Post No. 11,185
Date uploaded in London – 11 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
உலகிலுள்ள மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டுபிடிக்க சில மர்ம தூதர்கள் உதவினார்கள் . கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் உலகப் புகழ்பெற்ற இந்துக் கோவில் ஆகும். இதைக் கண்டுபிடிக்க உதவியது ஒரு பட்டுப் பூச்சி (Butterfly). ஹென்றி முகோட் என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பட்டுப் பூச்சிகளைச் சேகரித்து வந்தார். அவர் ஒரு அபூர்வ பட்டுப் பூச்சியைப் பார்த்தவுடன் அதைப் பிடிப்பதற்காக கையில் (net) வலையைத் தூக்கிக்கொண்டு அதன் பின்னால் சென்றார். நீண்ட தூரம் அடர்ந்த காட்டுக்குள் சென்ற போது பிரம்மாண்டமான ஆல மரங்களுக்கு இடையே மாபெரும் கட்டிடங்கள் இருப்பதை அறிந்து உலகிற்கு அறிவித்தார். அதுதான் தென் கிழக்கு ஆசியாவை 1500 ஆண்டுகளுக்கு ஆண்ட இந்து சாம்ராஜ்யத்தின் சிதைவுகளின் ஒரு பகுதி என்று தெரிந்தது. அதன் மூலம் அங்கோர்வாட் கண்டுபிடிக்கப்பட்டது.
பூர்வ ஜென்மத்தில் இந்து சிற்பியாக இருந்த ஒருவன் பட்டுப் பூச்சி வடிவத்தில் வந்து ஹென்றியை காட்டுக்குள் வரும்படி செய்தானா?
xxx
வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் அஜந்தா பகுதியிலுள்ள காடுகளில் புலி வேட்டை ஆடுவது வழக்கம். ஜான் ஸ்மித் என்பவர் புலி வேட்டை ஆடிய போது , ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் வந்து அவர்களை ஒரு குகைக்குள் அழைத்துச் சென்று பிரமாண்டமான அஜந்தா குகைகளைக் காட்டிவிட்டு போய்விட்டான். அவற்றை ஆராய்ந்ததில் புராதன ஓவியங்களும் சிற்பங்களும் வெளிப்பட்டன..
பூர்வ ஜென்மத்தில் புத்த பிட்சுவாக இருந்த ஒருவர் ஆட்டு இடையனாக வந்தானா ?
Xxx
எகிப்திய பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் மர்மமான முறையில்தான். ஒரு அராபியன் திடீரென்று தோன்றிய ஒரு நரியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது பிரமிடைச் (Pyramids) சுற்றி இருந்த மணலுக்குள் இருந்த ஒரு குழியில் விழுந்து மறைந்தது. மணலுக்குள் எப்படி அப்படி ஒரு சுரங்கம் என்று அராபியன் ஆராய்ந்தபோது பிரம்மாண்டமான எகிப்திய பிரமிடுகளுக்குள் சித்திர எழுத்துக்களும் ரத்தினம் பதித்த சித்திரங்களும், மம்மி (Mummy) களும் மறைந்து இருந்ததை உலகிற்கு அறிவித்தான்.
எகிப்திய மன்னனே நரியாக வடிவெடுத்து வந்தானோ!
xxx
இஸ்ரேலில் சாக்கடல் (Dead Sea) பகுதியில் குகைகளுக்குள் 2200 ஆண்டுப் பழமையான பைபிள் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு ஆட்டினால்தான். ஒரு ஆட்டிடையன் காணாமற்போன ஒரு ஆட்டைத்தேடி ஒரு குகைக்குள் நுழைந்தான் . அப்போது அவன் கண்டுபிடித்த சுருள்கள் (Scrolls) பைபிள் வரலாற்றையே மாற்றியது
யார் அந்த ஆட்டு இடையன்? கிறிஸ்துவா? அவர்க்கு முந்திய மோஸஸின் மறுபிறவியா?
xxx
ஆதி சங்கரர், காட்டின் வழியே செல்லுகையில், கர்ப்பம் அடைந்த ஒரு தவளைக்குப் பாதுகாப்பாக ஒரு பாம்பு மழை நீர் விழாமல் தன் படத்தைக் குடை போல விரித்து நிற்பதைக் கண்டு அதிசயித்தார் . அந்த இடத்தின் அபூர்வ தன்மையை அறிந்து அங்கே சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார்.
xxx
வீர பாண்டிய கட்டபொம்மன், காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது அவனது நாய்கள் ஒரு முயலை விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் முயல், திடீரென்று வீரத்துடன் நாய்களை விர ட்டத் துணிந்தது. அந்த இடத்தின் வீரத் தன்மையை அறிந்து அங்கே கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டினான்.
xxx
மதுரை மீனாட்சி சுந்தரேசஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கலைப் பொக்கிஷம் ஆகும். அது தோன்றிய, வரலாறும் ஒரு மர்மமான சூழ்நிலையில்தான். தனஞ்சயன் என்ற வணிகன், வியாபாரத்தை முடித்துக் கொண்டு மதுரைக்கு வரும்போது , கடம்பவனக் காட்டின் வழியாக வந்தான். அங்கே ஒரு அதிசய ஜோதியை- ஒளியைக் கண்டான். அதைக் கவனித்தபோது தேவ லோகத்தில் இருந்து இந்திரன் முதலானோர் வந்து ஒரு லிங்கத்துக்குப் பூஜை செய்வதைக் கண்டான். மறுநாள் பகற்பொழுதில் அதை பாண்டிய மன்னனுக்குத் தெரிவிக்கவே புதிய மதுரை நகரமும் அதன் மத்தியில் மீனாட்சி கோவிலும் கட்டப்பட்டன.
யார் அந்த தனஞ்சயன்? இறைவன் அனுப்பிய மர்ம தூதனோ !!
இப்படி வரலாறு நெடுகிலும் சில மர்ம தூதர்கள் வந்து, மறைந்து போன செல்வங்களை, மர்மங்களை வெளிப்படுத்துகின்றனர்.
இது Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri என்ற தலைப்பில் 2011ல் வெளியிட்ட என்னுடைய கட்டுரையின் சுருக்கம் .
Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
https://tamilandvedas.com › 2011/11/14 › mysterious-…
14 Nov 2011 — There he was trapped amidst some ruins. He was surprised to see vast ruins in a thick forest. Now his interest moved slowly from the butterflies …
Tags- மர்ம தூதர்கள், அஜந்தா, அங்கோர்வாட், சிருங்கேரி, மதுரை , பாஞ்சாலங்குறிச்சி