ஸ்ரீரங்கம், திருவண்ணாமலையில் ஸம்ஸ்க்ருதக் கவிதைக் கல்வெட்டுகள் (Post.11186)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,186

Date uploaded in London – 11 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

புனே நகரைச் சேர்ந்த பேராசிரியர் திஸ்கல்கர்  1962ல் இறந்ததற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பத்தினர் அரசாங்க உதவியுடன் கல்வெட்டுகளில் உள்ள 800 சம்ஸ்க்ருத, பிராக்ருதக் கவிஞர்களின் விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை 1992ல் வெளியிட்டனர்.

அதிலுள்ள மேலும் சில சுவையான விஷயங்கள்:-

ஸ்ரீனிவாச தீக்ஷித

சக்திமங்கலத்தைச் சேர்ந்தவர் ; பெற்றோர்கள்-அண்டம்பிள்ளை , லட்சுமி ;மகன்கள் – கேசவ தீக்ஷித , அர்த்தநாரீஸ்வர தீக்ஷித , ராஜ சூடாமணி தீக்ஷித  .

திவாபிரதீப விருது பெற்றவர்.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் 11 நிலைக் கோபுரத்தைபி போற்றி நான்கு ஸம்ஸ்க்ருத கவிதைகளை இயற்றியுள்ளார்.

இந்தக் கல்வெட்டு கோவிலுக்குள் இருக்கிறதா என்பதை புஸ்தகம் வெளியிடவில்லை.

XXX

வேதாந்த தேசிக

புகழ்பெற்ற வைஷ்ணவ ஆசார்யர் , அறிஞர் ; மாதவரின் மகன்; ரங்கநாதரின் விக்ரஹத்தை 1370ம் ஆண்டில் கோபனார்ய என்பவர் மீண்டும் ஸ்தாபித்ததைப் பாராட்டி இ யற்றிய  ஸம்ஸ்க்ருதக் கவிதைகள் அடங்கிய கல்வெட்டு . தெலுங்கு சோழ மன்னன் சிங்க காலத்தில் இது நிகழ்ந்தது .

இதிலும் கல்வெட்டு இருக்கும் இடம் குறிப்பிடப்படவில்லை. நிகமாந்த வேதாந்த தேசிகர் 1369ல் இறந்ததாக விக்கிபீடியா முதலிய க்ளிக் களஞ்சியங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுவாமி தேசிகரின் தந்தை பெயரும் கலைக்களஞ்சிய குறியிலிருந்து மாறுபட்டுள்ளது. ஆக இரண்டு வட்டாரத்து தகவலில் எதோ ஒன்றில் பிழை உளது.

இந்தக் கல்வெட்டு கோவிலுக்குள் இருக்கிறதா என்பதை புஸ்தகம் வெளியிடவில்லை.

XXX

என்னுடைய கருத்து

800 ஸம்ஸ்க்ருத , ப்ராக்ருத கவிஞர்களின் பெயர்களைத் தொகுத்தது மகத்தான சாதனை. இது போல தமிழ்க் கல்வெட்டுகளில் மேக் கீர்த்திகள் முதலிய கவிதைகளை இயற்றியோரின் பெயர்களைத் தொகுக்க வேண்டும். 800 கவிஞ ர்கள் தொகுத்த கவிதைகளை வெளியிட வேண்டும். அது பல தொகுதிகளாக வருகையில் மொழி பெயர்ப்புடன் வரவேண்டும் .

XXX

வைகுண்டன் உதயணன்

இவரது கல்வெட்டு தமிழ் மொழியில் வட்டெழுத்தில் உள்ளது. இந்தப் புஸ்தகத்தில் அவர் பெயர் வருவதால் கவிதைகள் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது என்று ஊகிக்கலாம்.

கொல்லம் ஆண்டு 371ல் அதாவது 1169ல் இயற்றப்பட்டது வெள்ளாணி கல்வெட்டு என்று தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு சொல்கிறது வேணாட்டு அரசர் வீர ராம வர்மா நிலத்தையும், அதில் வேலை செய்ய பணியாட்களையும் தானம் செய்தது பற்றி கல்வெட்டு குறிப்பிடுகிறது.

XXX

எனது கருத்து

கல்வெட்டுக் கவிதைகளை தொகுதி தொகுதியாக வெளியிடுவதோடு , அவைகளில் வரும் பெயர்கள், கோத்திரங்கள், கோவில்கள், அரசர்கள் போன்றோரின் விவரங்களையும் தொகுத்து ஆராய வேண்டும். இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் கல்வெட்டுகள், தாமிர சாசனங்கள் அதிகம். உலகப் புகழ்பெற்ற தொல்பொருத்தி துறை அறிஞர், காலம் சென்ற டாக்டர் இரா. நாகசாமி, யாவரும் கேளிர் என்ற அவருடைய நூலில் கல்வெட்டுகள் தரும் அரிய விஷயங் களை , இலக்கிய தகவல்களோடு இணைத்து வெளியிட்டுள்ளார். அது போன்ற புஸ்தகங்களை  , நிறைய  வெளியிட வேண்டும்.

XXX subham xxxx

tags-  ஸம்ஸ்க்ருத, கவிதைக் கல்வெட்டுகள, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: