Post No. 11,198
Date uploaded in London – – 16 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 3
ச.நாகராஜன்
ஏராளமாக உள்ள விண்வெளி பற்றிய திரைப்படங்களில் மேலும் சிலவற்றைக் காண்போம்:
இன் லைக் ஃப்ளிண்ட் (In Like Flint):- 1967ஆம் ஆண்டு வெளியான படம் இது. சூப்பர்-ஸ்பை படம் இது. பெண்கள் குழு ஒன்று உலகை அடக்கியாள விரும்பி ஸ்பேஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றி உலகையே பயமுறுத்துகிறது. கதாநாயகன் ஃப்ளிண்ட் உலகைக் காப்பாற்றுகிறார்.
தி ரிலக்டண்ட் அஸ்ட்ரானட் (The Reluctant Astronaut):- 1967ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். சோவியத் ரஷியாவின் விண்வெளிப் பயணத்தைத் தோற்கடிக்கும் வகையில் சிவிலியனாக உள்ள ஒரு விண்வெளி வீர்ர் விண்வெளிச் சாலையில் பறப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்தப் படம்.
மிஷன் ஸ்டார்டஸ்ட் ( Mission Stardust):- 1967ஆம் ஆண்டு வெளியான படம் இது.1961ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து பெர்ரி ரோடான் நாவல்கள் என அறிவியல் புனைகதைகளின் தொடர் ஒன்று வெளியானது. அதில் முதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. இதில் கதாநாயகன் சந்திரனுக்குச் சென்று பல விதமான புது தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் பிரபஞ்ச பயணத்தை மேற்கொள்கிறான்.
2001: எ ஸ்பேஸ் ஒடிஸி (A Space Odyssey) : 1968ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிக பிரமாதமான படம். சந்திரனை அடிப்படையாக்க் கொண்ட படங்களில் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தி எடுக்கப்பட்ட அருமையான படம் இது. மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட படமாக இது அமையவே ரசிகர்களை வெகுவாக இது கவர்ந்தது
மூன் ஜீரோ டூ (Moon Zero Two)- 1969ஆம் ஆண்டு வெளியான படம் இது. சுவாரசியமான கதையைக் கொண்ட படம் இது. 2021ஆம் ஆண்டில் மனிதர்கள் சந்திர குடியிருப்பில் குடியேறுகிறார்கள். மூன் சிடி மற்றும் ஃபார் சைட் 5 போன்ற குடியிருப்புகள் அங்கு தோன்றுகின்றன. ஹபார்ட் என்ற கோடீஸ்வரர் சந்திரனைச் சுற்றி 6000 டன் எடையுள்ள ஒரு விண்கல் சுற்றுவதைப் பற்றி அறிகிறார் அந்த விண்கல் சபைர் எனப்படும் நீல ரத்தினக்கல்லால் ஆனது. கோடானு கோடி விலை மதிப்பை உடையது. அவர் பில் கெம்ப் என்ற விண்வெளி வீர்ரிடம் அந்த விண்கல்லைக் கைப்பற்றித் தருமாறு கேட்கிறார் அதைச் சந்திரனின் இன்னொரு பக்கத்திற்கு பத்திரமாகக் கொண்டு சேர்க்குமாறு கெம்பை வேண்டிக் கொள்ள அது சட்டத்திற்கு விரோதமானது என்ற போதிலும் கூட கெம்ப் அதில் ஈடுபடுகிறார் இடையில் ஒரு அழகிய இளம் பெண் கெம்பின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். அவளது சகோதரன் உயிருடன் இருக்கிறானா என்பதை அறியுமாறு அவள் வேண்ட அதில் ஈடுபடும் போது ஹபார்டின் உண்மையான உள் நோக்கத்தை அறிகிறார் கெம்ப். நீலக்கல்லைக் கைப்பற்றி அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை அமைத்து விண்வெளியைத் தன் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்புவதே ஹபார்டின் உண்மையான நோக்கம். இந்த சூழ்ச்சியை அறிவதை கதை திறம்படச் சொல்கிறது.
மரூண்ட் (Marooned):- 1969ஆம் ஆண்டு வெளியான படம் இது.மூன்று விண்வெளி வீர்ர்கள் விண்வெளிச் சாலையில் கலம் பழுதுபடவே தனியாக விடப் படுகிறார்கள். அதைப் பற்றிச் சுவை படச் சொல்லும் படம் இது.
டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர்(Diamonds are for ever) :- 1971ஆம் ஆண்டு வெளியான பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படம் இது. வில்லன் எர்னஸ்ட் ஃப்ளோபீல்ட் உலகின் பல்வேறு இடங்களை ஒரே சமயத்தில் தாக்கி அழிக்க லேஸர் ராக்கெட்டுகளின் பயன்பாட்டிற்காக வைரங்களைச் சேர்க்கிறான். அதற்காக லாஸ் வேகாஸ் செல்கிறான். வைரம் பதித்த சாடலைட்டால் அமெரிக்காவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ராக்கெட், ரஷிய அணு ஆயுத சப்மரீன் ஆகியவற்றோடு சீன தளம் ஒன்றையும் அழிக்கிறான். பல சாகஸ செயல்கள் செய்து ஜேம்ஸ் பாண்ட் இறுதியில் வில்லனின் சதியை முறியடிக்கிறார்.
அபல்லோ காலம்
அமெரிக்கா விண்ணில் ஏவிய அபல்லோ விண்கலங்கள் உலகையே மாற்றி விட்டது. விண்வெளி பற்றிய பெரும் நம்பிக்கையை உலக மக்களிடையே அபல்லோ கலங்கள் ஏற்படுத்தின. இதையொட்டி திரைப்படங்களிலும் ஒரு புது மாறுதல் உருவானது.விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக ஆரம்பித்த காலத்தை அபல்லோ திரைப்படக் காலம் எனக் கூறலாம். மேலும் இந்த அடிப்படையிலான விண்வெளிச் சாலை படங்கள் சிலவற்றைக் காண்போம்:
மூன்பேஸ் 3 (Moonbase 3):- இது ஒரு தொலைக்காட்சித் தொடர். சந்திரனில் நாம் அமைக்க இருக்கும் தளம் எப்படி இருக்கும்? அது பற்றிச் சித்தரிக்கிறது இந்தத் தொடர்.
ஸ்பேஸ்: 1999 (Space:1999) 1975ஆம் ஆண்டு தொடங்கி இரு ஆண்டுகள் வெற்றி நடை போட்ட ஒரு தொடர் இது. சந்திரனை ரேடியோ-ஆக்டிவ் கழிவுகளால் நிரப்ப, அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை மையமாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர் இது. ஒரு தொடருக்கு இருபத்திநான்கு எபிசோடுகளைக் கொண்ட இரு தொடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிபரப்பப்படவே விண்வெளி பற்றிய ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமானது.
மூன்ரேகர் (Moonraker) : 1979ஆம் ஆண்டு வெளியான இன்னொரு பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படம் இது. ஸ்டார் வார்ஸ் தொலைக்காட்சித் தொடர் உலகெங்கும் ஏற்படுத்திய எழுச்சியைத் தொடர்ந்து வெளி வந்த படம் இது. ஒரு பேராசைக்கார வில்லன் உலகில் உள்ள அனைவரையும் ஒழித்துக் கட்டி விட்டு தன் இஷ்டப்படி ஆடும் ஒரு இனத்தை உருவாக்க முயல்கிறான். நாஸாவின் ஒரு விண்கலம் கடத்தப்படவே அதை ஆராய்வதற்காக ஜேம்ஸ் பாண்ட் அனுப்பப்படுகிறார். நரம்பு வாயு மூலமாக அனைவரையும் ஒழித்துக் கட்ட வில்லன் முயல்வதைக் கண்டு பிடித்த ஜேம்ஸ் பாண்ட் வழக்கம் போல பல சாகஸ செயல்களைச் செய்து உலகைக் காப்பாற்றுகிறார்.
******************* தொடரும்

புத்தக அறிமுகம் – 30
ஜென் காட்டும் வாழ்க்கை நெறி
பொருளடக்கம்
2. சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர்
3. தேராவாதம், மஹாயானம் தோன்றிய வரலாறு!
5. உலகப் போரின் போது அனைத்தையும் இழந்த சோகோ!
6. தோட்டத்தைப் பெருக்கு – முதல் பாடம்!
7. எல்லோர் முன்னிலையிலும் பேசத் தகுதியற்றவன்!
9. ஒரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது!
11. ஜென் மாஸ்டர் சொன்ன மூன்று உண்மைகள்!
18. இதோ, ஒரு கோப்பை டீ, எடுத்துக் கொள்ளுங்கள்!
19. இப்போது விழுகிறது ஒரு இலையுதிர்கால இலை!
20. சோடோ பிரிவை நிறுவிய டோஜென்!
24. மேலும் சில ஜென் கதைகள் – 2
25. மேலும் சில ஜென் கதைகள் – 3
26. மேலும் சில ஜென் கதைகள் – 4
27. வாழ்வையும் சாவையும் புரிந்து கொள்ளுங்கள்!
*
நூலுக்கு நான் வழங்கிய என்னுரை :
என்னுரை
உலகில் உள்ள அறிஞர்கள் முதல் சாமானியர்கள் வரை கண்டு வியக்கும் மதம் புத்த மதம். ‘அறிவால் அறிந்து நீயே கண்டு பிடி’ என்று அது சொல்வதால் அனைவருக்கும் உகந்த ஒன்றாக அது ஆகிறது.
புத்தமதத்தின் ஜென் பிரிவு சுவாரசியமான ஒரு பிரிவு. அதில் உள்ள ஆசார்யர்களின் கதைகளையும், கோயன்களையும் அனைவரும் படித்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து அவற்றைப் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
இளம் வயதிலிருந்தே புத்தர் பால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பின்னால் நான் நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்த போது தைவானில் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ பற்றிய தகவல் கிடைத்து தொடர்பு கொண்டேன். அங்கிருந்து எனக்கு புத்தரைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் இலவசமாகக் கிடைத்தன. நேர்த்தியான இந்தப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவுடன் கிடைத்தற்கரிய ஒரு பெரும் செல்வம் கிடைத்த மகிழ்ச்சி.
அந்தத் தொடரே உங்கள் கையில் இப்போது இந்த நூலாகப் பரிமளிக்கிறது.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிக்கான மந்திர நூல் இதோ உங்கள் கையில்! பிறகு என்ன, வெற்றி பெற வேண்டியது தானே!
பங்களூர்
ச. நாகராஜன்
20-12-21