கல்வெட்டில் சொற்சிலம்பம்;  திரிபுவன பாலனின் கவிதைகள் (Post N.11197)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,197

Date uploaded in London – 15 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கெளட வம்ச அக்ஷபதாலிக அனந்தபாலநின் புத்ரன் த்ரி புவன பாலன்.

அவன் ஒரு சிறந்த கவிஞன். ரதன்பூர் கல்வெட்டுப் பாடல்களை இயற்றியவன் . கல்வெட்டின் காலம் பொ .ஆ அல்லது கி.பி.1163-64. இது  காலசூரி வம்ச இரண்டாம் பிருத்விதேவன் கீழ் அரசாண்ட பிரம்மதேவன் என்னும் சிற்றரசனின் புகழ் பாடும் பிரசஸ்தி ஆகும்.

சோமநாதர் கோவிலில் கல்வெட்டு இருக்கிறது. இதில் நல்ல நடையிலுள்ள 45 செய்யுட்கள் இருக்கின்றன. நறுமணம் மிக்க , நல்ல தெளிந்த நீர்நிலை போன்றவை என் கவிதைகள்; ஏரி  போல தெளிவும், ஆழமும் உடையவை. மேலும் கவிஞர்களின் மனதுக்கு திருப்தி தர வல்லவை என்று பாடல்கள் வருணிக்கப்படுகின்றன.

இதோ அந்தக் கவிதை ,

கண ரசவதீம் கபீராம் ஸ்வச்சதராம் கவி விசார ரமணீயாம்

ஸரஸீமிவ பிரசஸ்திம் த்ரிபுவனபாலோ வ்யதாத்வி புதஹ

பின்னர் அதை முத்துமாலைக்கு ஒப்பிடுகிறார்,

கல்வியிலும் கலையிலும் சிறந்த குமார பால இந்தச் செய்யுட்களை ஆர்வத்துடன் எழுத்தில் வடித்தார். அந்தக் கவிதைகள் முத்துமாலை போன்றது. வட்டவடிவில் முத்துக்கள் திரண்டது போல செய்யுட்களின் யாப்பு அணிகள் ஜொலிக்கின்றன. முத்து மாலை போல கவர்ச்சியும், பளபளப்பும் உடைய இந்தச் செய்யுட்கள் குணமும் மணமும் நிரம்பியவை.

ஹாராலீமிவ  ஸுவ்ருத்த குணாம் குணாட்யாம்

காந்த்யான்விதாம் கண ரச ப்ரகராம் பிரசஸ்திம்

XXX

அதர்வண வேத அறிஞனின் சொற் சிலம்பம்

சாளுக்கிய வம்ச இரண்டாம் விஷ்ணுவர்தனனின் மகனும், இந்திர பட்டாரகனின் பேரனுமான சர்வலோகாஸ்ரயனின் சேந்தளூர் செப்பேடுகளை அதர்வண வேத அறிஞர் பந்தேய சர்வோத்தம இயற்றியுள்ளார். இந்த இடம் ஆந்திராவில் நெல்லூரில் இருக்கிறது. கி.பி. அல்லது பொது ஆண்டு 673ம் ஆண்டு சாசனமான இதில் ஒரு பிராமணனுக்கு நிலதானம் — பிரம்மதேயம் — செய்யப்பட்டது குறிப்பிடப்படுகிறது.

மன்னன் சர்வலோகாஸ்ரயனின் வீரத்தையும் அரசாண்மையையும் புகழ வந்த கவிஞன், ஸம்ஸ்க்ருத மொழிக்கே உரித்தான  நீண்ட கூட்டுச் சொற்றொடர்களைப் (Compound words)  பயன்படுத்தியுள்ளார் :

நிஜபுஜபராக்ரமாவநமி தானைகசத்ருஸாமந்தாதீதத் விரதபதிமத தாராபிஷேககர்தமிதஸப்தன் ஹதசுரபிராம்யங்கணோபவிஷ்டாநைகராஜன்யாமித     

இது ஒரு சொல். சம்ஸ்க்ருதத்தில் இப்படிச் சொற்களை இணைத்துக் கூட்டுச் சொல் உண்டாக்குவதுண்டு. உலகில் இவ்வளவு நீண்ட கூட்டுச் சொற்களை வேறு மொழியில் காண்பது அரிது.

அவரே சொல்லும் வேறு ஒரு நீண்ட சொல் தொடர்,

ஸமிதி கோலாஹலீபூதராஜத்வாரஹ மதாலஸமதகாமினீ ஜனகணபயோதராவலுப்ய மானக்துங்குங்துமபங்காவசேஷ சோபித கனக கிரிசிலா விசாலவக்ஷஹஸ்தலஹ

இது இன்னும் ஒரு சொல் அல்லது கூட்டுச் சொல் ஆகும்.

xxxx

நரவர்மனின் 58 கவிதைகள்

பரமார  வம்ச அரசன் நர வர்மன் பொது ஆண்டு (கி.பி.) 1094 முதல் 1133 வரை மால்வா பிரதேசத்தை ஆண்டான். அவனுடைய தந்தை பெயர் உதயாதித்ய; சகோதரனின் பெயர் லக்ஷ்மண தேவ .மன்னரின் பட்டப் பெயர் நிர்வாண நாராயண இவருடைய சாசனம் நாகபுரி மியூனஸியத்தில் உளது. . மன்னரின் வம்சாவளியைப் புகழ்ந்துரைத்த பின்னர் தானே கட்டிய கோவிலுக்கு தேவதானமாக மூன்று கிராமங்களை தானம் கொடுத்ததை கல்வெட்டு விவரிக்கிறது பல்வேறு யாப்பு அணிகளில் இயற்றப்பட்ட 58 செய்யுட்கள் இது பற்றிப்  பாடுகின்றன.

கவிதைகள் பாரதீ  (சரஸ்வதீ) வணக்கத்துடன் துவங்குகின்றன.

ப்ரஸாதெள தார்யமா தர்ய ஸமதாதயஹ

யுவயோர்யே குணாஹா ஸந்தி வாக்தேவ்யெள  தேஅபி ஸந்து நஹ

பின்னர் தன் கவிதைகளைப் படிப்போருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்,

ஹம் ஹோ புதாஹா  ஸாது ஸமுத் ஸஹத்வம்

குசா ப்ரக ல்யாம் ச தியம்  விதத்வம்

மத்யஸ்த பாவம் ச  ஸமாச்ர யத்வம் ஸுகம் ச நஹ

ஸு க்தி  சுதாமுபாத்வம்

ஓஓ அறிவாளிகளே !! நன்றாக முயற்சி செய்து உங்கள் அறிவினை தர்ப்பைப் புல்லின் நுனி போல கூராக்குங்கள் . நடுநிலை நின்று தீர்ப்புச் சொல்லுங்கள் தேன் போன்ற கவிதைகளுக்கு மகிழ்ச்சியோடு தீர்ப்புச் சொல்லுங்கள்.

இதில் அபூர்வமாகக் காணப்படும் சொற்பிரயோகங்கள் காணப்படுகின்றன.

செய்யுள் 56 , மன்னர் யாத்த மேலும் பல கவிதைகளைக் குறிப்பிடுகின்றன . ஆனால் அவை நமக்கு கிடைத்தில.

XXX

–subham—

Tags- ரதன்பூர் , செப்பேடு, நர வர்மன், அதர்வண , வேத அறிஞர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: