Post No. 11,184
Date uploaded in London – – 11 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில்.. – (1)
ச.நாகராஜன்
யூலரின் பதில்!
(1707 – 1783)
பிரபல கணித மேதையான யூலர் (LEONHARD EULER) 1766ஆம் ஆண்டு தனது 59வது வயதில் நோய்வாய்ப்பட்டார். அவரது கண்பார்வை மங்கிப் போய், பார்வையை இழந்து விட்டார். ஆனால் மனதிலேயே எந்தக் கணிதத்தையும் போட்டு விடும் ஆற்றல் அவருக்கு இருந்ததால் தனது கண் பார்வை போனது பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை.
அடுத்த 17 ஆண்டுகளில் அவர் தனது நூல்களைத் தொடர்ந்து படைத்து வந்தார். பாதிக்குப் பாதியான அவரது நூல்கள் இந்த 17 ஆண்டுகளில் இயற்றப்பட்டவை தான்!
அவருக்கு கண்ணில் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது. பார்வை வரவில்லை. எப்படி இனி நீங்கள் உங்கள் வேலையைத் தொடரப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது யூலர் கூறினார் : இனி மேலாவது எதுவும் எனது கவனத்தைக் குலைக்காமல் இருக்கும். (Atleast now, nothing will distract my attention).
அவர் போட்ட கணிதப் புதிர்களில் இதுவும் ஒன்று:-
ஒரு வியாபாரி சில குதிரைகளையும் காளைகளையும் வாங்கினான். அவன் கொடுத்த தொகை 1770 டேலர். ஒவ்வொரு காளைக்கும் அவன் கொடுத்த பணம் 31 டேலர். ஒவ்வொரு குதிரைக்கும் அவன் கொடுத்த பணம் 21 டேலர். அவன் எத்தனை காளைகள் வாங்கினான்? எத்தனை குதிரைகள் வாங்கினான்? (Taler – எகிப்திய நாணயம்)
தீர்வு:
இதை 31x + 21y = 1770 என்ற சமன்பாட்டால் தீர்க்க வேண்டும்.
வரும் விடைகள் மூன்று.
காளைகள் 9 ; குதிரைகள் 71
காளைகள் 30 ; குதிரைகள் 40
காளைகள் 51 ; குதிரைகள் 9
மூன்று விடைகளும் சரி தான்!
*
பைத்தியமாக நடித்த கணித மேதை அல்ஹாஸன்
(965-1039)
இராக்கில் பஸ்ரா என்ற நகரில் பிறந்தவர் இபுன் அல்-ஹய்தம்.
பெரிய இயற்பியல் மற்றும் கணித மேதை. அவர் அல்ஹாஸன் என்ற பெயரால் நாடு முழுவதும் பிரபலமானார்.
எகிப்தில் தான் அவரது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி கழிந்தது.
நைல் நதியில் வருடந்தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
அதனால் ஏற்படும் சேதமும் அதிகம்.
அல்ஹாஸன் தன்னால் நைல் நதி வெள்ளத்தைத் தடுக்கும்படியான ஒரு மெஷினை செய்ய முடியும் என்று கூறி வரவே இது எகிப்தை ஆண்ட அல்-ஹகீம் காதிற்கு எட்டியது.
உடனே அவரை கெய்ரோவிற்கு வருமாறு அல்-ஹகீம் அழைப்பு விடுத்தான்.
மன்னரின் அழைப்பு ஆயிற்றே. உடனே அல்ஹாஸன் கெய்ரோவிற்குக் கிளம்பினார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, சொன்னபடி தான் ஒரு மெஷினைச் செய்யவில்லை என்றால் மன்னனின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும், தனது உயிர் நிலைக்காது என்று!
நன்கு யோசித்தார். எகிப்தில் பைத்தியங்களுக்குத் தனி சலுகை கொடுக்கப்படுவது வழக்கம்.
ஆகவே அவர் பைத்தியமானது போல நடிக்க ஆரம்பித்தார்.
அவரது நடிப்பு அசல் பைத்தியங்களையே தோற்க அடிக்கும் படி இருந்ததால் அவர் மன்னனின் கோபத்திற்கு ஆளாகவில்லை.
இந்த நடிப்பை 1021ஆம் ஆண்டு அல்-ஹகீம் இறக்கும் வரை அவர் தொடர்ந்தார்.
பின்னர் அவர் ‘பைத்தியம் தெளிந்து விட்டது’!
பெரும் கணீத மேதைகளே வியக்கும் படி அவர் ஏராளமான கணிதப் புதிர்களைப் படைத்திருக்கிறார்!
***
புத்தக அறிமுகம் – 25
கீதை வழி!
பொருளடக்கம்
2. கீதையின் முதல் நான்கு வார்த்தைகளில் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மஹாராணி!
3. கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!
4. கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!
5. நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!
6. எளிமை, பிரஸ்னம், சேவை: கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!
7. மஹாத்மா போற்றிய பகவத் கீதையும், காயத்ரியும், ஈசோபநிஷத்தும்!
8. காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி!
9. கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்!!
10. கீதை: மனித குலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! – கீதையின் முதல் கட்டளை!
11. கீதையின் இரண்டாவது கட்டளை!
12. கீதையின் மூன்றாவது கட்டளை!
13. கீதையின் நான்காவது கட்டளை!
17. கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை!
18. ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!
19. கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்!
20. ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!
23. பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை!
24. கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி!
*
புத்தகத்தில் நான் வழங்கியுள்ள முன்னுரை இது:
முன்னுரை
மனித குலம் வாழ்வாங்கு வாழ்ந்து உய்யும் பொருட்டு பகவான் கிருஷ்ண பரமாத்மாவே அருளிய நூல் பகவத் கீதை.
இதைப் பற்றிய ஏராளமான அற்புதமான உண்மைகளை இந்த நூலில் காணலாம்.
கீதை வழியை உணரலாம்; காணலாம்; அதன் வழி செல்லலாம்!
இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஞான ஆலயம் மாத இதழிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது வெளி வந்தவை.
இவற்றை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் www.tamilandvedas.com ப்ளாக் திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ
30-7-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**