விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1 (Post.11192)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,192

Date uploaded in London – –    14 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

முதல் ஓசை நாளிதழில் வெளி வந்த எனது பழைய கட்டுரை இது.

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1

ச.நாகராஜன்

விண்யுகத்தின் பொன்னான காலம்!

சென்ற நூற்றாண்டில் ஆரம்பித்த விண்யுகம் ஆயிரமாயிரம் அதிசயங்களை விளைவித்து வருகிறது. நாளுக்கு நாள் முன்னேறி வரும் விண்ணியல் பல்வேறு விண்வெளிச் சங்கங்களைத் தோற்றுவித்து வருகிறது. செவ்வாய்க்கு உடனடியாகப் பயணப்பட வேண்டும் என விரும்பும் செவ்வாய் கிரக ரசிகர்கள் செவ்வாய் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். சந்திரனுக்குச் செல்ல விரும்புவோர் சந்திர சங்கத்தை – தி மூன் சொஸைடியை (The Moon Society) ஆரம்பித்துள்ளனர்.

சந்திர சங்கத்தின் தலைவர் கென் மர்பி

கென் மர்பி (Ken Murphy) என்பவர் பன்னாட்டு வங்கித் துறையில் 20 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். சந்திரன் மீது அடங்காத காதல் கொண்டவர். 2011ஆம் ஆண்டு மூன் சொஸைடி – சந்திர சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

சந்திரனைப் பற்றிய அனைத்தையும் ஆராய்வது, சந்திரனுக்கு பூமியிலிருந்து அன்றாட விமானப் பயணம் போன்ற விண்கலப் பயணத்தை மேற்கொள்வது, சந்திரனில் ஒரு மனித காலனியை  (குடியிருப்பை) அமைப்பது உள்ளிட்ட பல ஆர்வமூட்டும் விஷயங்களைக் குறிக்கோளாக்க் கொண்டது சந்திர சங்கம்.

சந்திரன் பற்றிய திரைப்படங்களைத் தொகுக்கும் பணியில் அதிக ஆர்வம் காட்டிய கென் மர்பி 87 படங்களைத் தொகுத்துள்ளார்.

ரசிகர்களை ஈர்த்த முதல் ஐந்து படங்கள்

நூற்றுக் கணக்கான தொலைக்காட்சித் தொடர்களும் ஏராளமான திரைப்படங்களும் விண்வெளியை மையமாக வைத்து கடந்த பல ஆண்டுகளில் வெளியாகி உள்ளன. அவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிகர்கள் மனம் மகிழ்கின்றனர். இவற்றில் தலை சிறந்த திரைப்படங்களாக உலகளாவிய அளவில் தேர்ந்தெடுத்த படங்கள் ஐந்து. அவை:-

  1. 2001: A Space Odyssey (2001:எ ஸ்பேஸ் ஒடிஸி)
  2. Planets (ப்ளனெடெஸ்)
  3. Gravity (க்ராவிடி)
  4. Voyage Dans La Lune (வாயேஜ் டான்ஸ் லா ல்யூன்)
  5. Star Caps (ஸ்டார் கேப்ஸ்)

இந்த ஐந்து படங்களையும் உலக ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்கின்றனர்.

விண்வெளிச்சாலை வழியே விண்கலங்கள் பறந்து பூமியைச் சுற்றும் போதும் சந்திரனை நோக்கிப் பயணப்படும் போதும் சந்திரனை அடையும் போதும் ஏற்படும் உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட திரைப்படங்கள் பல ரகமானவை. ஆரம்ப காலத் திரைப்படங்கள் கற்பனையை அடிப்படையாக்க் கொண்டவை. ஆனால் அறிவியல் முன்னேற முன்னேற, விண்கலங்கள் விண்வெளிச் சாலையில் சீறிப் பாய்ந்து வெற்றி முழக்கம் கொட்டக் கொட்ட வெளியாகிய திரைப்படங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தம்முள்ளே கிரகித்துக் கொண்டன!

எத்தனை எத்தனை திரைப்படங்கள்!

வேகமான ஒரு பருந்துப் பார்வையை இந்தத் திரைப்படங்களின் மீது வீசுவோமா!

வாயேஜ் டான்ஸ் லா ல்யூன் (Voyage Dans La Lune):- 1902ஆம் ஆண்டு வெளியான அற்புதமான படம் இது. பிரபல அறிவியல் புனைகதை நாவலாசிரியரான ஜூல்ஸ் வெர்ன் எழுதிய டீ லா டெரி அ லா ல்யூன்” என்ற கதையையும்  பிரபல ஆங்கில நாவலாசிரியரான ஹெச்.ஜி.வெல்ஸின் ஃபர்ஸ்ட் மென் இன் தி மூன் என்ற நாவலையும் பின்பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒரு விஞ்ஞானிகளின் குழு சந்திரனுக்கு ஒரு கலத்தை அனுப்ப முனைவதையும் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையும் சித்தரிக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட் நிறைந்த படம் என்று சொன்னால் நூறு வருடங்களுக்கு முன்பேயா ஸ்பெஷல் எபெக்ட் என நமது விழிகள் பிதுங்கும். திரைப்படத் துறையின் ஆரம்ப காலப் படம் என்பதால் இதற்கு வரலாற்றில் தனி மகிமை உண்டு!

உமன் இன் தி மூன் (Woman in the Moon):- 1929ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. சந்திரனில் தங்கம் தேடி அலையும் ஒரு விஞ்ஞானி பற்றிய கதை இது. பிரபல வானியல் விஞ்ஞானியான ஹெர்மன் ஓபர்த் என்பவரை ஆலோசகராகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். அந்தக் காலத்திலேயே அறிவியல் புனைகதை – ஸயிண்டிபிக் ஃபிக் ஷன் –ஆரம்பமாகி விட்டதைப் பறை சாற்றும் திரைப்படம்.

டெஸ்டினேஷன் மூன் (Destination Moon):- 1950இல் வெளியான படம் இது. சந்திரனில் இருக்கும் ஆதார வளங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பயணப்படும் கதை என்பதால் பொதுமக்கள் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட படம் இது. பிரபல எழுத்தாளர் ராபர்ட்                  ஏ. ஹெய்ன்லெய்ன் என்பவர் இதன் ஆலோசகர்.

ப்ராஜெக்ட் மூன்பேஸ் (Project Moonbase) :-1953இல் வெளியான படம் இது. சந்திரனில் முதல் தளம் அமைக்கப்படுவது தான் கதை. ராணுவ நோக்கிலான படம் இது. சிறப்பான காட்சிகள் ஏராளம் உண்டு.

ஸ்பேஸ்வேஸ் (Spaceways):- 1953ஆம் ஆண்டு வெளியான படம் இது. டிவி தொடர்களில் வரும் திகில் கதையின் அடிப்படையில் ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்ட படம் இது. ஹை-டெக் செட்டுகளுடன் அமர்க்களமாக வெளிவந்த படம்.

கேட் உமன் ஆஃப் தி மூன் (Cat-Women of the Moon):- 1953 ஆம் ஆண்டில் வெளியான படம் இது.அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சந்திரனுக்குச் செல்கின்றனர். அங்கு பெண்கள் மட்டுமே உள்ள ஒரு சந்திர நாகரிகத்தைக் கண்டு திடுக்கிடுகின்றனர்.

டிஸ்னி டுமாரோலேண்ட்: மேன் அண்ட் தி மூன் (Disney Tomorrowland: Man and the Moon):- 1955ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனை ஆய்வு செய்யும் போது என்ன நிகழும் என்பதை க்ரியேடிவாகக் கூறும் படம். இதில் வரும் அனிமேஷனைப் பார்த்தே பின்னால் வந்தவர்கள் அனிமேஷனைத் தங்கள் திரைப்படங்களில் புகுத்த ஆரம்பித்தனர்.

*********************   (தொடரும்)

புத்தக அறிமுகம் – 28

மாக்ஸ்முல்லர் மர்மம்!

பொருளடக்கம்

என்னுரை

1. இருவேறு கருத்துக்கள்

2. மாக்ஸ்முல்லரின் புகழுரை

3. மாக்ஸ்முல்லர் – ஒரு கால அட்டவணை

4. மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ்?

5. லார்ட் மெக்காலேயின் திட்டம்

6. மெக்காலே கொள்கை

7. மிஷனரிகளின் நோக்கம்

8. ஒரு கப் சாக்லட்

9. மாக்ஸ்முல்லரின் கடிதங்கள்

10. அன்புள்ள அம்மா!

11. மாக்ஸ்முல்லர் சம்ஸ்கிருதம் கற்றாரா?

12. 25 ஆண்டுகள் செய்த பணி

13. மாக்ஸ்முல்லர் மீதான குற்றச்சாட்டு

14. பணியில் திருப்தி இல்லை

15. பிரம்ம சமாஜத்தின் தோற்றம்

16. தேர்தலில் தோல்வி

17. பேராசிரியர் பதவி

18. இந்தியாவிற்குப் புகழாரம்

19. ஸ்வாமி விவேகானந்தருடன் சந்திப்பு

20. சாயணரே மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார்!

21. மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர்

22. மாக்ஸ்முல்லர் மர்மம்

23. ஆராய்ச்சி விளைவித்த சேதம்

24. தள்ளுவன தள்ளி கொள்வன கொள்வோம்

*

நூலில்  நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி:-

என்னுரை

மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் புகழ்ந்து கூறுவதைப் படித்து வந்த போது அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியதைப் பார்த்து மகிழ முடிந்தது.

ஆனால் அதே சமயம் ஆரியர் பற்றிய ஒரு கொள்கையை உருவாக்கி அது இந்தியாவின் பாரம்பரியப் பின்னணியையே தாக்கியதைக் கண்ட போது திகைக்க வேண்டி இருந்தது.

ஆகவே முழுமையான ஆய்வில் இறங்க மனம் துடித்தது. ஆராய ஆரம்பித்தேன்.

அந்த ஆய்வில் கண்ட உண்மைகளே இவை.

அன்பர்கள் அவரது ஆரியர் சம்பந்தமான கொள்கைகளைத் தள்ளி அவர் இந்தியாவைப் புகழாரம் சூட்டிப் போற்றுவதை மனதில் கொள்ள வேண்டும்.

மாக்ஸ்முல்லர் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்த திருப்தியில் என்னுடன் இணைய உங்களை இந்த நூல் வாயிலாக அழைக்கிறேன்.

இந்தக் கட்டுரைகளை இணையதளத்தில் ஒரு தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

பங்களூர்
ச. நாகராஜன்
மார்ச் 2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: