செப்பு மொழி இருபத்தியேழு! (Post No.11178)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,178

Date uploaded in London – –    9  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தியேழு!

ச.நாகராஜன்

1.ஒரு குருடன் பணத்தைப் பார்த்தால் அவனுக்கு உடனே பார்வை வந்து விடுகிறது.

ஒரு குருக்கள் பணத்தைப் பார்த்தால் அவர் தனது சாஸ்திரங்களையே விற்று விடுகிறார்.

When a blind man sees money his eyes open

When a priest sees money he sells his scriptures

2. நீரானது ஒரு கப்பலை  மிதக்க வைக்கவும் முடியும்; மூழ்கடிக்கவும் முடியும்

Water can both float and sink a ship.

 3. பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் மனிதன் தான்; அவனைச் சுமப்பவனும் மனிதன் தான்!

He who sits in the palanquin and those who carry it are all men.

4. மனிதர்கள் பிசாசைப் பார்த்து பாதி பயப்படுகிறார்கள். பிசாசுகளோ மனிதர்களைப் பார்த்து பாதிக்கு மேலும் பயப்படுகிறது.

Men are half afraid of ghosts; ghosts are more than half afraid of men.

5. சாப்பிட போதுமானவை இருந்து உடுக்க துணிகளும் இருக்கும் போது நல்நடத்தைகளும் நீதிநெறிகளும் தோன்றுகின்றன.

Men there is enough to eat and to wear manners and morals appear.

6. அவனைக் கொன்றால் அவனிடம் உயிரே இல்லை; அவனை வெட்டினால் அவனிடம் சதையே இல்லை.

If I kill him he has no skin; if I cut him he has no flesh.

7. அரசனுக்கு முன்னால் ஒரு போதும் தமாஷ் செய்யாதே!

Never joke before a prince.

8. Heaven provides the man, earth the grave for him.

வானம் பொழிகிறது; பூமி அவனைப் புதைக்கிறது!

9. உயிரோடிருக்கும் போது உயிர் தெரிவதில்லை. செத்த போதோ உடல் தெரிவதில்லை!

Alive, we know not the soul, dead, we know not the body.

10. நீ புலியைப் பார்க்காதிருக்கலாம். ஆனால் அது உன்னைப் பார்க்காமல் இருக்காது!

You may miss the tiger; but he won’t miss.

11. தனி ஒரு இலை அசையும் போது எல்லாக் கிளைகளும் ஆடும்.

When a single leaf moves, all the branches shake.

12. அதிர்ஷ்ட காலம் வரும் போது யார் தான் வராமலிருப்பார்கள்?

அது வரவில்லையெனில் எவர் தான் வருவார்?

If a lucky time come, who does not come?

If it does not come, who comes!

13. சூதாட்ட களத்தில் அப்பனும் இல்லை; மகனும் இல்லை!

In the gambling ring, – no father  and  son.

14. ஒரு ராஜ்யத்தை ஆள்வது சுலபம்; ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கஷ்டம்!

To rule a kingdom is easy; to control a family is difficult.

15. விறகு காட்டில் விற்கப்படாது; மீன் ஏரியில் விற்கப்படாது.

Firewood is not sold in a forest;

Fish is not sold on the lake.

16. ஒரு கையால் தட்டினால் ஓசை வராது.

There is no sound when we clap with only one hand.

17. ஒரு விவசாயி பசியினால் செத்தான்; அவன் தலையணையில் இருந்தன விதைகள்!

A farmer dies from hunger

At his pillow, the seeds.

18. முழு முட்டாள் தன் மனைவியை நினைத்து கர்வப்படுவான்.

அரை முட்டாளோ தன் குழந்தையை நினைத்து!

Quite a fool is proud of his wife;

Half a fool of his child

19. விம்மி அழுது துக்கப்பட்டு முடிந்தவுடன் யார்

செத்தது என்று கேட்டானாம்!

After sobbing and grieving

He asks who is dead.

20. வெடிமருந்தை எடுத்துக் கொண்டு தீயில் குதித்தானாம்!

Carrying gunpowder, he jumps into the fire.

21. ஏற முடியாத ஒரு மரத்தை நீ அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.

A tree you cannot climb, you need not bother to look up at.

22. இருட்டில் நடக்க பட்டாடை அணிந்தாளாம்!

Dressing in silk for a walk in the dark.

23. குருடன் நதியைக் குற்றம் சொன்னானாம்!

The blind man blames the river.

24. வாய் சொல்கின்ற அளவு கண்கள் சொல்லும்.

The eyes say as much as the mouth.

25. நிர்வாணமான ஒருவன் ஒருபோதும் எதையும்

இழந்தது கிடையாது.

No naked man ever lost anything.

26. அழுகின்ற குழந்தை மேலும் மாஜிஸ்ட்ரேட் மேலும் நம்மால் ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.

We have no power over a crying child or a magistrate.

27. ஆயிரம் பாய்கள் கொண்ட ஒரு அறையில் நீ தூங்கினாலும் உன்னால் ஒரு பாயின் மீது தான் தூங்க முடியும்.

Even if you sleep in a thousand- mat room, you can only sleep

on one mat.

இவை அனைத்தும் ஜப்பானிய, சீன, தென் கொரிய பழமொழிகளாகும்.

அனுபவத்தின் அடிப்படையில் வழக்கில் உள்ள இவை அனைத்தும்

பொதுவாகப் பார்த்தால் அனைத்து நாட்டுக்கும் பொதுவானவையே.

அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வார்த்தைகளால் வெவ்வேறு விதமாக இந்தக் கருத்துக்கள் கூறப்படுகின்றன!

**tags- செப்பு மொழி

புத்தக அறிமுகம் – 23

ரிஷிகள் பூமி!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ரிஷிகள் பூமி!

2. மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல்

3. மஹரிஷி அத்ரி!

4. மஹரிஷி அங்கிரஸ்!

5. மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)

6. மஹரிஷி ஆபஸ்தம்பர்!

7. மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!

8. மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!

9. மஹரிஷி ஆபவர்! நஷ்டம் ஏற்படாமலிருக்க கார்த்தவீர்யார்ஜுனன் நாமம்!!

10. மஹரிஷி ஜாபாலி!

11. மஹரிஷி சரபங்கர்!

12. மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!

13. மஹரிஷி சூளி!

14. மஹரிஷி உதங்கர்!

15. மஹரிஷி கபிலர்! – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

16. மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!

17. மஹரிஷி கார்க்கியர்

18. மஹரிஷி சமீகர்! – மஹாபாரதம் சம்பந்தமாக சந்தேகங்களைத் தீர்த்த பக்ஷிகள்!

19. மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் பற்றிய வரலாறு!

20. மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு!

21. மஹரிஷி காமண்டகர்!

22. சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்!

23. மஹரிஷி அஸிதர்!

24. மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்!

25. மஹரிஷி காத்யாயனர்!

26. மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்!

27. மஹரிஷி தனுஸாக்ஷர்!

28. மஹரிஷி தமனர்!

29. மஹரிஷி சதானந்தர்!

30. மஹரிஷி க்ரது!

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :

என்னுரை

பாரத பூமி ரிஷிகள் பூமி; ஆன்மீக பூமி.

இமயம் முதல் குமரி வரை ரிஷிகளின் பாதங்கள் பட்ட பூமி.

எடுத்துக்காட்டிற்காக முதல் அத்தியாயத்திலேயே தமிழகத்தில் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

இதே போல பாரத தேசமெங்கும் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள், நகர்கள் ஏராளம் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்க உரைகளில் 1893 செப்டம்பர் 19ஆம் தேதி ஆற்றிய உரையில் ரிஷிகள் பற்றிக் கூறியது பொருள் பொதிந்த

ஒன்றாகும். அவர் கூறியது:-

“ஆன்மாவிற்கு ஆன்மாவிற்கு உள்ள தொடர்பு, தனிப்பட்டவர்களுக்கும் அவர்களைப் படைத்தவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவை பற்றிய விதிகளைக் கண்டு பிடித்தவர்கள் ரிஷிகள்; அவர்கள் கூறியவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

அவர்கள் கூறிய விதிகளும் கொள்கைகளும் சரிதான் என்பதை அறிய நிரூபணம் இந்த விதிகளைச் சரிபார்த்தலே. அவர்கள் உலகிற்கு அளிக்கும் சவால் சரி பாருங்கள் என்பது தான்!”

ஸ்வாமி விவேகானந்தர் இன்னொரு சமயம் கூறியது : “ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள்; அவர்கள் கூறுவதை உலகம் அறிய நெடுங்காலமாகும்.”

ஆக இப்படிப்பட்ட ரிஷிகளைப் பற்றிய ஒரு அறிமுக நூலே இது.

இந்த ஆரம்பத்தைத் தொடர்ந்து அவர்களை முற்றிலுமாக அறிந்து அவர்கள் கூறிய ரகசியங்களை அறிய ஒரு ஆவலைத் தூண்டுவதே இந்த நூலின் நோக்கமாகும்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

14-1-22

ச.நாகராஜன்
பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: