Post No. 11,181
Date uploaded in London – – 10 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
துணிவே எனது தோழன் – Courage My Companion : ஒரு சுயசரித்திரம்!
ச.நாகராஜன்
1
திரு ஆர். வி. ராஜன் அவர்கள் எழுதிய ‘துணிவே எனது தோழன் – Courage My Companion – என்ற அவரது சுய சரித்திரத்தைப் படிக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது.
பங்களூரில் வசிக்கும் விஞ்ஞானி திரு வி. தேசிகன் எனது நல்ல நண்பர். 1983ஆண்டிற்கான DRDO விருதான, ‘ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி ‘( ‘Scientist of the Year (1983) DRDO award) என்ற விருதை பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களிடமிருந்து நேரில் பெற்றவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. பங்களூரில் நடந்த வெளியீட்டு விழாவிற்கு அவர் என்னை அழைத்தார்.
அங்கு அறிமுகமானார் திரு ஆர்.வி.ராஜன்.
திரு ஆர்.வி.ராஜன் அவர்களின் தூண்டுதலினால் வெளிவந்தது ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ்.
விழாவிற்குப் பின்னர் திரு ராஜன் அவர்களின் அனைத்து ஆங்கிலக் கட்டுரைகளும் எனக்கு வர ஆரம்பித்தன. பல இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் நடைச்சித்திரக் கட்டுரைகளாக பெரும்பாலும் அமைந்திருந்தன; சுவையான செய்திகளைத் தந்து சிந்தனையைத் தூண்டின.
இது தொடரும் போது தான் சென்ற வாரம் டிஜிடல் வடிவிலான அவரது சுயசரிதையும் எனக்குக் கிடைத்தது. 2009ஆம் ஆண்டு எழுதப்பட்டது இந்த நூல்.
2
206 பக்கங்கள் கொண்ட இந்த நூலை எழுதி பதிமுன்று ஆண்டுகள் ஆன போதிலும் கூட மிகவும் ரசித்துப் படித்தேன்.
இதைப் படித்த Madison World நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மானேஜிங் டைரக்டரான திரு சாம் பல்சாரா, ‘இதைப் படித்த போது ஆர்.கே,நாராயணனின் நாவலைப் படித்தது போல இருந்தது’ என்று தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
நானும் ஒரு மால்குடி பிரியன் தான்! அவரது கருத்து நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரிதான் என்று நான் வழி மொழிகிறேன்.
தட்டுத் தடங்கலற்ற சரளமான ஆங்கில நடை சக்கை போடு போடுகிறது! எளிமையான நடை; இனிய நடை.
சுவை பட தனது மும்பை வாழ்க்கையில் ஆரம்பிக்கிறார் சுய சரிதத்தை.
மும்பைக்கே உரித்தான சால் என்னும் (தமிழக ஸ்டோரை நினைவுபடுத்தும்) வீட்டில் தொடங்குகிறது அவர் வாழ்க்கை. சால் என்பது வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் ஐந்து அல்லது ஆறு வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும். ஒரு அறை அல்லது இரண்டு அறை கொண்ட வீடு தான்! பல மாடிக் குடியிருப்புகளில் இப்படி வாழ்ந்து வந்த அந்த ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டி விளக்குகிறார் அவர்.
எதிர் வரும் வாழ்க்கையே ஒரு சவால் தான்; அதில் பற்பல முட்டுக்கட்டைகள்!
அந்தத் தடைக்கற்களை அவர் படிக்கட்டுகளாக மாற்றிய வரலாறே அவரது சுய சரித்திரம்.
3
பெரிய குடும்பம்.
விளம்பரத் துறையில் அவர் காலடி எடுத்து வைக்கிறார். அதில் ஆகப் பெரும் உலக நிறுவனங்களின் நிர்வாகிகளையும் தலைவர்களையும் சந்திக்கிறார்.
தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்கிறார்.
விளம்பரத் துறை எப்படிப்பட்ட ஒன்று தெரியாத சாமானியனான (என் போன்ற) எந்த ஒருவருக்கும் இந்த நூல் சுலபமாக அதைப் புரிய வைத்து விடும்.
நாட்டுப்புறம் என்று சொல்லப்படும் இந்தக் கால ஊராட்சி கிராமங்களில் பற்பசையிலிருந்து டயர் வரை கொண்டு சென்று விளம்பரப்படுத்த ஒரு தனி முயற்சியை எடுத்து அந்தப் பழைய காலத்தில் அதற்கு ஒரு முன் மாதிரியான வித்தை அவர் ஊன்றினார்.
மும்பை, டில்லி, கல்கத்தா, சென்னை என்று பல ஊர்களைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசுகின்ற ஏராளமான பெயர்களை நூலில் காண்கிறோம். பெயர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை; என்ன காரியம் சாதிக்கப்பட்டது என்பதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஆற்றொழுக்குப் போன்ற நடையில் சொல்லி நம்மைக் கவர்கிறார் ராஜன்.
4
நூல் காவிரி போலப் பரந்து பாய்ந்தோடி பல கிளைகளாகவும் பிரிகிறது.
ஒரு பக்கம் விளம்பரத் துறை வேலை என்றால் இன்னொரு பக்கம் சமுதாய சிந்தனை!
ரவுண்ட் டேபிள் என்னும் அமைப்பு செயல்பட ஆரம்பித்த காலத்தில் அதில் இணைந்து தான் ஆற்றிய சமுதாயப் பணிகளை விரிவு பட, சுவையாகத் தருகிறார் ராஜன்.
அதில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வியந்து பாராட்ட பல நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு ஆங்காங்கு நடக்கும் கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்; இறுதியில் தானே உச்சியில் ஏறி ஜொலிக்கிறார்.
அத்துடன் மட்டுமல்ல, மும்பை, கல்கத்தா வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சென்னைக்கு வந்து அங்கும் பல சங்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்கிறார். Ad Club, AMIC, RMAI, Rotary போன்ற பல அமைப்புகளில் பல சவால் விடும் பணிகளை மேற்கொண்டு அவற்றில் வெற்றிக் கொடியை நாட்டுகிறார்.
இவ்வளவு பணியிலும் ஈடுபட தேனீ போன்ற சுறுசுறுப்பும், யானை போன்ற பலமும், கருடன் போல உயரப் பறக்கும் மனமும், நான் தான் தலைவன் என்று பார்வையாலேயே சொல்லி கர்ஜிக்கும் சிங்கத்தின் திறனும் தேவை. அவற்றைக் கொண்டவர் இவரே என்று நூலைப் படிக்கும் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது.
5
அந்தணக் குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட பிறப்பொழுக்கத்தை அவர் விட்டு விடவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றாலும் மறக்காமல் பவித்ரம், தர்ப்பை எடுத்துக் கொண்டு சென்று ஆவணி அவிட்ட பூணுலை மாட்டிக் கொண்ட செய்தியைப் படிக்கிறோம். வளர்ப்பு அப்படி!
சைவ உணவு என்றாலே என்ன என்று தெரியாத இடங்களில் அவர் பட்ட சங்கடமும் தெரிகிறது.
மனைவி பிரபா மீது கொண்ட அளவற்ற அவரது அன்பு, இரு மகள், ஒரு மகன், செல்லப் பேத்திகள், பேரன் பற்றிய செய்திகளையும் படிக்கிறோம்.
குழந்தை அவர் தொந்தி மீது உட்கார்ந்து குதிக்கும் போது அவர் சந்தோஷம் அடைகிறார்; அதைப் படிக்கும் போது நமக்கும் குதூகலம் ஏற்படும் தானே!
43 ஆண்டுகள் இடைவிடாது உழைக்கிறார். 1-4-2007இல் தனது அனுக்ரஹா மாடிஸனிலிருந்து தானே ஓய்வு பெற்றுக் கொள்கிறார்.
நூலில் சுவையான குட்டிக் குட்டிச் செய்திகள் ஏராளம் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று. ஆகப் பெரிய கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லக்ஷ்மண் இவரைப் பார்த்து நான்கு விரல்களில் சில கோடுகளை இழுக்கிறார். அட, ஒரு சில வினாடிகளில் அது ஆர்.வி.ராஜனைக் காட்டுகிறதே!
யாரையும் அவர் மறக்கவில்லை. குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், மேலதிகாரிகள் என யாரையும் விட்டு விடவில்லை. அன்புடன் அவர்களை நினைவு கூர்கிறார். பாராட்டுகிறார். நன்றி தெரிவிக்கிறார்!
6
இந்த நூலின் பயன் என்ன?
சம காலத்தில் நவீன தொழில் நுட்பத்தால் ஏராளமான புதிய கலைகள் தோன்றியுள்ளன. அவற்றின் துவக்கமும் வளர்ச்சியும், விரிவாக்கமும், அவசியமும் அதில் முனைப்புடன் ஈடுபட்டவர்கள் மட்டுமே அறிய முடியும்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய சரிதத்தை எழுதினால் தான் அது அனைவரையும் சென்றடையும்.
அந்த வகையில் இந்த சுய சரிதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று!
அதை இனிய நடையில் தந்த ஆர்.வி.ராஜன் அனைவரது பாராட்டுக்கும் உரியவர்.
7
புதுக்கோட்டையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெற்குப்பை என்ற ஊரில் 30-8-1942 அன்று பிறந்தார் திரு ஆர்.வி.ராஜன். 30-8-2022இல் அவருக்கு 80 வயது. அவருக்கு நமது வணக்கங்கள்; வாழ்த்துக்கள்!
இப்போது அவர் சென்னையில் வசிக்கிறார்.
8
திரு ராஜன் அவர்களுக்கு எனது தனிப்பட்ட முறை நன்றி ஒன்றும் உண்டு. இதுவரை எனது புத்தகங்கள் 114 வெளியாகியுள்ளன. இவற்றில் லண்டனைச் சேர்ந்த திருமதி நிர்மலா ராஜு அவர்களின் www.nilacharal.com வெளியிட்ட புத்தகங்கள் 61. பங்களூரைச் சேர்ந்த www.pustaka.co.in வெளியிட்ட புத்தகங்கள் 53. புஸ்தகா நிறுவன உரிமையாளரான டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd. அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் திரு ராஜன் தான்! நன்றி மறப்பல்லது நன்றன்று, அல்லவா! அவருக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
9
Courage My Companion நூலைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் அணுகினால் இந்தப் புத்தகம் டிஜிடல் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.
அட, இன்னொரு சுவையான, ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேஸ்’, போன்ற, வேறு மாதிரியான ஒரு புத்தகத்தை நீங்களும் தான் படித்து மகிழுங்களேன்!
விளம்பரம் இல்லாத வணிகமானது அழகி ஒருத்தி இருட்டில் தன் மேனி அழகைக் காண்பிப்பது போல – அல்லது அவள் தன் அருள் பொங்கும் முகத்தைக் காண்பிப்பது போல – அவளது அழகும் அருள் பொங்கும் முகமும் அவளுக்கு மட்டுமே தான் தெரியும் என்ற வார்த்தைகளைச் சும்மாவா சொன்னார்கள்?!
***
நன்றி : புத்தகத்தை அனுப்பிய ஆர்.வி.ராஜன் அவர்களுக்கு எனது நன்றி!
புத்தக அறிமுகம் – 24
Psychic Wonders And Pathway To Success
Table of Contents
1. Psychic Wonder Wolf Messing Met Sri Sathya Sai Baba Thrice: Baba’s Revealation!
2. Einstein, Stalin, Mahatma Gandhiji Tested Wolf Messing – More Incidents in Detail
3. Uri Geller, the Man Who Bent the Spoon With His Mental Power
4. OOBE- Out of Body Experience is Real!
5. Psycho Kinesis Proved Scientifically!
7. Counting Horse! : The Mathematical Wonder Of Animal World
8. Gothe’s Strange Experiences
12. The Power of Vibrations, Sound and Music
14. Alexey Pavlovich Kulaichev on the Secrets of Sri Yantra!
15. Feng Shui – True or False? If It Is True, Is There Proof?
16. How To Invite Wealth – The Hindu Way
17. Agni Purana Explains and Helps You to Select the Correct Gem for Wealth, Health and Prosperity
18. Hitler’s Wrong Symbol That Defeated Him and Saved the World
19. Ayurveda Or The Science Of Life Shows The Way To Live One Hundred Years! – Part I
20. Ayurveda or the Science of Life Shows the Way to Live One Hundred Years! Part II
21. Ayurveda or The Science of Life Shows the Way to Live One Hundred Years! Part III
24. The Story of Revata, The First Time Travel Story In The History Of Mankind!
25. Nakshatra and Presiding Deity
27. The Mysterious Parallel Universe!
28. Hugh Everett and His Path Breaking New Theory of Parallel Universe
29. Warning! Your Xerox May Also Be Reading This Article Right Now in a Parallel Universe!
30. Time Is a Mysterious Factor – Let Us First Know About the Present!
31. Carl Sagan, Fritjof Capra on “The Dance That Reveals the Mysteries of Universe” – Part I
32. Carl Sagan, Fritjof Capra on “The Dance that Reveals the Mysteries of Universe” – Part II
33. Carl Sagan, Fritjof Capra on “The Dance that Reveals the Mysteries of Universe” – Part III
34. The Secret of the Universe – It Exists Only for Unreflecting Minds!
35. How to Increase Your IQ? Solving Problems by Selective Encoding – Part I
36. How to Increase IQ? Solving Problems by Selective Encoding – Part II
37. How to Increase IQ? Solving Problems by Selective Encoding – Part III
38. How to Increase Your IQ – Part IV
39. How To Increase Your Creative Power – The Hindu Way!
41. Learn The Success Principles to Get Whatever You Want
42. How to Prevent Ageing: Use Your Brain to Change Your Age
43. How to Cultivate the State of Contentment and Mental State of Appreciation?
45. Business Is Business and How to Win the Game
46. How Your Thoughts Could Help You
47. Make Every Stumbling Block As a Stepping Stone
48. Predict Yourself Whether You Are A Tense Person Or Not!
Reference Books for Further reading :
*
I have dedicated this book to my parents:
Dedication by Santhanam Nagarajan
This book is dedicated to my parents
Sri V.Santhanam
and
Srimathi Rajalakshmi Santhanam
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**
Tags- துணிவே எனது தோழன் , Courage My Companion ,