மேலும் சில சுவையான கல்வெட்டுக் கவிதைகள் (Post No.11190)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,190

Date uploaded in London – 13 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

800 கல்வெட்டுக் கவிஞர்கள் பற்றிய புஸ்தகத்தில் இருந்து மேலும் சில சுவையான, வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்களைக் காண்போம்.

அசலத

அசலத என்னும் கவிஞர் புனைந்த இரண்டு ஸம்ஸ்க்ருதக் கவிதைகள்

பட்டடக்கல் லோகேஸ்வர கோவில் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன் காலக் கல்வெட்டு இது (733-747CE).

தென்னிந்தியாவில்  1300 ஆண்டுகளுக்கு முன்னரே பரதக் கலை எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் இது.

நாட்டிய சாஸ்திரத்தை சம்ஸ்க்ருத மொழியில் நமக்களித்த பரத முனிவரை அசலத எழுதிய இரண்டு செய்யுட்களும் குறிப்பிடுகின்றன.

பரமத , குடிலோன்னதநட என்னும் இரண்டு வகை  நாட்டிய நாடகங்களை கவிஞர் குறிப்பிடுகிறார் என்பது நாட்டிய அறிஞர்கள் கருத்து. இது அக்காலத்தில் பரத நாட்டிய சாஸ்திரத்துக்குப் போட்டியாக மற்றொன்று  தோன்றியதாகவும் ஆனால் பரத சாஸ்திரம் வெற்றிக்கொடி நாட்டியது என்றும் விளம்புகிறது.

பரதனுத வசனரசனா விரசித நரஸேவ்ய  ஸிம்ஹ நாதேந

பரநட மதாந்த  ஹஸ்தி  பரிஹீனமதோ பவத் யேவ

நட  ஸேவ்ய பரதமதன்யுதபடுதர  வசனா சனி ப்ரபாதேன

குடிலோன்னதநட சைலஹ ஸ்புடிதாநத மஸ்தகஹ  பததி

பரத நாட்டிய சாஸ்திரத்தின் பெருமையை விதந்து ஓதும்  கவிதை  இது.

xxxx

அமர கவி

சண்டேல அரசன் போஜ வர்மன் (Bhojavarman),  வீர வர்மன், கல்யாண தேவி ஆகியோரின் புதல்வன் ஆவார் . அவர் 1288-ல் ஆட்சி புரிந்தபோது அமர என்ற பெயர்படை த்த அமைச்சர் ஒரு கவி இயற்றினார். அது பண்டேல்கண்ட் பகுதியில்  நானாவில் உள்ளது . அஜயகத  கல்வெட்டு எனப்படும். எண்களை திறமையாக சொல்லிலும் எண்களிலும் பயன்படுத்தும் கவிதை இது. கணட , இசேக்ஷண , சுருதி, பூத  என்ற சொற்கள் இவ்வாறு கையாளப்படுகிறது ஜெயா துர்க் என்னும் இடத்தில் கோவில் கட்டப்பட்டதைக் கூறும் சாசனம் இது. முதலில் கவிதை சிறப்பாக அமைய விஷ்ணுவை வேண்டுகிறார் . 39 செய்யுட்களில் வெவ்வேறு யாப்பு அணிகளில் அமைந்த கவிதை ஆகும்.

சித்ரவர்ணம் மிக்க ஒரு கம்பளம் அல்லது துணியைப் போன்றது என் செய்யுள் என்று புகழ்ந்து கொள்கிறார். அறிஞர் உலகத்தை மகிழ்விக்க, திருப்திப்படுத்த இந்த பல வண்ண துணியை தாம் நெய்ததாக — அதாவது பல அணிகளைக் கொண்ட  கவிதையை இயற்றியதாக — புகழ்பாடுகிறார்.

இதோ அமர கவியின் செய்யுள்,

அமர கவிரனர்த்யாம்  குர்வலங்கார ஸாராம்  படு பதல

பனீயாமேஷா சிஷ்டஸ்தவிஷ்டஹ

அசயதுரு குணார்க்கஹ ஸம்ருதா பிக்ஞ ஸம்க்ஞஹ  

க்ருதி குதுக மபீப்ஸுர் வாக்பதீம்  சித்ர வர்ணாம்

xxx

 பிராமணப் புலவர்கள்

விஜயநகர சாம்ராஜ்யப் பேரரசர் கிருஷ்ண  தேவராயர் அரசைவயில் எட்டு பிராமண அறிஞர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களுக்கு அஷ்ட திக் பாலகர்கள் என்று பெயர். அனைவரும் புலவர்கள். அவர்களுக்கு திப்புலேரு கிராமத்தை அக்ரஹாரமாக மன்னர் பரிசளித்தார் இது கி .பி. அல்லது பொது ஆண்டு 1440-ல் நடந்தது. எட்டு புலவர்களின் தலைவர் அல்லாசானி பெத்தண்ணா . அவர்தான் ஆந்திர கவிகளின் பிதாமகர்.

இது புதிதல்ல. சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து பாடிய பிராமணப் புலவர்கள் அனைவருக்கும் சேர மன்னர்கள் பொற்காசுகளையும் கிராமங்களையும் பரிசளித்த செய்தி உளது.

பல்லவ மன்னன் நந்திவர்மனின்  உதயேந்திரம் சாசனத்தை எழுதிய புலவன் பரமேஸ்வரனுக்கு பிரம்மதேயம் கிடைத்தது.

வேள்விக்குடி சாசனம் எழுதிய யுத்தகேசரிக்கு நில புலன்களும் வீடும் தானமாக அளிக்கப்பட்டது

உச்சலகல்ப  குடும்பத்தைச் சேர்ந்த மஹாராஜா ஜயநாத , கி.பி. 496-ல்  சவபாவ என்ற பிராமணப் புலவருக்கு அக்ரஹாரம் அளித்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

ஒரிஸ்ஸா மன்னன் இரண்டாம் கங்கவர்மனின் சாசன அதிகாரி காமதேவ ஸ ர்மனுக்கு கிடைத்த நில தானமும் கல்வெட்டில் உளது.  (கி.பி.1304)

கங்க வம்ச அரசன் இரண்டாம் பானு,  ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி நகரில் ரங்கதாச சர்மனுக்கு 1304ம் ஆண்டில் கொடுத்த அக்ரஹாரம் பற்றிய செய்தியும் கல்வெட்டிலிருந்து கிடைக்கிறது .

கங்க வம்ச அரசன் இரண்டாம் நரசிம்மன் அளித்த கொடையையும் ஆலல்பூர் சாசனம் அறிவிக்கிறது

Xxx subham xxxx

tags- பிராமணப் புலவர்கள், அமர கவி, அசலத, பரமத , குடிலோன்னதநட   நாட்டிய நாடகம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: