ராஜஸ்தான் கல்வெட்டில் மன்னர் எழுதிய பாட்டு (Post No.11188)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,188

Date uploaded in London – 12 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தமிழில் தனிப்பாடல்கள் இருப்பதுபோல சம்ஸ்க்ருத மொழியில் சுபாஷிதங்கள் என்ற கவிதைகள் இருக்கின்றன. இவைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. 20,000 சுபாஷிதங்களுக்கு மேல் புஸ்தக வடிவில் கிடைக்கின்றன. இவைகள் பொன்மொழிகள் போன்றவை. பெரும்பாலும் நீதிகளை போதிக்கும். ஆயினும் இவை தொடாத விஷயங்களே இல்லை. மருத்துவம், செக்ஸ், ஜோதிடம் முதலிய பல்வேறு விஷயங்கள் பற்றியன அவை.

ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகில் உள்ள கல்வெட்டில் கக்குக என்னும் பிரதிகார வம்ச மன்னனின் சுபாஷித பாடல் உள்ளது. இது கிபி. அல்லது பொது ஆண்டு 862-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. காக்க என்ற மன்னனின் மகன் கக்குக. அவன் சம்ஸ்க்ருத மொழியில் வல்லவன். கல்வெட்டும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது. கல்வெட்டைக் கவிதை வடிவில் பாடியவர் கவிஞர் மைத்ரி ரவி.

இந்தக் கல்வெட்டு இருக்கும் இடம் கண்டியால. இது ஜோத்பூர் அருகிலுள்ள கிராமம். கல்வெட்டு விநாயகர் துதியுடன் துவங்குகிறது. கக்குக என்ற மன்னனே எழுதிய பாடல் இது என்று கல்வெட்டு குறிப்பிடும் பாடல் வரிகளில் மன்னனுக்குப் பிடித்த விஷயங் கள் கல்வி, தர்மம், செல்வம், என்று சொல்லப்பட்டுள்ளது.

இதோ சுபாஷித வரிகள்

யெளவனம் விவிதைர் போகைர் மத்யமம் ச வயஹ ஸ்ரியா

வ்ருத்த பாவச்ச தர்மேண யஸ்ய யாதி ஸ புண்யவான்

கல்வெட்டை எழுதிய மைத்ரி ரவி ஒரு ‘மக’ பிராமணன். இவர்கள் சக த்வீப பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுவர்.இந்தியாவுக்கு வெளியே வசித்தவர்கள் என்றும் அங்கு படை எடுப்புகள் நடந்ததால் இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.

கக்குக என்னும் மன்னன், அருகிலுள்ள ஆபீரர் தாக்கு தலில் இருந்து  அந்த இடத்தைக் காப்பாற்றியதாக கல்வெட்டு கூறுகிறது.

XXX

நேபாள மன்னரின் சிவ ஸ்துதி

நேபாள நாட்டின் மன்னர் பூபால சந்திர , சம்ஸ்க்ருத மொழியில் புலமை வாய்ந்தவர். அவர் சிவபெருமான் மீது இயற்றிய துதி 1690ம் ஆண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது

நேபாள நாட்டின் தலை நகரமான காத்மாண்டுவில் புகழ்பெற்ற சிவன் கோவில் பசுபதிநாதர் கோவில் இருக்கிறது. அவரைப் போற்றும் பாடல் இது:

ஸ்ரீமத் பசுபதி சரண கமல தூளி தூஸ ரித சிரோருஹ ஸ்ரீமானேச்வரிஷ்ட தேவதா

வர லப்த ப்ரஸாத தே தீப்ய மான மானோ ன்னத ஸ்ரீ ரகு  வம்சாவதார  ரவிகுல திலக

ஹநுமத்வஜ ஜனேபாலேஸ்வர மஹா ராஜாதி ராஜ ஸகல ராஜசக்ராதீச்வர  

XXX

கவிஞர் கமல லாஞ்சன கவிதை

உலக நிலையாமை குறித்த ஒரு பாடல் ஹிமாச்சல பிரதேஷின் சம்பா பகுதியில் கிடைத்திருக்கிறது சம்பா அரசன் நாக பாலனின் புகழைப் பாடும் இக்கவியை அவரது குருவான  கமலா லா ஞ்சன இயற்றியுள்ளார். லலித வர்மனின்  17-ம் ஆட்சி ஆண்டில் இது எழுதப்பட்டது  லலிதா வர்மனின் ஆட்சியின் கீழ் குறு நிலா மன்னராக இருந்தவர் நாக பால..

மன்னன் லலித வர்மன் 1159ம் ஆண்டில் ஆட்சி புரிந்தார் . அவர்தான் குறுநில மன்னருக்கு ராஜநா க பட்டத் தை  அளித்தார் நாக பால இறந்தவுடன் அவருடைய மனைவி  தீப்பாய்ந்து உயித்துறக்கத் துணிந்தார். ஆயினும் அமைச்சர்கள் அவரைத்த தடுத்து நிறுத்தினர். அவளும் ஒரு குளம் வெட்டி சமூக சேவை செய்ததைக் கல்வெட்டு குறிப்பிட்டிடுகிறது 17 கவிதைகள் கொண்ட கல்வெட்டில் கடைசி பகுதி மட்டும் தான் மிஞ்சியுள்ளது. அதிலுள்ள கவிதை இதோ:-

ஜவ நப வெல்லோல்ல  கல்லோல்ல  மாலா

ப்ரதிமித சசிலேகா சஞ்சலம்  ஜீவலோகம்

ப்ரதிபதமவபுத்தயோ சீகரத்ஸாத  பல்ஹா

நிஜபதி ஸு க்ருதார்தம்  புஷ்கரா தாரஸேதம்

சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களும் கூட இதிலுள்ள எதுகை மோனைகளை ரசிக்கலாம்..

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

–subham—

Tags- கவிஞர், கமலலாஞ்சன, கல்வெட்டு, கவிதை , ராஜஸ்தான் மன்னர், சதி , நாகபால, நிலையாமை, சிவ ஸ்துதி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: