட்டு பட்டியல் இடுகிறது. சேதி இளவரசன் கவியூரவர்ஷனின் மனைவி/ ராணி ஒரு சிவன் கோவில் காட்டியது பற்றியும் கடம்பகுஹாவில் இருந்து குடி ஏறிய மத்தமயூரா  பிரிவு சைவ அடியார்களுக்கு சில கிராமங்களை தானம் கொடுத்தது பற்றியும் கவிதை பாடுகிறது.

செய்யுள் 85-ல் இந்தக் கவிதையைக் கண்டு வியந்த கவிஞன் ராஜசேகரனின் வாசகம் உளது. அவர் அரசவைக்கு விஜயம் செய்தபோது இந்தக் கவிதையைப் பார்த்தார் என்றும் தெரிகிறது.  கவிதைக் கல்வெட்டில் இந்தியாவின் பல பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன.சீனிவாச எழுதிய கவிதைப்  பகுதியை விட ஸஜ்ஜன எழுதிய பகுதி கொஞ்சம் தரத்தில் தாழ்ந்துள்ளது.

என் கருத்து

இந்தக் கல்வெட்டு மூலம் நமக்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தோரின் பெயர்களை அறிய முடிகிறது. இப்போது சீனிவாசன் என்ற பெயரை விட  வேறு பெயர்களைக் காண முடியவில்லை.. இந்தக் கல்வெட்டில் காணப்படும் அரசர்கள், சைவ அடியார்களை ஆராய வேண்டும்; அந்தக் காலத்தில் பெண்கள் எந்த அளவுக்கு பக்தி சிரத்தையுடன் சிவன் கோவில்களைக் கட்டினார்கள், சைவ அடியார்களுக்கு எவ்வளவு தானம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் நோக்கற்பாலது. கோவில்கள் இல்லாவிடில் நமக்கு அக்கால வரலாறே தெரியாமல் போயிருக்கும். கலசூரி வம்சத்தினரின் அமர கண்டக்  கோவிலும்  , அவர்களுடைய நர்த்தனம் ஆடும் கணபதி யும் கலைஞர்களால் மிகவும் பாராட்டப்படுகின்றன.

தமிழக கல்வெட்டுகளில் உள்ள அரசர், எழுத்தர் பெயர்களையும், இடப் பெயர்களையும் தொகுத்து வெளியிட வேண்டும்; என் கையிலுள்ள ஆங்கிலப் புஸ்தகத்தில் 800 ஸம்ஸ்க்ருத, பிராகிருதக் கவிஞர்களின் பெயர்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

SOURCE – SANSKRIT AND PRAKRIT POETS KNOWN FROM INSCRIPTIONS’, D B DISKALKAR, PUNE, 1993 (WITH MY INPUTS)

xxx

Amarakantak temple; from Wikipedia

tags- காலசூரி வம்ச அரசர், சீனிவாசன், கவிதைக் கல்வெட்டு,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: